Tuesday, April 10, 2018

முதுநிலை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் தேதி மாற்றம்

Added : ஏப் 09, 2018 21:00

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களில், 50 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கிறது. இந்த ஒதுக்கீட்டில் உள்ள, எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., போன்ற படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், மார்ச், 27ல் நடந்தது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்றும், நாளையும் நடக்கும் என, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் அறிவித்திருந்தது.தற்போது, 'ஆன்லைன்' கவுன்சிலிங் தேதி, 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. முடிவுகள், 15ம் தேதி வெளியிடப்பட உள்ளது.'இட ஒதுக்கீடு பெற்றவர்கள், 23ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். மீதமுள்ள இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு திருப்பி அனுப்படும்' என, மத்திய சுகாதார சேவை இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...