Monday, April 24, 2017

நீட்' தேர்வு கூடாது... "நீட்' தவிர்க்க முடியாதது!

By DIN  |   Published on : 24th April 2017 04:23 AM  |   
dinamani-neet
விவாதத்தில் நடுவராக செயல்பட்ட சென்னை விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் கே.கணேசனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன். உடன் (இடமிருந்து) கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபா
Ads by Kiosked
தமிழக மாணவர்களுக்கு "நீட்' தேர்வு தேவையா அல்லது தேவையில்லையா என்று விவாதிக்கும் வகையில் "நீட்: சிந்திப்பதா? சந்திப்பதா? என்ற தலைப்பிலான சிறப்பு விவாதம் "தினமணி சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரான "நீட்' தகுதித் தேர்வு தமிழகத்துக்குத் தேவையில்லை என "சிந்திப்பது' என்ற தலைப்பில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி, ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் வாதிட்டனர்.
வாக்கு வங்கிக்காக, தேசிய தகுதித் தேர்வு எதிர்க்கப்படுகிறது. 'நீட்' தகுதித் தேர்வால் இடஒதுக்கீடு பாதிக்கப்படப்போவது இல்லை. அப்படி இருக்கும்போது, இதை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? தகுதித் தேர்வை எதிர்ப்பது, தமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும் என "சந்திப்பது' என்ற தலைப்பில் பேசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ. கலாநிதி, பேராசிரியர் தி.ராசகோபாலன், டாக்டர் எல்.பி.தங்கவேலு ஆகியோர் வாதிட்டனர்.
இரு அணியினரின் வாதங்களையும் கேட்ட நடுவர் கே. கணேசன், நீட் தேர்வில் சில குறைபாடுகள் உள்ளன. சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்தும் வரை தகுதித் தேர்வுகள் வேண்டாம் என்று ஒரு தரப்பினரும், தகுதித் தேர்வுகள் அனைத்தும் ஒருவரின் திறமையை படம்பிடித்து காட்டக்கூடியவை எனவே அவை அவசியம் என்று மற்றொரு தரப்பினரும் வாதிட்டனர். இருதரப்பினரும் தங்கள் பக்க நியாயத்தை வெளிப்படுத்தினர். இதில் எது சரி என்ற முடிவுக்கு வருவதை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறேன் என்று கூறினார்.
இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேருவதற்கு "நீட்' தகுதித் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு தரப்பினர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். "நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப் பேரவையில் ஒருமனதாக சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு காத்திருக்கிறது. இதனால், 2017-18 கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுமா அல்லது "நீட்' அடிப்படையில் நடைபெறுமா என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ்
"நீட்' தகுதித் தேர்வை பொருத்தவரை சி.பி.எஸ்.இ. (மத்திய பாடத் திட்டம்) தரத்துக்கு நடத்தப்படுகின்ற ஒரு தேர்வு. இந்தியாவில் தென் மண்டலத்தில் 59,000 மாணவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதுகின்றனர். இதில் தமிழகத்திலிருந்து 12,000 மாணவர்கள்தான் எழுதுகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் ஆண்டுக்கு 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கின்றனர். இவர்கள் சி.பி.எஸ்.இ. அடிப்படையில் நடத்தக் கூடிய ஒரு தகுதித் தேர்வை எதிர்கொள்ள முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
ஒரு போட்டித் தேர்வு என்றால் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் நடப்பதுதான் சரியாக இருக்க முடியும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் கொண்டுவருகின்ற போதுதான் இது சாத்தியப்படும்.
இன்றைய நிலையில் தமிழகம் இதற்கு தயாராக இல்லை. தகுதித் தேர்வுக்கு தமிழகம் தயாராக அடுத்த 8 ஆண்டுகள் தேவைப்படும்.
இந்தச் சூழலில் தகுதித் தேர்வை நடத்தினால் தமிழகத்தில் மொத்தமுள்ள 3,400 எம்.பி.பி.எஸ். இடங்களில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 3,000 இடங்களில் சேர்ந்துவிடுவர். மீதமுள்ள 400 இடங்கள்தான் சமச்சீர் கல்வியின் கீழ் படித்த 9 லட்சம் மாணவர்களுக்கு கிடைக்கும்.
எனவே, "நீட்' தகுதித் தேர்வு என்பது தமிழகத்துக்கும், சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இது இன்றைக்குத் தேவையில்லை.
தமிழகத்தில் 1984-இல் தான் நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது வெறும் 15 சதவீத கிராமப்புற மாணவர்கள்தான் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது.
பின்னர், நுழைவுத் தேர்வு ரத்தான உடன் 2007 இல் 65 சதவீத கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். எனவே, இன்றைய சூழலில் "நீட்' தகுதித் தேர்வுக்கு தமிழகம் தயாராக இல்லை.
சமச்சீர் கல்வி, சி.பி.எஸ்.இ. தரத்துக்கு உயர்த்தப்பட வேண்டும். தரமான, கட்டணம் இல்லாத, சுமை இல்லாத கல்வியைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதன் பிறகு எத்தனை போட்டித் தேர்வுகள் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும். அதுவரை தகுதித் தேர்வுகள் வேண்டாம்.

