Saturday, January 20, 2018

அம்மா இருசக்கர வாகனம் வாங்க ஆதார் கட்டாயம்

Added : ஜன 20, 2018 03:13



சென்னை: பெண்கள், அம்மா இருசக்கர வாகனம் பெற ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஐம்பது சதவீதம் மானியத்தில் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும், 'அம்மா இருசக்கர வாகன திட்டத்தில்' பயன்பெற விரும்புவோர் பிப்.,5க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கிராமப்புறம் மற்றும் நகர் புறங்களில் பணி புரியும் எட்டாம் வகுப்பு படித்த 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட, இருசக்கர ஓட்டுநர் உரிமம் பெற்ற, தனிநபர் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட ஏழை மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இலவசமாக பெறலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பிப்.,5 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டத்திற்க ஆதார் கார்டு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 26.01.2026