Friday, August 25, 2017

Woman IPO official gets 1 year rigorous imprisonment for graft

PTI | Aug 24, 2017, 19:47 IST

Representative image. Representative image.
CHENNAI: A senior woman official of the Intellectual Property Office here was today sentenced to one year's rigorous imprisonment by a CBI court in a disproportionate assets case.

Special Judge S Natarajan convicted N D Kasturi, Deputy Registrar, Trade Mark, Intellectual Property Office, Chennai, of the charge that she possessed disproportionate assets of Rs 2.22 crore between April, 2000 and March, 2010.

TOP COMMENT  Hello Mr judge. Give me 2 crore... and put me behind bars for 1 year and take 25000 fine.. I am happy with the deal. What happened to the asset... Did u freeze.Murugadas Kannan

She could not give any satisfactory explanation for the assets during the investigation, the judge held.
A charge sheet was filed by the Central Bureau of Investigation (CBI) and on completion of the trial, Kasturi was sentenced to undergo rigorous imprisonment of one year, and slapped with a fine of Rs 25,000, a CBI release said.
மெட்ரோ ரயில் பயணம் 20% கட்டண சலுகை
பதிவு செய்த நாள்25ஆக
2017
01:04

சென்னை: மெட்ரோ ரயில் பயணத்திற்கு, 20 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்கா; விமான நிலையத்தில் இருந்து, சின்னமலைக்கும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் போக்குவரத்தில், தினசரி, 22 ஆயிரத்தில் இருந்து, 24 ஆயிரம் பயணியர் வரை பயணம் செய்கின்றனர்.
பண்டிகை நாட்களையொட்டி, மெட்ரோ ரயில்களில் பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில், இன்று முதல், அக்., 31ம் தேதி வரை, 20 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

இதனால், விமான நிலையத்தில் இருந்து, நேரு பூங்காவிற்கு, 48 ரூபாய்; பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்காவிற்கு, 40 ரூபாய்; கோயம்பேட்டில் இருந்து, நேரு பூங்காவிற்கு, 32 ரூபாய்; விமான நிலையத்தில் இருந்து சின்னமலைக்கு, 32 ரூபாய் கட்டணத்தில், சென்று வரலாம்.
'க்யூரேட்டிவ்' மனு: சசிகலாவின் கடைசி ஆயுதம்

'மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடைசியாக, 'க்யூரேட்டிவ்' மனு தாக்கல் செய்ய, சசிகலாவுக்கு வாய்ப்பு உள் ளது. அதிலும், அவருக்கு நிவாரணம் கிடைக் குமா என்பது சந்தேகமே' என, சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.




சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, பெங்க ளூரு சிறப்பு நீதிமன்றம் விதித்தது. ஜெ., மரணத்தை தொடர்ந்து, ஜெ., மீதான மேல் முறையீட்டு வழக்கை கைவிட்டு, மற்றவர் களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, சசி கலா உள்ளிட்ட மூவரும், உச்ச நீதிமன்றத்தில்

மனுக்கள் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான, பி.சி.கோஷ் ஓய்வு பெற்று விட்டார். அதனால், வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி அமித்வ ராய் உடன், நீதிபதி பாப்டே அமர்ந்து, மறு ஆய்வு மனுவை விசாரித்தார்.

'உச்ச நீதிமன்ற உத்தரவில், எந்த தவறும்இருப்பதாக தெரியவில்லை; மறு ஆய்வு கோரிய மனு, தள்ளு படி செய்யப்படுகிறது' என, உச்ச நீதி மன்றம், நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்ததாக, கடைசி வாய்ப்பாக, இறுதி நிவாரண மனுவாக கருதப்படும், க்யூரேட்டிவ் மனுவை தாக்கல் செய்ய முடியும். க்யூரேட்டிவ் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், உச்ச நீதிமன்றம் விதித் துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

தேவையான விபரங்கள், மனுவில் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது என்பதை, மூத்த வழக்கறிஞர் ஒருவர் உறுதி செய்ய வேண்டும். மனு, விசாரணைக்கு ஏற்பு உடையதா, இல்லையா என்பதை முடிவு செய்ய, நீதிபதிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு அனுப்பும் படி, தலைமை நீதிபதி உத்தரவிடுவார். அதன்பின், மூத்த நீதிபதிகள் மூவர் மற்றும் ஏற்கனவே வழக் கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு, க்யூரேட்டிவ் மனு அனுப்பப்படும்.