நீதிபதி ஹரிபரந்தாமன்
"நீட்' தகுதித் தேர்வு கட்டாயமாவதற்கு உச்ச நீதிமன்றம் காரணமல்ல. மத்திய அரசு இயற்றிய சட்டம்தான் அதற்குக் காரணம்.
நமது அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளை வலியுறுத்துகிறது. ஆனால், "நீட்' மாநில உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் வைக்கும் வேட்டாகும்.
தமிழக அரசு 31-1-2017 அன்று, சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டுவந்தது. அந்தச் சட்டம் அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
எனவே, தமிழக அரசின், தமிழக மக்களின் நோக்கம் "நீட்' வேண்டாம் என்பதுதான். ஆனால், மூன்று மாதங்கள் ஆகிவிட்டபோதும் மத்திய அரசு எந்தவொரு பதிலையும் இதுவரை தரவில்லை. குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலும் பெற்றுத்தரவில்லை. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகும்.
தமிழகத்தில் 1984 இல் அறிமுகம் செய்யப்பட்ட நுழைவுத் தேர்வு, பின்னர் 2006 இல் ரத்து செய்யப்பட்டது. பிளஸ்-2 அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்கு வணிக ரீதியிலான தனியார் பயிற்சி மையங்கள் பெருகியதும், அவை ஏழை மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டதுமே காரணம். இப்போது "நீட்' நுழைவுத் தேர்வை கட்டாயமாக்குவதால், தனியார் பயிற்சி மையங்கள் மீண்டும் அதிக அளவில் உருவெடுத்து, கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதற்கே வழிவகுக்கும்.
எனவே, தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ்-2 அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவேண்டும்.

பேராசிரியர் தி. ராசகோபாலன்
"நீட்' தகுதித் தேர்வை எதிர்ப்பது ஏன் தெரியுமா? மத்தியில் உள்ள அரசு இதை கொண்டுவந்த காரணத்தால், இதை எதிர்க்க வேண்டும் என ஓட்டு வங்கிக்காகவே, அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், தகுதித் தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு அல்ல. இதைக் கட்டாயமாக்கியது உச்ச நீதிமன்றம்.
மருத்துவப் படிப்புக்கு நாடு முழுவதும் பலதரப்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதால், பங்கேற்க முடியாமல் பாதிக்கப்பட்ட சிம்ரன் ஜெயின் என்ற மாணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இனி எந்த மாநிலமும் தனித் தனி நுழைவுத் தேர்வுகளை நடத்தக் கூடாது. நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்கள் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில்தான் பொது நுழைவுத் தேர்வை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதன் அடிப்படையிலேயே, "நீட்' தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள பயிற்று மொழியோ அல்லது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டமோ தடை அல்ல. தமிழ் மொழியில், மாநில பாடத்திட்டத்தில் படித்த பலர் சாதனை படைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பணியாற்றும் 275 ஐஏஎஸ் அதிகாரிகளில் 150 பேர் தமிழகத்தில் இருந்துவந்த ஐஏஎஸ் அதிகாரிகள். ஐஏஸ் தேர்வு எழுத முடிகின்ற தமிழக மாணவர்கள், ஏன் "நீட்' தகுதித் தேர்வை எதிர்கொள்ளக் கூடாது?
அதுமட்டுமின்றி இந்த 'நீட்' தகுதித் தேர்வால் இடஒதுக்கீடு பாதிக்கப்படப்போவதும் இல்லை. அப்படி இருக்கும்போது, இதை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?

