Saturday, October 28, 2017


கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர், 'டிஸ்மிஸ்'


சட்ட விரோதமாக, வெளியாட்களை பணியமர்த்தியதாக, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளரை பணி நீக்கம் செய்து, பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சார் - பதிவாளர் அலுவலகங்களில், தங்களுக்கு வேண்டிய வெளியாட்களை, தினக்கூலி அடிப்படையில் பயன்படுத்துவதை, சார் - பதிவாளர்கள் வழக்கமாக கொண்டுஉள்ளனர்.
சட்ட விரோத வசூலுக்காக, இந்த நபர்கள் பயன்படுத்தப்படுவதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, 'அது போன்ற சார் - பதிவாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பதிவுத் துறை தலைவர், குமரகுருபரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், கடலுார் மாவட்டம், வடலுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், வெளியாட்களை பயன்படுத்தியதாக, சார் - பதிவாளர் வெங்கட்ராமன் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர் தற்போது, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளராக உள்ளார். துறை ரீதியான விசாரணையில், வெங்கட்ராமன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அவரை பணி நீக்கம் செய்து, பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையால், வெளியாட்களை பயன்படுத்தியதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் சிக்கிய, சைதாப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர் சார் - பதிவாளர்கள் பீதி அடைந்துள்ளனர். 

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026