மனுவை விசாரிக்க வேண்டிய தேவை இருப் பதை, பெரும்பான்மை நீதிபதிகள் ஒப்புக் கொண்டால்,பின், ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதி களுக்கு, க்யூரேட்டிவ் மனு அனுப்பப்படும். வழக்கில் தகுதியில்லை என, நீதிபதிகள் கருதி னால், மனுதாரருக்கு, அபராதமும் விதிக்க முடியும்.

இது குறித்து, மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, 'மறு ஆய்வு மனுவே, பெரும் பாலும் நிலைக்காது; தள்ளுபடி தான் ஆகும். க்யூரேட்டிவ் மனுவை தாக்கல் செய்யலாம். 'அது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.மறு ஆய்வு மனுவை போலவே, க்யூரேட்டிவ் மனுவிலும், நிவாரணம் கிடைப்பது என்பது மிக மிக அரிது' என்றார். 

- நமது நிருபர் -
'நீட்' தேர்வுக்கு சிறப்பு ஆசிரியர்கள், கூடுதல் பயிற்சி: மாணவர்களை தயார்படுத்த ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்24ஆக
2017
23:53

சென்னை;'மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் மற்றும் கூடுதல் பயிற்சி வகுப்புகளை ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, விண்ணப்பம் அளிக்க உத்தரவிடும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்ற மாணவி மனு தாக்கல் செய்தார். 

மனுவை தள்ளுபடி செய்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற, மாநில அரசு எடுத்த முயற்சிகளில் குற்றம் காண முடியாது என்றாலும், கல்வியாண்டு துவக்கத்திலேயே, நீட் தேர்வை எதிர்கொள்ள, மாணவர்களை தயார்படுத்தி இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில், தகுந்த பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளை நடத்தியிருக்க வேண்டும்.தமிழகம் மட்டுமே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரியது. மற்ற மாநிலங்கள் எதுவும், விலக்கு கோரவில்லை. இதில், வேடிக்கை என்னவென்றால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் படிப்பறிவு உள்ளவர்கள் அதிகம் உள்ளனர்; அதிக எண்ணிக்கையில், கல்வி நிறுவனங்களும் உள்ளன.

பொருளாதார, கல்வி ரீதியாக பின்தங்கிய மாநிலங்களான, ஜார்க்கண்ட், ஒடிசா, பீஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கூட, நீட் தேர்வுக்கு விலக்கு கோரவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு பெற, தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்ததால், இந்த ஆண்டுக்கு விலக்கு கிடைத்து விடும் என, மாணவர்களும், பெற்றோரும் கருதியிருக்கலாம். அதனால், தேர்வுக்கு தயாராகாமல் இருந்திருக்கலாம். விலக்கு கோரும் அதே நேரத்தில், மாணவர்களையும், அரசு தயார்படுத்தியிருக்க வேண்டும். அதை, அரசு செய்யவில்லை.துவக்கத்திலேயே, மாநில அரசின் கோரிக்கையை, மத்திய அரசும் நிராகரிக்கவில்லை. நீட் தேர்வு விலக்கு குறித்து, சாதகமான நிலையை மத்தியஅரசு எடுத்ததாக, பத்திரிகைகளில் செய்தி வந்தன. 

பின், உச்ச நீதிமன்றத்தில் எதிர்மறையான நிலையை, மத்திய அரசு எடுத்தது. அதுவரை, நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்து விடும் என, மாணவர்கள் கருதினர். மத்திய அரசு நடந்து கொண்ட விதமும், இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம்.மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் தான் பொறுப்பு என, முதலில் இந்த நீதிமன்றம் கருதினாலும், பிரச்னையை ஆழமாக பரிசீலிக்கும்போது, மாநில அரசின் தவறுகளும் வெளிப்படுகிறது.தற்போதைய சூழ்நிலைக்கு, கீழ்கண்டவை காரணங்கள்:l பிளஸ் 1 பாடத்திட்டத்தை பயிற்றுவிக்காததால், அதில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பதிலளிக்க முடியவில்லை. பிளஸ் 2 பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டன; அதிகாரிகளும், இதை கவனிக்க தவறி விட்டனர்l நீட் தேர்வுக்காக, இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த பாடத்திட்டத்தை, கற்பிக்க தவறியதுl அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை, மாணவர்களுக்கு வழங்கி, அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த, அரசு மற்றும்தனியார் பள்ளிகள் தவறியதுl 10 ஆண்டுகளாக, பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, மாநில அரசு தவறியது.மருத்துவப் படிப்பில் கூடுதல் இடங்களை உருவாக்க, வழக்கறிஞர்கள் நீலகண்டன், வேல்முருகன், சூரியபிரகாசம் ஆகியோர் கோரினர். அப்படி ஒரு உத்தரவை, இந்த நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, இந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மாநில அரசு தான் பரிசீலனை செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கூடுதலாக, பயிற்சி வகுப்புகளை, அரசு துவங்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள், பெற்றோரின் மனநிலையில், இந்த நீதிமன்றம் அக்கறை கொள்கிறது. அவர்கள், மன உறுதியைஇழக்கக் கூடாது. உண்மை நிலையை புரிந்து, முன்னேற வேண்டும்.மாணவர்களும், பெற்றோரும், தவறான முடிவுகளை எடுக்க கூடாது. அவர்களுக்கு, அரசு ஆலோசனைகள் வழங்க வேண்டும். கல்வியாளர்களும், சினிமா பிரமுகர்களும், மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், அறிவுரைகளை வழங்க வேண்டும். நவீன பாடத்திட்டத்தின்படி, தகுந்த கல்வியை வழங்க, மாநில அரசு, அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். நீட் தேர்வில் அரசுக்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து, குறிப்பாக பள்ளி கல்விக்கு, அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என, இந்த நீதிமன்றம் நம்புகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமையே '
ஆதார்' வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி: 'ஆதார்' தொடர்பான வழக்கில், 'தனி மனித சுதந்திரம் என்பது, அரசி யலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமையே' என, உச்ச நீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.





