Saturday, October 28, 2017


பொறையார் விபத்தில் இறந்தோர் குடும்பத்திற்கு மனிதாபிமான உதவி


சென்னை: பொறையார் மற்றும் சோமனுார் கட்டட விபத்துகளில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, அரசு போக்குவரத்து ஊழியர்கள், தலா, 250 ரூபாய் கொடுத்து, உதவி செய்ய முடிவு செய்துள்ளனர்.
நாகை மாவட்டம், பொறையார் போக்குவரத்து பணிமனையின், ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், எட்டு பேர்; கோவை மாவட்டம், சோமனுார் பேருந்து நிலையம் இடிந்து விழுந்ததில், ஒருவர் என, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஒன்பது பேர் பலியாகினர். 
இவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு, தலா, 7.5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
அவர்களின் குடும்பத்திற்கு, அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும், 1.40 லட்சம் பேரும், தலா, 250 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளனர். 
இதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும், 25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026