Wednesday, September 27, 2017

வருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை

பதிவு செய்த நாள்27செப்
2017
04:12




சென்னை: 'பெற்றோரின் வருமான சான்றிதழ் கேட்க கூடாது' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர் விபரத்தை, அந்த பள்ளிகள், சி.பி.எஸ்.இ., தலைமையகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கு அனுமதி வழங்கப்படும்.இதற்காக, பல பள்ளிகள், மாணவர்களின் பெற்றோரிடம், வருமான வரி ரிட்டன் சான்றிதழ் அல்லது வருமான சான்றிதழ் கேட்பதாக, மாணவர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, 'மாணவர் விபரங்களை பதிவு செய்ய, பெற்றோரிடம் வருமான வரித்துறை சான்றிதழோ, வருமான சான்றிதழோ கேட்கக் கூடாது. மாறாக, சுய கையெழுத்திட்ட கடிதம் பெற்றால் போதும்' என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2025