Saturday, January 20, 2018

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா

Added : ஜன 20, 2018 00:29 

பாடகி கொல்லங்குடி கருப்பாயி,Singer Kollangudi Karuppayi,   கிராமிய பாடல் , நாட்டுப்புற பாடல், தெம்மாங்கு பாடல், கலைமாமணி,Kalaimamani,  கொல்லங்குடி , Kollangudi, கருப்பாயி, பாண்டியராஜன் ,Pandiarajan,  கலைமாமணி, நடிகர் சங்கம்,Nadigar sangam, பள்ளி பட்டா, மானாமதுரை,Manamadurai,  சிவகங்கை,Sivagangai,Folk song, மானாமதுரை, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமிய மற்றும் நாட்டுப்புற, தெம்மாங்கு பாடல் மூலம் புகழ் பெற்றுசினிமாவில் நடித்த 'கொல்லங்குடி கருப்பாயி தற்போது ஓட்டுவீட்டில் வசித்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பாயி. 1980ம் ஆண்டில் திருச்சி, மதுரை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான கிராமிய மற்றும்நாட்டுப்புற, தெம்மாங்குப்பாடல் மூலம் பிரபலமடைந்தார்.1985ல் பாண்டியராஜன் இயக்கிய படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின், 'கொல்லங்குடி'கருப்பாயிபுகழ் பெருகத் துவங்கியது.இவரின் திறமையை பாராட்டி 1992ல் முதல்வர் ஜெயலலிதா'கலைமாமணி' பட்டத்தை வழங்கினார்.பள்ளிக்கு பட்டா: அந்த விழாவில் கொல்லங்குடிகருப்பாயிடம் உங்களுக்கு என்ன வேண்டுமென்று முதல்வர் கேட்டுள்ளார்.அப்போது அவர் தனக்கென்று எதுவும் கேட்காமல் தனது ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்துக்கு பட்டா வழங்க வேண்டுமென்று கேட்டுள்ளார்.உடனடியாக ஜெயலலிதாவும் அந்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்.பின் பட வாய்ப்பு குறைந்தும், கணவரின் மறைவை அடுத்தும் முற்றிலும் வீட்டிற்குள் முடங்கினார்.மானாமதுரைக்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர் கூறியதாவது: தற்போது எனக்கு 80 வயதிற்கு மேல் ஆகி விட்டது. வாய்ப்புகள் குறைந்துவிட்டன. உடைந்த ஓட்டு வீட்டில் வசிக்கிறேன். சினிமா மற்றும்பாடல்கள் பாடும்போது அவர்கள் கொடுக்கிற பணத்தை வாங்கி கொள்வேன். இப்போது எனது வீடுஇடியும் தருவாயில் உள்ளது. எனக்கு குழந்தைகள் இல்லாததால் எனது தம்பி மகள் வாசுகி தான்
உணவு வழங்கி வருகிறார்.நடிகர் சங்கத்தில் இருந்து மாதந்தோறும்ரூ.4 ஆயிரம் தருகின்றனர். அதை வைத்து மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொள்கிறேன். எனது காலத்திற்குள் வீட்டை புதுப்பித்துவிடவேண்டுமென்று ஆசையாக உள்ளதுஎன்றார்.

தொடர்புக்கு 88708 96189.

No comments:

Post a Comment

NEWS TODAY 26.01.2026