Saturday, October 28, 2017


பாரத தரிசன சுற்றுலா ரயிலில் பயணியருக்கு, 'நியூ லக்கி டிரா'
கோவை: ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக அதிர்ஷ்டமுள்ள, 'இ - டிக்கெட்' பயணியருக்கு கட்டணத்தை திரும்ப வழங்கும், 'நியூ லக்கி டிரா' திட்டத்தை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம் செய்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., என்ற இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை, 2005லிருந்து நடத்தி வருகிறது.
இதன்மூலம், பல்வேறு சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சிறப்பு ரயில்களில் பயணியர் சென்றுவரலாம்.
தவிர, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் 'இ - டிக்கெட்' முன்பதிவு செய்து இதர ரயில்களிலும் பயணிக்கலாம். டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, உணவு, தலையணை உள்ளிட்ட வசதிகளை, முன்பதிவு செய்வது இதன் சிறப்பம்சம்.
இந்த இணையதளத்தில் பயணியரிடம், ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுவருகிறது.
மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ள, 'பிம்' என்ற பாரத் இன்டர்பேஸ் பார் மணி அல்லது யு.பி.ஐ., என்ற யூனிபைடு பேமன்ட் இன்டர்பேஸ் விண்ணப்பங்கள் மூலம், 'இ - டிக்கெட்' பயணியருக்கு, 'நியூ லக்கி டிரா' திட்டத்தை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம் செய்துள்ளது.
தேர்வாகும் அதிஷ்ட பயணியருக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பயணியர், www.irctc.co.in எனும் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணியரை ஊக்குவிக்கும் விதமாக, 'நியூ லக்கி டிரா' திட்டம் இம்மாதம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை, இதில் டிக்கெட் பெறுபவர்கள், 'ரேண்டம்' முறையில் தேர்வு செய்யப்படுவர். மாதந்தோறும், ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு, டிக்கெட் கட்டணம் அவர்களுக்கே திரும்ப வழங்கப்படும். இதுகுறித்த விவரங்களை, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026