Saturday, October 28, 2017


தேக்கடியில் தட்டான் பூச்சி கணக்கெடுப்பு துவக்கம்


தேக்கடியில் தட்டான் பூச்சி கணக்கெடுப்பு துவக்கம்
கூடலுார்: கேரளா, தேக்கடி பெரியாறு வனவிலங்கு சரணாலயத்தில் தட்டான் 
( 'தும்பி') பூச்சியின வகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.
வறண்ட காலம் மாறி வசந்த காலம் துவங்கும் போது உற்பத்தியாகும் பூச்சியினங்களில் தட்டான் வகையும் ஒன்றாகும். தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதி 777 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இப் பகுதியில் தட்டான் இன பூச்சியில் பல வகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. எத்தனை வகைகள் உள்ளன என்பது குறித்த கணக்கெடுப்பு நேற்று துவங்கியது.
இது தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். இதில் 70 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சரணாலயத்தை பல்வேறு பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் 4 பேர் கொண்ட குழு கணக்கெடுப்பில் ஈடுபடுவர். அதனை டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்து, அதன் வகைகள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இங்கு தட்டான் பூச்சி கணக்கெடுப்பு முதன்முறையாகும். இக்குழுவில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், போட்டோகிராபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026