ஒரு நிமிடக் கட்டுரை: மாணவர் பசிதீர்க்கும் அட்சயப் பாத்திரம்!
Published : 12 Sep 2017 09:08 IST

ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் இளம் சிறார்களுக்கும் மதிய உணவு சமைத்துத் தரும் மிகப் பெரிய சமையல்கூடம் தெலங்கானா மாவட்டத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள நரசிங்கி கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த ‘அட்சயபாத்ரா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் 33-வது சமையல் கூடம் இது. இதுவரை கட்டப்பட்ட சமையல் கூடங்களிலேயே இதுதான் பெரியது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 35,000 பேருக்கு உணவு தயாரிக்கும் திறன்பெற்ற இந்த மையத்தைக் கட்டத் தொடங்கி வெகுவிரைவாகக் கட்டி முடித்திருப்பதை முன்னாள் மத்திய அமைச்சர்அபண்டாரு தத்தாத்ரேயா பாராட்டினார். பேங்க் ஆஃப் டோக்கியோ-மிட்சுபிஷி யு.எஃப்.ஜே. அளித்த ரூ.10.5 கோடி நிதியுதவியுடன், ஒன்பது மாதங்களுக்குள் மையம் கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள 238 பள்ளிக்கூடங்களுக்கும் 366 அங்கன்வாடி மையங்களுக்கும் இந்த உணவு கொண்டு செல்லப்படும். இந்த மையம் அல்லாமல் பிற மையங்கள் மூலம் ‘அட்சயபாத்ரா’ தெலங்கானாவின் 880 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 95,585 மாணவர்களுக்கும், 27,000 அங்கன்வாடி பாலர்களுக்கும் மதிய உணவு அளித்துவருகிறது.
‘அட்சயபாத்ரா’ மூலம் இப்போது 16 லட்சம் குழந்தைகள் பசியாறுகின்றனர். 2020-க்குள் இந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்துவது இதன் லட்சியமாகும். பெரிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்புப்படி இந்த சமையல் மையத்துக்கு நிதியுதவி செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார் டோக்கியோ-மிட்சுபிஷி யு.எஃப்.ஜே. வங்கியின் இந்தியப் பிரிவுத் தலைவர். சமையலறை கட்டுவதற்கு நிலம் தந்த கோ-சேவா மண்டலுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
‘அட்சயபாத்ரா’ சமையல்கூடங்கள் இந்தியாவின் 12 மாநிலங்களில் 30 இடங்களில் இருக்கின்றன. ஒரு நாளைக்கு லட்சம் பேருக்கு இவற்றால் உணவு தயாரி்க்க முடியும். இந்த சமையலறைக் கூடங்கள் நவீனமானவை. சமையல் முழுக்கப் பெரிய பெரிய எவர்சில்வர் கொள்கலன்களால் தயாரிக்கப்படுபவை. அதிக எண்ணிக்கையில் பள்ளிக்கூடங்கள் இருக்கும் இடம் அல்லது அவற்றுக்கு அருகில் உள்ள இடம் தேர்வுசெய்யப்பட்டு, சமையலறை கட்டப்படுகிறது.
காலையிலேயே சமையல் தயாராகத் தொடங்குகிறது. சோறு பொங்கும் பாத்திரம் 500 லிட்டர் கொள்திறன் உள்ளது. பருப்பு, சாம்பார் தயாரிப்புக்கான பாத்திரம் 1,200 லிட்டர் முதல் 3,000 லிட்டர்கள் வரை கொள்திறன் உள்ளது. பாத்திரங்கள் பெரியது என்பதால், அவற்றை ஓரிடத்திலிருந்து நகர்த்த டிராலிகள் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறிகளைப் பத்திரப்படுத்தி வைக்க பெரிய அளவில் குளிர்பதன சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் தரமான கல்வியைப் பெறுவதற்கு இந்தப் பசியாற்று மையம் உதவும் என்கிறார் ‘அட்சயபாத்ரா’ தலைவர் மது பண்டிட். தொடரட்டும் சேவை!
தமிழில்: ஜுரி

No comments:
Post a Comment