Sunday, April 1, 2018

கோடை சுற்றுலா அறிவிப்பு

Added : ஏப் 01, 2018 00:01

சென்னை: தமிழக சுற்றுலாத்துறை, கோடை கால சுற்றுலாக்களை அறிவித்துள்ளது.சுற்றுலா பயணி களின் வருகையில், தமிழகம், முதன்மை மாநிலமாக உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏப்., முதல் ஜூன் வரை, பல்வேறு சுற்றுலாக்களை அறிவித்துள்ளது. இதன்படி, ஊட்டி, கொடைக்கானல், ஒகேனக்கல், பெங்களூரு, மூணாறு ஆகிய ஐந்து இடங்களுக்கு, வெள்ளி இரவு புறப்பட்டு, திங்கள் காலை திரும்பும் வகையில், மூன்று நாள் சுற்றுலா திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.சுற்றுலா செல்லும் இடம், பஸ் வசதியை பொருத்து, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதற்கான விபரங்களை, சென்னை, வாலாஜா சாலையில் உள்ள, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளரை நேரிலோ, 044 - 2533 3333, 2533 3857 ஆகிய தொலை பேசி எண்களிலும், 1800 425 31111 என்ற, கட்டணமில்லா தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.



No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...