முன்னாள் துணைவேந்தர் ஏ. கலாநிதி
தமிழகத்தில் மாணவர்களுடைய தரம் வெகுவாகக் குறைந்துபோயுள்ளது. இதை எவரும் ஒத்துக்கொள்வதில்லை.
உலகத்திலேயே மிகப் பழைமையான முதன்மை மொழி தமிழ்தான். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது சம்ஸ்கிருதம்.
தமிழ் மொழியில் திருக்குறள், திருமந்திரம் என பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன. அதுபோல சம்ஸ்கிருதத்தில் பல வேதங்கள் உள்பட மிக ஆழமான கருத்துகளையுடைய படைப்புகள் உருவாக்கப்பட்டன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு தமிழன் திருக்குறளை எழுதியிருக்கிறார் என்றால், தமிழ் மொழிக்கு அப்படிப்பட்ட திறமை இருக்கிறது என்பதுதான் உண்மை.
இந்த மொழிக்கே உண்டான திறமையை நாம் பயன்படுத்த, கடந்த 600 ஆண்டுகளாக நமது ஆட்சியாளர்கள் விடவில்லை. நம்மை எழ விடாமல் தடுக்கின்றனர்.
பள்ளிகளில் பிளஸ்-1 பாடம் நடத்தப்படுவதே இல்லை. இது பெற்றோர், ஆசிரியர்கள், ஒருசில அரசியல்வாதிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கின்றனர்.
1984 இல் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது நடத்திய கருத்துக் கணிப்பில், இதில் கிராமப்புற மாணவர்களும் சிறந்து விளங்குகின்றனர் எனத் தெரியவந்தது.
பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2006 இல் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், அப்போது கருத்துக் கணிப்போ அல்லது கல்வியாளர்களின் கருத்தோ கேட்கப்படவில்லை. ஒரே இரவில், அரசியல்வாதிகளே இந்த முடிவை எடுத்தனர். வாக்கு வங்கிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இன்றைக்கும் இதே வாக்கு வங்கிக்காக, தேசிய தகுதித் தேர்வு எதிர்க்கப்படுகிறது. இது நம்மை மேலும் கீழே தள்ளக்கூடிய செயல். எனவே, மாணவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
"நீட்' தேர்வு வருவதற்கு உச்ச நீதிமன்றம் காரணம் அல்ல. தகுதித் தேர்வை நடத்த தயாராக இருக்கிறீர்களா என உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு, மத்திய அரசு வழக்குரைஞர்தான் நாங்கள் தயார் என்று கூறினார். பின்னர், சில மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக உச்சநீதிமன்றத்தில் அடுத்த நாள் அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். எனவே, நீட் தகுதித் தேர்வுக்கு காரணம் உச்சநீதிமன்றம் அல்ல.
மத்திய அரசு 2016 மே மாதம் சட்டம் இயற்றுகிறது. அதில், நாடு முழுவதும் நீட் கட்டாயமாக்கப்படுகிறது எனக் கூறிவிட்டு, இதை விரும்பாத மாநிலங்களுக்கு 2016-17 கல்வியாண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டது. இந்த விலக்குக்கு 30 காரணங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாடத் திட்டம் சமச்சீராக இல்லை என்பதும் ஒன்று.
2016-17 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறிய காரணம், 2017-18 ஆம் ஆண்டில் மாறிவிட்டதா? மத்திய பாடத் திட்டமும், மாநில பாடத் திட்டமும் சமச்சீராகிவிட்டதா?
எனவே, இன்றைய தேதி வரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டிருக்கின்றது.
"நீட்' தேர்வைக் கட்டாயமாக்குவது பள்ளிக் கல்வி முறையை, பயிற்சி மைய முறையாக மாற்றுவதற்குதான் வழிவகுக்கும். பள்ளிக் கல்வி முறையில் கேள்வி கேட்கமுடியும். ஆனால், பயிற்சி மைய முறையில் கேள்வி கேட்க முடியாது. சிந்திக்கும் திறனையே பாதிக்கும் செயல்.

