Sunday, September 24, 2017

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் பெண் பலி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

பதிவு செய்த நாள்24செப்
2017
01:05

சென்னை, உடல் பருமனை குறைக்க, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண், பரிதாபமாக இறந்தார். தவறான சிகிச்சையே இறப்புக்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விசாரணை நடத்த தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், சோகிழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அழகேசன், 52. இவரது மனைவி வளர்மதி, 46; மகன், சதீஷ், 26; மகள்கள் சரண்யா, 25, சங்கீதா, 21 என, நான்கு பேரும் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தனர். இதில், வளர்மதி, 160 கிலோ; சதீஷ், 130 கிலோ; சரண்யா, 120 கிலோ,சங்கீதா, 90 கிலோவும் இருந்தனர்.

செயலிழந்து விடும்இவர்கள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, லைப் லைன் மருத்துவமனையில், எடை குறைப்பு சிகிச்சைக்கு ஆலோசனை பெற்றனர். 'உடல் எடை அதிகம் இருந்தால், இதயம் செயலிழந்து விடும்; உடல் குறைப்பு அறுவைச் சிகிச்சை பெறுவதுஅவசியம்' என, டாக்டர்கள் taரிவித்துள்ளனர்.ஒரு மாத பரிசோதனைகளுக்குப்பின், ஆக., 26ல், நான்கு பேருக்கும், அறுவை சிகிச்சை நடந்தது. வளர்மதிக்கு உடல் சீராகாததால், ஒன்பது முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திடீரென வளர்மதிக்கு, காய்ச்சல்ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை
பரிதாபமாக உயிரிழந்தார்.'தவறான சிகிச்சையே இறப்பிற்கு காரணம்' என, அவரது கணவர், அழகேசன், கீழ்ப்பாக்கம்போலீசில் புகார் செய்தார்.இதுகுறித்து, வளர்மதியின் மகள் சரண்யா
கூறியதாவது:

 'உங்கள் அம்மா இருக்கும் எடைக்கு, ஒரிரு ஆண்டுகள் தான் உயிருடன் இருப்பார். நீங்களும், 45 வயது வரை தான் உயிருடன் இருப்பீர்கள். உங்கள் உடல் பருமன் ஒருவித புற்றுநோய். அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும்' என, டாக்டர்கள் கூறினர்.

'நான்கு பேருக்கும் அறுவை சிகிச்சை செய்வதால், சலுகை தருகிறோம். மருந்துகளுக்கு, 80 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும்' எனக்கூறி, எங்களை அறுவை சிகிச்சை செய்ய சம்மதிக்க வைத்தனர்.

நான்கு பேருக்கும், தனித்தனியாக அறுவை சிகிச்சை செய்வதாக கூறிய டாக்டர்கள், ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தனர். இதனால், எங்கள் நான்கு பேருக்குமே உடல் நிலை மோசமானது. அம்மா எங்களை விட்டு பிரிந்து விட்டார்.திருமணமாகாத நிறைய பேர், உடல் குறைப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். என் அம்மாவின் மரணத்தை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்னொரு உயிர்பலி ஏற்பட்டு விடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணைக்கு உத்தரவு

இதுகுறித்து, அரசின், மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் சேவை இயக்குனர், பானு கூறியதாவது: உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, மருத்துவமனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இறந்த வளர்மதிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதா என, ஆய்வு செய்ய, டாக்டர்கள் கிருஷ்ணராஜ், கமலக்கண்ணன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்  பட்டுள்ளது.இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நுரையீரல் பாதிப்பு காரணமா

'லைப் லைன்' மருத்துவ குழும தலைவர், ஜெ.எஸ்.ராஜ்குமார் அளித்துள்ள விளக்கம்:

எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் உள்ள ஆபத்துகள் குறித்து விபரித்த பின், வளர்மதி, அவரது மூன்று பிள்ளைகளுக்கும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பெற்ற சில வாரங்களில், பிள்ளைகளின் எடை, 10 கிலோ குறைந்துள்ளது.வளர்மதி, சில ஆண்டுகளுக்கு முன், வேலூரில், தனியார் மருத்துவமனையில், செயற்கை சுவாச கருவி பொருத்தும் அளவுக்கு, ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த விவரத்தை குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை.வளர்மதிக்கு சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றி, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், எட்டு லட்சம் ரூபாய் நிதி, நன்கொடையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின், அவரது நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால், சுவாச பிரச்னை ஏற்பட்டது. நிபுணவத்துவம் வாய்ந்த, 18 டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி,மாரடைப்பால் வளர்மதி இறந்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாக்டர்கள் சொல்வது என்ன

அப்பல்லோ மருத்துவமனை உடல் பருமன் துறை நிபுணர், டாக்டர், ராஜ்குமார் பழனியப்பன் கூறியதாவது: உடல் பருமனை மூன்று விதமாக பிரிக்கலாம். மிதமான உடல் பருமன் உடையோர், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுபாடுகள் வழியாக குறைக்கலாம். அடுத்த நிலையில் இருப்போருக்கு, மருந்துகள் மூலம் தீர்வு காணப்படும். மூன்றாவதாக அதிக உடல் பருமன் உடையோருக்கு, ஒன்பது விதமான அறுவை சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு நோயாளிகளுக்கும், ஒவ்வொரு விதமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளிகள், ஓராண்டுக்கு தொடர்ந்து
டாக்டர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025