Wednesday, January 24, 2018

இன்று ரதசப்தமி

Added : ஜன 24, 2018 00:42



சூரியனின் வடதிசை பயண மாதங்களை 'உத்திராயண புண்ணிய காலம்' என்பர். தை முதல் ஆனி வரை இது நிகழும். இந்த மாதங்களில் வரும் வளர்பிறை சப்தமி திதிகள், சூரியனுக்குரிய விரத நாட்கள் ஆகும். இதில் தை மாதம் வரும் சப்தமியை 'ரதசப்தமி' என்பர்.
சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவதாக ஐதீகம். தை முதல் தேதி, அவரது தேர் வடக்கு திசை நோக்கி திரும்பும். ரத சப்தமியன்று அந்தப் பாதையில் தன்னை நிலைநிறுத்தி, பயணத்தை தொடரும். எனவே இந்நாள் மிகவும் விசேஷமானது.வடக்கு செல்வத்திற்குரிய திசை. இதை 'குபேர திசை' என்பர். ஜாதகத்தில் சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் அதிக நன்மை உண்டாகும். செல்வ வளம் கிடைக்கும். பாவங்களை போக்கி புண்ணிய பலன் தரும்.
சப்தமி விரதம் எளிமையானது. ஏழு எருக்க இலைகளை தலையில் வைத்து, கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும். பகலில் பட்டினியாக இருந்து, சூரியனுக்குரிய ஸ்தோத்திரங்கள், ஆதித்ய ஹ்ருதயம் ஆகியவற்றை சொல்லலாம். பட்டினி கிடக்க முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். பூஜையறையில் தேர்க்கோலம் போட்டு, சர்க்கரை பொங்கல், கோதுமை பண்டங்கள் நைவேத்யம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு செருப்பு, குடைகளை, தானம் கொடுப்பது நல்லது.
சூரியனின் கிரணங்கள் எருக்க இலை மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவி சென்று,
வியாதிகளை போக்கி குணம் தரும் என்பது முன்னோர் கருத்து.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.01.2026