Sunday, September 10, 2017

ஊட்டியில், 'செர்ரி' பழம் வாங்குவோர் உஷார்!
பதிவு செய்த நாள்09செப்
2017
20:16



ஊட்டி,:ஊட்டி சுற்றுலா மையங்களில், சாயம் கலந்த களாக்காயை, 'செர்ரி' பழம் எனக் கூறி, வியாபாரிகள் விற்பது, அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிந்தது.நீலகிரி மாவட்டம், ஊட்டி - கூடலுார் சாலையில் உள்ள தலைக்குந்தா, பைக்காரா உட்பட சுற்றுலா பகுதிகளில் உள்ள கடைகளில், ஊட்டி உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். பெரும்பாலான கடைகளில், செர்ரி பழம் என்ற பெயரில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்ட களாக்காயை பறிமுதல் செய்தனர்.உணவு பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் கூறியதாவது:செர்ரி பழங்கள் விலை உயர்ந்தவை; சிறிய ஆப்பிள் வடிவில் இருக்கும். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர், அவற்றை விரும்பி வாங்குகின்றனர். ஆனால், பெரும்பாலான கடைக்காரர்கள், விலை மலிவாக கிடைக்கும் களாக்காயை வாங்கி, அதனுள் இருக்கும் கொட்டையை அகற்றி விட்டு, சாயம் மற்றும் சர்க்கரை தண்ணீரில் ஊற வைத்து, பின், பாக்கெட்டில் அடைத்து, செர்ரி பழம் என விற்கின்றனர். எந்தவொரு சாயம் கலந்து பொருளை உண்டாலும், கொடிய நோய்கள் ஏற்படும்; குடல் பாதிப்பு வரும். எனவே, சுற்றுலா பயணியர் உஷாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...