Tuesday, August 22, 2017

மானாமதுரை வைகை ஆறு மேம்பாலம்சேதம்:அதிர்வால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பதிவு செய்த நாள்22ஆக
2017
01:29

மானாமதுரை:மானாமதுரை வைகை ஆறு பாலம் சேதமடைந்துள்ளதால் ஏற்படும் அதிர்வால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.மானாமதுரையில் வைகை ஆறு ஊருக்கு நடுவே தெற்கிலிருந்து வடக்கே செல்கிறது. ஊருக்கு நடுவே ஆறு செல்வதினால் இந்த கரையிலிருந்து அந்த கரைக்கு செல்வதற்காக அப்போது மேம்பாலங்கள் கட்டப்பட்டன. நாளடைவில் வாகனங்கள் செல்லும் பாலம் மிகவும் சேதமடைந்ததை ஓட்டி கடந்த 1980ம் ஆண்டு அண்ணாத்துரை சிலை அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு அந்த பாலத்தின்வழியாக தற்போது வரை வாகனங்கள் சென்று வருகின்றன.
மேம்பாலம் கட்டப்பட்டு 37 வருடங்கள் கடந்து விட்டதால் தற்போது பாலத்தில் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள்,லாரிகள் செல்லும் போது பாலத்தில் இருந்து அதிர்வு ஏற்படுகிறது. மேலும் பாலத்தின் கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுந்து உள்ளே இருக்கும் இரும்புகம்பிகள் வெளியே நீட்டி கொண்டிருக்கின்றன.நடைமேடையில் உள்ள சிலாப்கள் பெரும்பாலும் உடைந்து கிடப்பதால் அதில் நடக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் அதில் நடப்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர். 

பாலத்திற்கு கீழே துாண்களுக்கு கீழே எப்போதும் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கிகிடப்பதால் துாண்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது,மேலும் துாண்களுக்கு அருகில் பள்ளம் தோண்டி அந்தப்பகுதியில் மணல் அள்ளி வருவதாலும் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.இந்நிலையில் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் சிமென்ட் பூச்சு உதிர்ந்து வருகின்றன. பாலத்தின் மேற்புறம் இணைப்பு பகுதியில் அடிக்கடி பிளவும் ஏற்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டப்பட்டு 37 வருடங்கள் கடந்து விட்டதால் அதிகாரிகள் விபத்துகள் ஏற்படுவதற்கு முன் உடனடியாக மராமத்து பணிகளை துவக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக ஆர்வலர் சங்கரசுப்பிரமணியன் கூறியதாவது:தற்போது மேம்பாலத்தின் கைப்பிடி சுவர்கள் அனைத்தும்சிமென்ட் கலவை உதிர்ந்து கம்பிகள் நீட்டி கொண்டிருக்கின்றன.மேலும் நடைமேடையில் ஆங்காங்கே பள்ளம்,பள்ளமாக உள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடிவதில்லை என்றார். 

தனியார் கம்பெனி தொழிலாளி பிரபு கூறியதாவது: பாலத்தில் டூவீலரில் செல்லும் போது கனரகவாகனங்கள் வந்தால் பாலத்தில் அதிர்வு ஏற்படுவதால் பாலத்தில் செல்ல அச்சமாக உள்ளது.மேலும் பாலத்தில் மின்விளக்குகள் பலநாட்கள் இரவு நேரங்களில் எரியாமல் இருப்பதினால் நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...