Sunday, September 10, 2017

மின் பயன்பாடு கணக்கு: நுகர்வோருக்கு கூடுதல் சுமை

பதிவு செய்த நாள்09செப்
2017
20:12


மின் பயன்பாடு கணக்கு எடுப்பதில், ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதால், நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடு, கடை உள்ளிட்ட தாழ்வழுத்த இணைப்புகளில், இரு மாதங்களுக்கு ஒருமுறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கின்றனர். கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும்; இல்லையெனில், அபராதத்துடன் செலுத்த வேண்டும்.

பல ஊழியர்கள், மின் பயன்பாடு கணக்கு எடுக்க, முறையாக செல்வதில்லை. இதனால், நுகர்வோர், அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.இது குறித்து, மின் நுகர்வோர் கூறியதாவது:மின் பயன்பாடு கணக்கு எடுக்க, குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு, ஊழியர்கள் சரியாக வருவதில்லை. அந்த விபரம் தெரியாததால், பலர் மின் கட்டணம் செலுத்துவதில்லை.திடீரென வந்து, நான்கு மாத கட்டணத்தை செலுத்துமாறு, ஊழியர்கள் கூறுகின்றனர். கணக்கு எடுக்காதது, ஊழியரின் தவறு. ஆனால், தாமதமாக செலுத்துவதாகக் கருதி, மின் வாரியம், அபராதத் தொகை வசூலிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது:வீட்டு மின் இணைப்பு எண்ணிக்கை, இரண்டு கோடியை எட்டியுள்ளது. ஆனால், ஊழியர் எண்ணிக்கை, 10 ஆயிரத்திற்கும் குறைவு. மின் பயன்பாடு கணக்கு எடுக்க செல்லும் போது, பலர் வீடுகளில் இருப்பதில்லை. இதற்கு தீர்வு காண, மின் மீட்டரில், 'சிப்' பொருத்தி, அலுவலக, 'சர்வர்' உடன் இணைக்க வேண்டும்.இதன் வாயிலாக, மின் கட்டணம் செலுத்தும் தேதி வந்ததும், அந்த விபரத்தை, நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்க முடியும். இத்திட்டத்தை, விரைவாக துவக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...