டாக்டர் எல்.பி. தங்கவேலு
இன்றைய கால கட்டத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கே நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இப்படி இருக்கும்போது மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது?
"நீட்' தகுதித் தேர்வை இனி தவிர்க்கவே முடியாது. எனவே, அதை எதிர்கொள்ள நமது மாணவர்களை எப்படித் தயார்படுத்துவது என்பது குறித்துதான் நாம் சிந்திக்க வேண்டும்.
தமிழக மாணவர்கள் திறமையானவர்கள்தான். ஆனால், "நீட்' தகுதித் தேர்வை எதிர்கொள்கிற அளவுக்கு பாடத் திட்டத்தை மேம்படுத்தாமல் மாணவர்களின் திறனை குறைத்ததற்கு மாறி மாறி ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள்தான் காரணம்.
மாநில இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு இருக்காது, மருத்துவர்களின் தரத்தை உயர்த்தவும், நன்கொடைகளைத் தடுக்கவும் தகுதித் தேர்வு அவசியம். ஹிந்தி, ஆங்கிலத்திலும் தேர்வு நடத்தப்படும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படவில்லை.
என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரைத்துள்ள பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே "நீட்' தேர்வு நடத்த இருக்கிறோம் போன்ற உறுதிகளை அளித்த பின்னரே இந்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.
எனவே, தகுதித் தேர்வை எதிர்ப்பது, தமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும்.
தீர்வு என்ன?: நடுவர் கணேசன்
இந்தத் தகுதித் தேர்வுகள் அனைத்தும், ஒருவரின் திறமையை படம்பிடித்துக் காட்டக்கூடியவை. எனவே அவை அவசியம்.
ஆசிரியர்களுக்கு பொறுப்பேற்கும் தன்மையே மிகவும் குறைந்துவிட்டது. அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற 2.5 லட்சம் பேரில் வெறும் 4,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. சமச்சீர் கல்வியை மேம்படுத்தவேண்டும் என்பதோடு, அதை மாணவர்களுக்கு புரியும் வகையில் ஆசிரியர்கள் சொல்லித் தரவேண்டும்.
இருந்தாலும் நீட் தகுதித் தேர்வில் சில குறைபாடுகள், சூழ்நிலைகள் எதிர் தரப்பில் முன்வைக்கப்பட்டன. அதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு எது சரி, எது தவறு என்ற ஒரு சுமுகத் தீர்வு காண்பதை பார்வையாளர்களிடமே விட்டுவிடுகிறேன் என்றார் நடுவர் கணேசன்.

நிறைவுரை: "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் 9 லட்சம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுபோல, ஒரு பொது நுழைவுத் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்யும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொள்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனால், அதே நேரத்தில் நுழைவுத் தேர்வே வேண்டாம், எந்தப் போட்டியும் வேண்டாம் என்ற நிலை வருமானால், மாணவர்களின் தன்னம்பிக்கை வளராமல் போய்விடும்.
எனவே, நுழைவுத் தேர்வு தேவைதான். அதேநேரம், பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதனடிப்படையில் மருத்துவம், பொறியியல் சேர்க்கை நடத்தவேண்டும். இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். மேலும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், பத்தாம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி அரசு கல்வியாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தரமான அரசுக் கல்வியாக இருக்க வேண்டும். உயர்நிலைப் பள்ளி வரை தனியார் மயம் ஏற்புடையதல்ல. பள்ளிக் கல்வி தனியார் மயத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.

