Sunday, August 6, 2017


நாளை சந்திர கிரகணம்: 2 மணி நேரம் நீடிக்கும்




வரும் திங்கள்கிழமை (ஆக. 7) இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பூரண கிரகணம் அல்ல என்றும் சந்திரன் பகுதியளவே மறைந்து காட்சியளிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் காணலாம் என்று தெரிவித்த வானிலை ஆராய்ச்சியாளர்கள், ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் சந்திர கிரகணம் தோன்றும் என்றனர். அதேவேளையில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இந்த நிகழ்வு நடைபெறும் நேரமானது பகல் வேளையாக இருக்கும் என்பதால் அங்கு கிரகணத்தைக் பார்க்க முடியாது. 

இந்தியாவைப் பொருத்தவரை, சந்திர கிரகணத்தைக் காண மும்பை, சென்னை, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக, நிலவின் மீது பட வேண்டிய சூரியக் கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகிறது. அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது படர்வதால் இருள் சூழ்ந்தது போன்று சந்திரன் காட்சியளிக்கும். சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

இந்நிலையில், வரும் 7-ஆம் தேதி தோன்றும் கிரகணம் குறித்து கொல்கத்தா பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் தேவிபிரசாத் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் சந்திர கிரகணம் ஒன்று தோன்றியது. ஆனால், அப்போது பூமியின் நிழலின் ஊடே நிலா கடந்து செல்லாமல் அதன் புற வெளியில் கடந்து போனது. இதனால், அந்த கிரகணத்தை காண இயலவில்லை.

இந்நிலையில், வரும் திங்கள்கிழமையன்று நிகழப் போகும் சந்திர கிரணகத்தின்போது பூமியின் பகுதியளவு நிழல் நிலவின் மீது படரும். எனவே, அதனை நம்மால் காண முடியும். அன்றைய தினம் இரவு 10.20 மணிக்கு தோன்றும் கிரகணம் நள்ளிரவு 12.05 வரை நீடிக்கும் என்றார் அவர்.

Dailyhunt

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...