Monday, September 4, 2017

அனிதா தற்கொலை : தமிழிசை சந்தேகம்
பதிவு செய்த நாள்04செப்
2017
06:35

சென்னை: ''அனிதாவின் தற்கொலை பின்னணியில், அரசியல் சூழ்ச்சி உள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: மாணவி அனிதாவை இழந்தது, மிகப்பெரிய துயரம்; அதை, எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது. வறுமையுடன் போராடி சாதித்த அந்த குழந்தையை, 'நீட்' தேர்வு போராட்டத்துக்காக, டில்லி வரை அழைத்து சென்றுள்ளனர். 'ஒரு வேளை, நீட் தேர்வில் மருத்துவம் கிடைக்காமல் போனால் விவசாயம் படிப்பேன்' என, அனிதா கூறியிருந்தார். துணிச்சலும், தைரியமும் நிறைந்த அவர், திடீரென தற்கொலை செய்து கொண்டதில், அரசியல் சூழ்ச்சி உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும். 'நீட்' தேர்வை சந்திக்க மாணவர்கள் தயாராக உள்ளனர்; அவர்களை தயார்படுத்துங்கள். சர்வதேச அளவில் மருத்துவ துறை சவாலான துறையாக உருவெடுத்துள்ளது. அதை எதிர் கொள்ளும் தகுதியை மாணவ, மாணவியரும் வளர்த்துக் கொள்வது அவசியம். மாணவர்களின் வாழ்க்கையை, பகடைக் காயாக்கி, தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள துடிக்கும், சுயநல அரசியல் வாதிகளை,
தமிழக மக்கள் அடையாளம் காண வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும், பிரதமர் மோடியை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...