இது தவறான முடிவு

By இரா. கதிரவன்  |   Published on : 24th April 2017 02:01 AM  |   
சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி சில பத்திரிக்கைகளில் வெளியாகியிருந்தது.
உத்தரப் பிரசதேசத்தில், உத்தரப் பிரசதேச நவ நிர்மாண் சேனை என்ற அமைப்பின் சார்பாக, மீரட் நகரத்தில் சுமார் 50 பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
அம்மாநிலத்தில் தங்கிப் படிப்பவர்கள்,தொழிலில் ஈடுபடுவோர், வேலையில் இருக்கும் காஷ்மீரை சார்ந்தவர்கள் யாவரும் உத்தரப் பிரசதேசத்தை விட்டு உடனடியாக வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தனர் என்பதே செய்தியாகும்.
காஷ்மீரில், இந்திய பாதுகாப்புப் படையினை சார்ந்த வீரர்கள் மீது கல் எறிதல் போன்ற சம்பவங்களிலும் வன்முறையிலும் ஈடுபடும் காஷ்மீரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் - எதிர்வினை ஆற்றும் விதமாகவும் இந்த அறிவிப்பு என்றும் கூறப்பட்டது.
உங்கள் உறவினர்கள், பாதுகாப்பு வீரர்கள் மீது கல் எரிந்து துன்பப்படுத்தும் போது, நீங்கள் இங்கே நிம்மதியாக இருக்க முடியாது என்று சொல்லப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு, காஷ்மீரைச் சார்ந்தவர்களை - முழுமையாக ஒதுக்கி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக, காஷ்மீரிகளுக்கு தங்க இடம் - பால் - பத்திரிகை - வங்கிகளில் கணக்கு போன்ற வசதிகள் செய்து தர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தியாவின் அறிவியல் வல்லுநர்கள் ஒரே சமயத்தில் பல துணைக் கோள்களை விண்ணில் செலுத்தும் சாதனையை செய்வது எனும் முன்னேற்றமான - பெருமை படும் தகவல்கள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம், வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு வெட்கக்கேடான விஷயங்களும் நிகழ்வது ஒரு விந்தையான முரண் ஆகும்.
காஷ்மீரில், படை வீரர்களுக்கு எதிராக அந்தப் பகுதியில் தவறாக வழி நடத்தப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்யும் காரியங்களை நியாயப்படுத்த முடியாது.
ஆனால், அதற்கான எதிர்வினை எனும் பெயரில் நாட்டின் வேறு ஒரு பகுதியில் செய்யப்படும் சட்டத்துக்கு புறம்பானவற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒரு தவறை இன்னொரு தவறு சரி செய்து விடுமா?
ஒரு மாநிலத்தில் நிகழும் தவறான சம்பவங்களுக்கு, இன்னொரு மாநிலத்தில் இருக்கும் அப்பாவி மக்களை அச்சுறுத்துவதும் - துன்புறுத்துவதும் எந்த வகையில் நியாயம்? இது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
அமெரிக்காவில் நமது இந்தியர்கள் சிலர் தேவையற்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதையும், சிலர் கொல்லப்பட்டதையும் கண்டு நாம் ஒவ்வொருவரும் மனம் பதைக்கிறோம். ஆனால், நமது தேசத்தில், ஒரு மாநிலத்தில் இப்படி நிகழ்வதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும்?
அது மட்டுமல்ல, இத்தகைய அணுகுமுறை வெற்றி கண்டால், அதனையே பிற மாநிலங்களும் கைக்கொள்ளக் கூடும்.
வல்லான் வகுத்ததே வாய்க்கால் அல்லது தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எனும் நிலை உருவாக இது வழி வகுக்கும்.
மேலும், இதுபோன்ற வன்முறைக்கு கிடைக்கும் வெற்றி என்பது, உண்மையில் மக்களிடையே நிரந்தர பிளவை ஏற்படுத்தும். தவிரவும், சாமானிய மக்கள் சட்டம் - நீதி ஆகியவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையையும் இழக்கச் செய்து விடும். இது ஒரு நல்ல முடிவு அல்ல.
இதன் நீட்சி - அதீத கற்பனையாக கூட இருக்கலாம். ஆனாலும் அந்த கற்பனை மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு மாநிலமும், தனது அண்டை மாநிலத்தோடு ஏதேனும் ஒரு வகையில் சில தீர்வு எட்டப்ப படாத பிரச்னைகளை வைத்திருக்கிறது.
இதனைக் காரணம் காட்டி சிலர் வன்முறையைக் கையில் எடுத்து, பிற மாநிலத்தவரை வெளியேறச் செய்வது என்ற நிலை ஏற்படுமேயானால், பல்வேறு மாநிலத்து மக்களிடையே பரஸ்பர நம்பிக்கை - நல்லெண்ணம் - நல்லுறவு போன்றவை தகர்த்தெறியப்படும்.
ஒரு மொழி பேசுவோர் இன்னொரு மொழி பேசும் மாநிலத்துக்குள் இருப்பது, ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வேறு மதத்தவரோடு இணக்கமாக வசிப்பது போன்றவற்றுக்கு குந்தகம் ஏற்படும். மக்கள் தங்கள் மாநிலத்தில் மட்டுமே,அச்சமின்றி வாழ முடியும் ஒரு சூழலை நோக்கி நாடு
செல்லலாமா?
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் - பெரும்பாலோர் தினக்கூலி வேலை செய்வோர் - ஓட்டல்களில் வேலை செய்தவர்கள் - மாணவர்கள் } சில லட்சம் பேர் பெங்களூரு நகரை விட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வதந்தியின் அடிப்படையில் வெளியேறினர்.
பின்னர் அஸ்ஸாம், கர்நாடக அரசுகள் தலையீட்டில் அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இருப்பினும், அந்த மக்களின் மனதில் பய உணர்வு, தாங்கள் அந்நியர்களோ என்ற உணர்வு எழுந்ததை தவிர்க்க இயலவில்லை.
ஒருபுறம் தேசிய ஒருமைப்பாட்டை பற்றி, வேற்றுமையிலும் ஒற்றுமை என்று பேசி வருகிறோம். இன்னொரு புறம், சில தீய சக்திகள் அத்தகைய நல்ல விஷயங்களை குழி தோண்டிப் புதைக்க எத்தனிப்பது வருத்தம் தருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் அண்டை மாநிலம் ஒன்றில் பெரும் அச்சுறுத்தலுக்கும் - அபாயத்துக்கும் உள்ளாக்கப்பட்டபோது, தமிழகத்தில் மக்கள், அமைதிக்கு பங்கம் வாராமல் பெரும் அமைதி காத்தனர். தமிழகத்தில் வசிக்கும் அந்த அண்டை மாநில மக்களுக்கு எந்த வித இடையூறும் அச்சுறுத்தலும் தராதிருந்தனர்.
தமிழக அரசும் அம்மக்கள் மீது எந்த வன்முறைக்கும் இடம் அளிக்காது என்பதனை உறுதிபட தெளிவுபடுத்தியது. எந்த பகுதியிலும் எவருக்கும் எந்தவொரு தீங்கும் நிகழாது இருந்தது.
இத்தகைய நல்ல முன்னுதாரணத்தை பிற மாநிலங்களும் கவனிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும்.

