Tuesday, August 22, 2017

மதுரை காமராஜ் பல்கலையில் யு.ஜி.சி., குழுவினர் ஆய்வு
பதிவு செய்த நாள்22ஆக
2017
00:29

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் 'துாய்மை இந்தியா' திட்டம் குறித்து யு.ஜி.சி., எனும் பல்கலை மானிய குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. 'துாய்மை இந்தியா திட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் பங்கேற்கலாம்' என அழைப்பை அடுத்து பல்கலை சார்பில் விண்ணப்பிக்கப் பட்டது. இதையடுத்து யு.ஜி.சி., குழு உறுப்பினர்களான ஐதராபாத் உஸ்மானியா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சத்யநாராயாணா, ஆந்திரா ஸ்ரீசைலம் அரசு கல்லுாரி முன்னாள் முதல்வர் நாகேஸ்வரராவ், ஐதராபாத் யு.ஜி.சி., கணக்கு அதிகாரி ராயப்பா ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை, குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை, பசுமை வளாகம் பராமரிப்பு, விடுதி வசதி குறித்து ஆய்வு செய்தனர்.

பதிவாளர் சின்னையா, தேர்வாணையர் ஆண்டியப்பன், தொலைநிலை கல்வி இயக்குனர் கலைசெல்வன், சிண்டி கேட் உறுப்பினர்கள் விஜயரங்கன், லில்லிஸ் திவாகர், ராமகிருஷ்ணன், ராஜ்குமார், புலத் தலைவர்கள், பேராசிரியர்கள் சந்திரசேகர், புஷ்பராஜன், பி.ஆர்.ஓ., அறிவழகன் பங்கேற்றனர்.இன்று (ஆக., 22) காரைக்குடி அழகப்பா பல்கலையில் இக்குழு ஆய்வு மேற்கொள்கிறது.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...