பல்வேறு அரசு நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை குறிப்பிடுவதை கட்டாயமாக்கும்,மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அந்த மனுக்களில் கூறப்பட்டதாவது:

ஒருவரது தனிப்பட்ட விபரங்கள் என்பது, தனி மனித சுதந்திரம்; அது, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமை. ஆதார் பதிவுக்காக, மக்கள் அளித்துள்ள தங்களின் தனிப்பட்ட ரகசியங்கள், தகவல்களை, தனியார் பயன்படுத்த, மத்திய அரசு அனுமதி அளிப்பது, தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல். அதனால், தனியாருக்கு தகவல்கள் அளிக்க தடை விதிக்க வேண்டும்.

தனி மனித சுதந்திரத்தை மீறும் செயல் என்பதால், ஆதாரை கட்டாயமாக்குவதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவற்றில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை, மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்தது; பின், ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து, 'தனி மனித சுதந்திரம் அடிப்படை உரிமையா' என்ற வழக்கு, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.இது தொடர்பாக நடந்த விசாரணைகளுக்கு பின், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான, ஒன்பது நீதிபதிகள் அரசியலமைப்பு சட்ட அமர்வு, நேற்று தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே,

ஆர்.கே.அகர்வால், ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.சப்ரே, டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அமர்வு, ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளது. 'தனி மனித சுதந்திரம் என்பது, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமை. 'அரசியலமைப்பு சட்டத்தின், 21வது பிரிவு மற்றும் பாகம் - 3 ஆகியவை அளிக் கும், வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றுடன் உள் ளார்ந்த ஒரு பிரிவே, தனி மனித சுதந்திரம்' என, உச்ச நீதிமன்ற அமர்வு, தன் தீர்ப்பில் கூறிஉள்ளது.

தனி மனித சுதந்திரம் தொடர்பாக, எம்.பி., சர்மா வழக்கில், எட்டு நீதிபதிகள் அமர்வு, 1950லும், கரக்சிங் வழக்கில், ஆறு நீதிபதிகள் அமர்வு, 1960லும் அளித்த, 'தனிமனித சுதந்திரம் என்பது, அடிப்படை உரிமை இல்லை' என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை, தற்போதைய தீர்ப்பு ரத்து செய்கிறது.இந்த தீர்ப்பை அடுத்து, 'ஆதார் தனி மனித உரிமையை மீறுகிறதா' என்ற முக்கிய வழக்கின் விசாரணை, ஐந்து நீதிபதி கள் அமர்வில் தனியாக நடக்கும்.

அவசர ஆலோசனை

உச்ச நீதிமன்ற தீர்ப்பு, 'ஆதார்' அடையாள அட்டை யில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து, மத் திய அரசு ஆலோசனை நடத்தியது.தீர்ப்பு வெளி யான உடனேயே, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, பிரதமரின் முதன்மை செயலர் நிரிபேந்திர மிஸ்ரா சந்தித்து பேசினார். அதன்பின், இருவரும், நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே, ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அரசு வரவேற்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:'ஆதார்' மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்த போது, அரசு கூறியவற்றை, இந்த தீர்ப்பு உறுதி செய்கிறது. தனி மனித சுதந்திரம் என்பது, உரிமையாக இருந்தாலும், அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை என்ற அரசின் நிலைப்பாட்டையே, இந்த தீர்ப்பும் கூறுகிறது.