Temperature soars in Vellore


There seems to be no respite from the scorching sun for residents of the Fort City. On Sunday, the city recorded a temperature of 44.1 degree Celsius, the highest temperature recorded so far this month.
According to data available on the website of the Regional Meteorological Centre, Chennai, the highest temperature recorded in Vellore during April since 2007 is 43.7 degree Celsius (April 25, 2016). The all time record was 44.9 degree Celsius on April 29, 2000. In the last two days, the temperature stood at 42 degree Celsius (April 21) and 42.5 degree Celsius (April 22), according to Meteorological Office, Vellore.

Sastra University provides annadhanam

The Sastra University provided annadhanam here on Sunday for the benefit of more than 15,000 devotees on padayatra to Sri Vaitheeswaran Koil.
A special pandal was erected in front of the Sastra University, Kumbakonam campus, where food packets - each comprising a laddu, tamarind rice, curd rice, butter milk, water packet and medicine for foot burns - were distributed to the devotees by a team headed by Vice Chancellor R. Sethuraman.
Every year devotees from various parts of Thanjavur, Sivaganga and Pudukkottai districts proceed to Sri Vaitheeswaran Koil just after the Tamil New Year’s Day as part of annual ritual.
ரூ.2 லட்சம் கேட்டு முதியவர் கடத்தல் : ரூ.50 கொடுத்து விடுவித்த சுவாரசியம்

பதிவு செய்த நாள்23ஏப்
2017
22:32

வேலுார்: வேலுாரில், முதியவரை காரில் கடத்திய கும்பல், இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது. அவர் குடும்பத்தினரிடம் பணம் இல்லை என, தெரிந்ததால், 50 ரூபாயை கொடுத்து, முதியவரை விடுவித்தது.

நடைபயிற்சி : வேலுாரைச் சேர்ந்தவர், பிரபாகரன், 66; வாஸ்து பார்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, பிரபாகரன் நடைபயிற்சி சென்ற போது, காரில் வந்த மர்ம நபர்கள், அவரை கடத்தினர். காட்பாடி அடுத்த, வள்ளிமலை மலையடிவாரத்தில், காரை கும்பல் நிறுத்தியது. பிரபாகரன் கை, கால்களை கட்டி போட்டு, இரண்டு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது. தான் அந்த அளவுக்கு, 'ஒர்த்' இல்லை என, பிரபாகரன் கூறியுள்ளார். பிரபாகரன் குடும்பத்தினரை, மொபைல் போனில் தொடர்பு கொண்ட கும்பல், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால், பிரபாகரனை விட்டு விடுவதாக கூறினர். அவர்களும், 'எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை; சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறோம்' என்றனர்.

தப்பியோடியது : பிரபாகரன் குடும்பத்தினரிடம் எதுவும் தேறாது என்பதை அறிந்த கடத்தல் கும்பல், காரில் இருந்து அவரை இறக்கிவிட்டது. 'இங்கிருந்து எப்படி ஊருக்கு போவது' என, பிரபாகரன் கேட்டதற்கு, 50 ரூபாயை கொடுத்து, பஸ், டிபன் செலவுக்கு வைத்து கொள்ளும்படி, கூறி விட்டு தப்பியோடியது. சம்பவம் குறித்து, சத்துவாச்சாரி போலீசில், பிரபாகரன் நேற்று புகார் செய்தார். சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகள், பிரபாகரனை கடத்தி சென்று மிரட்டியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாளை 'பந்த்': லாரிகள் ஓடாது

பதிவு செய்த நாள்23ஏப்  2017   22:24

சேலம்: சேலத்தில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன, பொதுச் செயலர் தனராஜ் கூறியதாவது: விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தில், நாளை நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு, நாங்களும் ஆதரவு அளிக்கிறோம். தமிழகத்தில், 4.25 லட்சம் லாரிகள், காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை ஓடாது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகள், மாநில எல்லையில், பாதுகாப்பான இடங்களில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படும்” த.வெள்ளையன் அறிவிப்பு


“முழு அடைப்புக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவிக்கும் என்றும், தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படும்” என்றும் த.வெள்ளையன் அறிவித்தார்.
ஏப்ரல் 24, 03:00 AM

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் நோக்கம் எதுவும் இல்லாமல் கடந்த 3-ந்தேதி, விவசாயிகள் நடத்திய பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு எங்களின் பேரவை தார்மீக ஆதரவை தந்தது. எனவே 25-ந்தேதி அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று முடிவெடுத்தோம்.

