Sunday, September 10, 2017

அரசு பஸ் ஊழியர்கள் 24 முதல் 'ஸ்டிரைக்'
பதிவு செய்த நாள்09செப்
2017
22:26

சென்னை, அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள், 24ம் தேதிக்கு பின், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துஉள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், 2.4 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் நிர்ண யிக்கப்படுகிறது. அதன்படி, 12வது ஊதிய ஒப்பந்தம், 2016 ஆகஸ்டில் முடிந்தது. இதுவரை, 13வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை, பல்லவன் இல்லத்தில், அதிகாரிகள் அடங்கிய துணைக் குழுவினர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.அதில், எந்த முடிவும் எடுக்கப்படாததால், போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், வேலை நிறுத்தம் செய்யப் போவதாக, அரசுக்கு, 'ஸ்டிரைக் நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

அதில், கூறப்பட்டுஉள்ளதாவது:அரசு போக்குவரத்து கழகங்கள், நிதிப் பற்றாக்குறையில் உள்ளன. அதனால், காலாவதியான பஸ்கள் தான், அதிகளவில் இயக்கப்படுகின்றன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஆயுள் காப்பீடு, அஞ்சல் காப்பீடு, கூட்டுறவு
சங்கங்களுக்கான பிடித்தம் உள்ளிட்ட, 5,500 கோடி ரூபாயை, நிர்வாகம் செலவு செய்து விட்டது; தற்போதும் செலவு செய்து வருகிறது.
செலவு செய்த தொகையை வழங்குவது,போக்குவரத்து கழகத்தின்
நஷ்டத்தை ஏற்பது, 13வது ஊதிய ஒப்பந்தத்தை நிறை
வேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசுக்கு பலமுறை
தெரிவித்துள்ளோம். அவற்றுக்கு தீர்வு காண, அரசு, இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மேலும், சிறிய தொழிற்சங்கங்களை இணைத்து, அரசுக்கு சாதக
மான வகையில், ஊதிய ஒப்பந்தத்தை முடிவு செய்ய, அரசு திட்டமிடுகிறது. அதுபோன்ற சங்க நிர்வாகிகளுக்கு, சலுகை காட்டுகிறது. அதனால், வரும், 24ம் தேதியிலோ, அதற்கு பின் வேறு தேதியிலோ, வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானித்துஉள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...