Friday, August 25, 2017

தங்கத்தை கூழாக்கி நூதனமாக கடத்தல்
பதிவு செய்த நாள்25ஆக
2017
01:05


சென்னை: மலேஷியாவில் இருந்து, நுாதன முறையில் தங்க கடத்தலில் ஈடுபட்டவரிடம், சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவான, ஏ.ஐ.யு., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேஷியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில்இருந்து, 'மலேஷியன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று காலை, 10:30 மணிக்கு, சென்னை வந்தது. இதில் வந்த அப்சல்கான் என்பவரை, சந்தேகத்தில், ஏ.ஐ.யு., அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரிடம், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்திலான ரசாயன கலவை இருந்தது. அதை சோதனை செய்தபோது, நைட்ரிக் அமிலம், ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில், தங்கக் கட்டிகளை கூழாக்கி, திரவ நிலையில், கலந்திருப்பது தெரிய வந்தது. இந்த கலவையில் இருந்து, 10 மணி நேரம் போராடி, 177 கிராம் தங்க பொடி மற்றும் கைப்பையில் இருந்த, 217 கிராம் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு, 6.31 லட்சம் ரூபாய்.

இதுகுறித்து, ஏ.ஐ.யு., அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை விமான நிலையத்தில், இதுபோன்று திரவ நிலையில் தங்கத்தை கடத்தி வந்து, சிக்குவது இதுவே முதல் முறை. 

அவரிடமிருந்து, 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஆறு, லேப் - டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சிக்கிய, அப்சல்கானிடம், விசாரணை தொடர்கிறது' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.07.2026