எனினும் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை எண்ணி, பொது நலன் கருதி 25-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பது என்று முடிவு எடுத்திருக்கிறோம். இதனை நாங்கள் ஒரு கவுரவ பிரச்சினையாக நினைக்கவில்லை. எங்கள் நோக்கம் விவசாயிகள் நலம் பெறவேண்டும் என்பது தான். ஏனென்றால் எங்கள் பேரவை அரசியலுக்கு அப்பாற்பட்டது.

தீவுத்திடலில் மாநில மாநாடு

முழு அடைப்பு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் எங்கள் பேரவையை சேர்ந்த 60 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். 65 லட்சம் கடைகள் மூடப்பட உள்ளது. அதேநேரம் 25-ந்தேதி மாநிலம் முழுவதும் தலைநகரங்களில் எமது பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெ றும். மே 5-ந்தேதி சென்னை தீவுத்திடலில் வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலக வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அதேநேரம் சில்லரை வணிகம், சிறு மற்றும் சுய தொழில்கள் பாதிக்காத வகையிலும் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின்போது வணிகர் சங்கங்களின் பேரவை துணைத்தலைவர் பெருமாள், மாவட்ட தலைவர் சவுந்தரராஜன், இளைஞரணி செயலாளர் பி.எல்.ஆல்வின் ஆகியோர் உடனிருந்தனர்.
எச்–1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு பாதிப்பு


‘எச்–1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து அமெரிக்க நிதி மந்திரியிடம் அருண் ஜெட்லி பிரச்சினை எழுப்பினார்.
ஏப்ரல் 24, 04:30 AM

புதுடெல்லி,

‘எச்–1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து அமெரிக்க நிதி மந்திரியிடம் அருண் ஜெட்லி பிரச்சினை எழுப்பினார்.‘எச்–1 பி’ விசா

அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக வழங்கப்படுகிற ‘எச்–1 பி’ விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக டாடா, இன்போசிஸ், காக்னிஸன்ட் போன்ற நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் பெற்று வந்துள்ளன.

அந்த நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையிலான விசாக்களுக்கு விண்ணப்பிக்கின்றன. இதனால் குலுக்கலில் அதிக எண்கள் இடம்பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது; இதனால் அவர்களுக்கே கூடுதல் விசாக்கள் கிடைக்கின்றன என்று கடந்த வாரம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தின்போது, டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றுகிற மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டினார்.ஏன் இந்த குற்றச்சாட்டு?

குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டுமே குற்றம் சாட்டுவது ஏன் என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘இந்த கம்பெனிகள் எச்–1 பி விசாதாரர்களுக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலர்களில் இருந்து 65 ஆயிரம் டாலர் வரையில் (சுமார் ரூ.39 லட்சம் முதல் ரூ.42¼ லட்சம் வரையில்) வழங்குகின்றன. அதே நேரத்தில் இங்கு சிலிக்கான் வேலியில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயரின் ஆண்டு சம்பளம் 1½ லட்சம் டாலர் (சுமார் ரூ.97½ லட்சம்) ஆகும்’’ என கூறினார்.

அது மட்டுமின்றி இத்தகைய நிறுவனங்கள் ஆற்றல் வாய்ந்த பணியாளர்களை அமர்த்துவதும் இல்லை. ஆனால் அதிக அளவில் ‘எச்–1 பி’ விசாக்களை பெற்று விடுகின்றன என அவர் குறிப்பிட்டார்.விசா கட்டுப்பாடுகள்

இந்த நிலையில் ‘‘அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே வேலைகளில் அமர்த்துவோம்’’ என்ற தனது தேர்தல் பிரசார கோ‌ஷத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செயல்பட தொடங்கி உள்ளார்.

அந்த வகையில் ‘எச்–1 பி’ விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன் கையெழுத்து போட்டார். இதன் காரணமாக மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்கும், அதிகபட்ச சம்பளம் பெறுகிறவர்களுக்கும் மட்டுமே ‘எச்–1 பி’ விசா வழங்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே இது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.அருண் ஜெட்லி பிரச்சினை எழுப்பினார்

இந்த நிலையில் வாஷிங்டனில் நேற்று முன்தினம் உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் கலந்தாலோசனை கூட்டத்தின்போது, அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின்னை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சந்தித்து பேசினார்.