கண்காணிப்பின் மூலம் நசுக்க பார்க்கும் கொள்கை யை, பா.ஜ., கொண்டுள்ளதாக, காங்., கூறுவது வேடிக்கையாக உள்ளது. 'எமர்ஜென்சி' காலத்தின் போது, தனி மனித சுதந்திரம் எப்படி காக்கப்பட்டது
என்பது, அனைவருக்கும் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.

புது யுகத்தின் துவக்கம்!

தனி மனித சுதந்திரம், அடிப்படை உரிமையே என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பின் மூலம், சாமானியர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளது; இது, தனி மனித சுதந்திரத்திற்கான,புது யுகத்தின் துவக்க மாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சோனியா, தலைவர், காங்.,

மத்திய அரசுக்கு பின்னடைவு!

உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு களில், இதுவும் ஒன்று. 'ஆதார்' அட்டை விவகாரத்தில், மத்திய,பா.ஜ., அரசு கையாளும் நடைமுறைகள் தவறானவை என்பது. நிரூபணமாகி உள்ளது.

ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,

நீதி துறையினர் வரவேற்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, மூத்த வழக் கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலு மான, சோலி சொராப்ஜி கூறியதாவது:இது, மிகவும் முற்போக்கான, மக்களின் உரிமையை பாதுகாக்கும் தீர்ப்பு. ஒருமித்த தீர்ப்பு அளித் துள்ளதன் மூலம், மிகச் சிறந்த உதாரணத்தை, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. மக்கள் வேவு பார்க்கப்படுவது தடுக்கப்படும்; இது, கொண்டா டப்பட வேண்டிய நாள்.

இந்த தீர்ப்பால், 'ஆதார்' ரத்தாகுமா என்பதை, தற்போதைக்கு கூற முடியாது. முழு தீர்ப்பை யும் படித்தால் தான் கூற முடியும். அதே நேரத் தில், ஆதாரை முழுமையாக ரத்து செய்ய முடி யாது. எந்த ஒரு உரிமையும், முழுமையான உரிமையல்ல;சில கட்டுப்பாடுகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.'

'இந்த தீர்ப்பை வர வேற்கிறோம். மத்திய அரசின் நிலைப்பாட்டையே, இது உறுதி செய்கிறது. மற்ற அடிப்படை உரிமைகளை போலவே, தனி மனித சுதந்திரமும், முழுமை யான உரிமையல்ல. அதற்கு, சில கட்டுப்பாடு கள் உள்ளன,'' என, பா.ஜ., செய்தித் தொடர்பாள ரும், வழக்கறிஞருமான, அமன் சின்ஹா கூறினார்.
ரயில்வே வேலை போலி அறிவிப்பு

பதிவு செய்த நாள்25ஆக
2017
04:14

மதுரை: 'ரயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி காலியாக இருப்பதாக வெளியான அறிவிப்பு போலியானது' என ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிக்கை: வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த அறிவிப்பு பொதுமக்களை தவறான திசையில் இட்டு செல்கிறது. இந்த அறிவிப்பு போலியானது என அதில் தெரிவித்துள்ளது.
தங்கத்தை கூழாக்கி நூதனமாக கடத்தல்
பதிவு செய்த நாள்25ஆக
2017
01:05


சென்னை: மலேஷியாவில் இருந்து, நுாதன முறையில் தங்க கடத்தலில் ஈடுபட்டவரிடம், சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவான, ஏ.ஐ.யு., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேஷியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில்இருந்து, 'மலேஷியன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று காலை, 10:30 மணிக்கு, சென்னை வந்தது. இதில் வந்த அப்சல்கான் என்பவரை, சந்தேகத்தில், ஏ.ஐ.யு., அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரிடம், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்திலான ரசாயன கலவை இருந்தது. அதை சோதனை செய்தபோது, நைட்ரிக் அமிலம், ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில், தங்கக் கட்டிகளை கூழாக்கி, திரவ நிலையில், கலந்திருப்பது தெரிய வந்தது. இந்த கலவையில் இருந்து, 10 மணி நேரம் போராடி, 177 கிராம் தங்க பொடி மற்றும் கைப்பையில் இருந்த, 217 கிராம் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு, 6.31 லட்சம் ரூபாய்.

இதுகுறித்து, ஏ.ஐ.யு., அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை விமான நிலையத்தில், இதுபோன்று திரவ நிலையில் தங்கத்தை கடத்தி வந்து, சிக்குவது இதுவே முதல் முறை. 

அவரிடமிருந்து, 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஆறு, லேப் - டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சிக்கிய, அப்சல்கானிடம், விசாரணை தொடர்கிறது' என்றனர்.

NEWS TODAY 10.07.2026