Wednesday, September 27, 2017

ரூ.1,307 கோடி நன்கொடை: இந்திய தம்பதி தாராளம்

பதிவு செய்த நாள்27செப்
2017
04:59




ஹூஸ்டன்: அமெரிக்காவில் மருத்துவமனை கட்டுவதற்காக, அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் தம்பதி, 1,307 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்து உள்ளனர்.

இந்தியாவை பூர்வீகமாக உடைய, கிரண் படேல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், தம்பாவில், மருத்துவ சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி, பல்லவி படேலும் டாக்டராக உள்ளார். இருவரும் சேர்ந்து, மியாமியைச் சேர்ந்த நோவா சவுத் ஈஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு, 1,307 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

பல்கலை சார்பில், தம்பாவில் புதிய மருத்துவமனை வளாகம் கட்டுவதற்காக, நிலம் மற்றும் ரொக்கத்தை அவர்கள் நன்கொடையாக அளித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2025