Monday, September 18, 2017

பஸ்சில் வசூலான 8 ஆயிரம் ரூபாய் அபேஸ் எம்டிசி கண்டக்டர் சஸ்பெண்ட்
2017-09-18@ 00:28:25




சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக (எம்டிசி) நிர்வாகத்தில் சமீபகாலமாக முறைகேடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அதன்படி, போலி பஸ் பாஸ் புழக்கத்தில் விட்ட 3 எம்டிசி ஊழியர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, டிப்போக்களில் உள்ள காசாளர்கள் விதிமீறி சில்லரையை கமிஷனுக்காக தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்ததாக வடபழனி டிப்போ காசாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுபோன்ற அடுத்தடுத்த முறைகேடுக்கு மத்தியில், தற்போது மேலும் ஒரு சம்பவமாக கண்டக்டர் ஒருவர் டிக்கெட் வசூல் பணத்தை 5 நாட்களாக நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் இருந்த சம்பவம் வெளியாகி உள்ளது.

விதிப்படி, கண்டக்டர் தினந்தோறும் பஸ்களில் வசூலாகும் டிக்கெட் பணத்தை சம்பந்தப்பட்ட டிப்போவில் உள்ள காசாளரிடம் பணி முடிந்த பின் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால், எம்டிசி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கண்டக்டரின் வீடு தேடி சென்றுவிடுவார்கள்.
இந்நிலையில், அம்பத்தூர் டிப்போவுக்கு உட்பட்ட 71 இ வழித்தடத்தில் கண்டக்டராக பணிபுரியும் முருகன் என்பவர், பஸ்சில் வசூலாகும் பணத்தை சரிவர கட்டுவதில்லை என கூறப்படுகிறது. அடிக்கடி, உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு வேலையில் இருக்கும்போதே பாதியில் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. பின்னர் அதிகாரிகள் எச்சரித்து பணி வழங்கி உள்ளனர்.

இதுபோல, கடந்த மாதம் 18ம் தேதி முருகன் பணி முடிந்ததும் டிக்கெட் கட்டணமாக வசூலான 7,990ஐ டிப்போவில் கட்டாமல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தகவல் தெரிந்து முருகனின் தொலைபேசிக்கு அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, உடல்நிலை சரியில்லாமல் உள்ளேன், சரியான பின்பு பணத்தை கட்டிவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து, 5 நாள் கழித்து ஆகஸ்ட் 23ம் தேதி அம்பத்தூர் டிப்போவில் முருகன் ஒரு மனு அளித்துள்ளார். அதில், பணியை முழுமையாக முடிக்காததால் என்னை அதிகாரிகள் தொடர்ந்து 131 மணி நேரம் வேலை பார்க்க சொன்னார்கள். அதனால்தான் நான் டிக்கெட் கட்டணத்தை டிப்போவில் கட்டவில்லை என கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் முருகன் குறித்து விசாரித்தனர். அதன்பிறகு தான் அவர் இதுபோன்று அடிக்கடி பிரச்னை செய்வது தெரியவந்தது. இந்த நிலையில், பஸ்சில் வசூலான பணத்தை கட்டாமல் கையில் வைத்திருந்ததாக கூறி முருகனை நேற்று சஸ்பெண்ட் செய்து எம்டிசி மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Tug of war between AI Group & IndiGo for captains

Tug of war between AI Group & IndiGo for captains  NEW FDTL RULES Saurabh.Sinha@timesofindia.com 30.12.2025 New Delhi : Call it the Indi...