Thursday, January 18, 2018

பொங்கல் முடிந்தது போனஸ் வருமா?

Added : ஜன 18, 2018 00:45

தமிழக அரசு அறிவித்த, பொங்கல் போனஸ் பணம், பொங்கல் முடிந்த பின்பும், இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, 14ம் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அரசு ஊழியர், ஆசிரியர்களில், சி மற்றும் டி பிரிவினருக்கு, 3,000 ரூபாய் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி, 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில், இன்னும் பணம் வழங்கப்படவில்லை. ஐந்து நாள் பொங்கல் விடுமுறை முடிந்து, நேற்று வேலை நாள் துவங்கிய நிலையில், மாலை வரை பணம் வரவில்லை என, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். 'அரசின் நிதித் துறையில் இருந்து பண ஒதுக்கீடு கிடைத்ததும், கருவூலம் மூலமாக, அவரவர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்' என, அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் அரசு அறிவித்தும் பொங்கல் போனஸ் தொகை இன்னும் கைக்கு வந்து சேராததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

BHOPAL NEWS