Wednesday, September 18, 2019

அரசு மருத்துவக்கல்லூரியில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

Added : செப் 17, 2019 23:22




சிவகங்கை, சிவகங்கை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தினைக்குளம் சித்ரவேல், துபாயில் பணிபுரிகிறார். கர்ப்பிணியான இவரது மனைவி பொன்ராக்கு 23, பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பரிசோதனையில் 3 குழந்தைகள் இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். செப்.4 ல் பிரசவத்துக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மகப்பேறு மருத்துவ பிரிவு தலைவர் மல்லிகா தலைமையில் டாக்டர்கள் காயத்ரி, பிரசன்னலட்சுமி உள்ளிட்டோர் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் 1 ஆண், 2 பெண் குழந்தைகள் பிறந்தன.குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் டாக்டர்கள் சிவக்குமார், குணா ஆகியோர் சிகிச்சை அளித்து 12 நாட்கள் கண்காணித்தனர். தற்போது குழந்தைகள் நலமாக உள்ளனர். டாக்டர்களை டீன் குழந்தைவேல், துணை முதல்வர் விசாலாட்சி, கண்காணிப்பாளர் ஷீலா, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள் பாராட்டினர்.மகப்பேறு துறை தலைவர் மல்லிகா கூறுகையில், 'செப்.4 அன்று பிரசவத்திற்கு வந்த பொன்ராக்குவை சோதித்த போது வயிற்றில் ஒரு குழந்தையின் தலை, ஒரு குழந்தையின் கால் கீழ்நோக்கியும், ஒரு குழந்தையின் உடல் முழுவதும் குறுக்காகவும் கிடந்தது. அறுவை சிகிச்சை எங்களுக்கு சவாலாக இருந்தது' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025