Wednesday, September 27, 2017

கரூர் மருத்துவ கல்லூரி வடிவமைப்பில் மாற்றம்

பதிவு செய்த நாள்26செப்
2017
20:02

போதிய நிலம் கிடைக்காததால், கரூர் மருத்துவக் கல்லுாரியின் வடிவமைப்பில், மாற்றம் செய்யும் பணி நடக்கிறது. கரூர் மாவட்ட மருத்துவமனை, 2014ல், மருத்துவக் கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்காக, 229 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதற்கான வரைபடங்களை, பொதுப்பணித் துறை தயாரித்தது. நிலம் அடையாளம் காண்பதில் ஏற்பட்ட பிரச்னையால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது, பொதுப்பணித் துறை வசம், 20 ஏக்கருக்கு குறைவான இடமே ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே, கட்டட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2025