Wednesday, September 27, 2017

நவராத்திரியில் பெண் குழந்தை பிறந்தால் இலவச மருத்துவம்

பதிவு செய்த நாள்26செப்
2017
21:24

தன்பாத்: 'நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, பெண் குழந்தைகளை பிரசவிக்கும் பெண்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை' என, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முடிவு செய்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர், ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

மத்திய அரசின், 'பெண் குழந்தைகளை காப்போம், பெண்களுக்கு கல்வி அளிப்போம்' பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், நவராத்திரியில், பெண் குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச சிகிச்சை வழங்க, தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முடிவு செய்துஉள்ளது.

இதுகுறித்து, அந்த மருத்துவமனையின் தலைவர், டாக்டர் அகர்வால் கூறியதாவது:

நவராத்திரி துவங்குவதற்கு முதல் நாளான, செப்., 21 முதல் எங்கள் மருத்துவமனையில், பெண் குழந்தைகளைபிரசவிக்கும் பெண்களிடம்எந்த வித கட்டணமும்வசூலிக்கவில்லை.

இதுவரை, 24 பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துள்ளோம்.
எங்கள் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு, குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய, பரிசு பெட்டி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2025