Sunday, September 10, 2017

மேலும் 4 விமான நிலையங்களில் கைப்பைகளுக்கு "டேக்' இல்லை

By DIN  |   Published on : 10th September 2017 03:35 AM  
கோவை, மேற்கு வங்க மாநிலத்தின், கொல்கத்தா, குஜராத் மாநிலத்தின், வதோதரா, மத்தியப் பிரதேச மாநிலத்தின், இந்தூர் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் உள்நாட்டுப் பயணிகளின் கைப்பைகளில் "டேக்' இனி இணைக்கப்பட மாட்டாது என்று விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநர் குமார் ராஜேஷ் சந்திரா வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் திருப்தி ஏற்பட்டதை அடுத்து, கோவை, கொல்கத்தா, வதோதரா, இந்தூர் ஆகிய 4 நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் உள்நாட்டில் பயணிப்பவர்களின் கைப்பைகளில் இனி "டேக்' இணைக்கப்படமாட்டாது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று குமார் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 13 விமான நிலையங்களில் இந்த முறை கைவிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த முறையைக் கைவிட விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு திட்டமிட்டு வருகிறது. கைப்பைகளில் இணைக்கப்படும் "டேக்'கில் பயணிகள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதில் இருக்கும் பார்கோடுகளை ஸ்கேன் செய்யும்போது விவரங்கள் தெரியவரும். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு "டேக்' இணைக்கப்பட்டு வருகிறது.
எனினும், வெளிநாடு செல்லும் பயணிகளின் கைப்பைகளுக்கு "டேக்' இணைப்பு முறை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...