Wednesday, January 24, 2018

தமிழகத்தில் மேலும் ஒரு பல் மருத்துவ கல்லூரி

Updated : ஜன 24, 2018 05:39 | Added : ஜன 24, 2018 04:44

சென்னை: ''தமிழகத்தில் விரைவில், மேலும் ஒரு பல் மருத்துவ கல்லுாரி துவங்கப்படும்,'' என,அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை, அரசுபல் மருத்துவ கல்லுாரிமருத்துவமனையில், 1.22 கோடி ரூபாயில், 30 படுக்கை வசதிகளுடன் உள்நோயாளிகள் பிரிவு. இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள்,தானியங்கி ரத்த
பரிசோதனை ஆய்வகம் மற்றும் மாண வர்கள் விடுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவற்றை, நேற்று
துவக்கி வைத்த, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில், 348 அரசு மருத்துவமனைகள்மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், பல் மருத்துவ பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகள், மேலும், 186 ஆரம்பசுகாதார நிலையங்களில் விரிவுப்படுத்தப்படும்.தமிழகத்தில், மேலும் ஒரு பல் மருத்துவ கல்லுாரி துவக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.01.2026