அப்போது அவர் இந்திய, அமெரிக்க உறவுகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கினார். ‘எச்–1 பி’ விசா வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் எழுகிற பிரச்சினைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.நிதி அமைச்சகம் அறிக்கை

இதுபற்றி டெல்லியில் மத்திய நிதி அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், ‘‘அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின்னிடம், இந்தியாவின் திறமை வாய்ந்த பணியாளர்களுக்கு ‘எச்–1 பி’ விசா வழங்குவது பற்றிய பிரச்சினையை நிதி மந்திரி அருண்ஜெட்லி எழுப்பினார். அத்துடன் அமெரிக்க பொருளாதாரத்தில் இந்திய நிறுவனங்களும், பணியாளர்களும் செய்து வருகிற பங்களிப்பு பற்றியும் விளக்கினார்’’ என கூறப்பட்டுள்ளது.
இன்று கடும் வெயில் கொளுத்தும் வெளியே நடமாடுவதை தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள்



இன்று 111 டிகிரி வரை கடும் வெயில் கொளுத்தும் எனவும் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏப்ரல் 24, 05:30 AM

சென்னை,

தமிழக உள்மாவட்டங்களில் இன்று 111 டிகிரி வரை வெயில் கொளுத்தும் எனவும், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கவேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனல்காற்று

தமிழகத்தில் கோடைகாலம் முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக வேலூர், சேலம், திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, கரூர், கடலூர் மற்றும் சென்னை மீனம்பாக்கம், திருப்பத்தூர், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசியது. அதன் தாக்கத்தால் வெப்பநிலையும் 100 டிகிரியை தாண்டி காணப்பட்டது. இரவு நேரங்களில் கூட வெப்பம் குறையாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். தொடர்ந்து இந்த பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தாலும் அனல்காற்று வீசுவதும் தொடர்கிறது.

வரும் 4-ந் தேதி அக்னிநட்சத்திரம் என்கிற கத்திரிவெயில் தொடங்கவிருக்கும் நிலையில் மீண்டும் வெப்பக்காற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

வெப்பம் அதிகரிக்கும்

தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 38 செல்சியஸ் குறைந்த பட்சம் 29 செல்சியஸ் வெப்பம் பதிவாகும். சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

உள்மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, நாமக்கல், மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் 41 முதல் 44 செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். இயல்பைவிட 2 முதல் 3 செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாகும். அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது இன்று) அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம். எனவே பகல்நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம். அதே நேரம் சேலம், தர்மபுரி, நாமக்கல், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானி தலா 5 செ.மீ., ஏற்காடு 4 செ.மீ., குமாரபாளையம், பெண்ணுகொண்டாபுரம் மற்றும் ஈரோடு தலா 3 செ.மீ., பெருந்துறை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தலா 2 செ.மீ., கரூர், சத்தியமங்கலம், மணப்பாறை, சோழவந்தான், பர்கூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்காக நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயார்’ அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி



ஜெயலலிதாவின் அரசு தொடர ஓ.பன்னீர்செல்வத்துக்காக நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஏப்ரல் 24, 05:15 AM
சென்னை,

சென்னை சேத்துப்படடு ஏரியை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேத்துப்பட்டு ஏரி அமைந்துள்ள 17 ஏக்கர் நிலத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு சுற்றுலா தலமாகவும், சுற்றுச்சூழல் மாசுபட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் ரூ.43 கோடியில் பிரத்தியேக திட்டம் செய்யப்பட்டது. மாதத்துக்கு சுமார் 13 ஆயிரம் பேர் இங்கு வந்து செல்கிறார்கள். இப்போது இங்கு ரூ.6 கோடி செலவில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதை ஆய்வு செய்ய வந்தேன். குழந்தைகளுக்கு கடல்வாழ் உயிரினங் களை பற்றி தெரிய வேண்டும். அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ஆதாயத்துக்காக பேசுகிறார்

கேள்வி:- தற்போது நடக்கும் ஆட்சி மோடியின் பினாமி ஆட்சி என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அது தவறு. கடந்த 17 ஆண்டுகளாக தமிழகத்தின் உரிமைகளை தி.மு.க. அடகு வைத்தது. மத்தியில் இவர்கள் கூட்டணியில் ஆட்சி இருந்த போது தமிழகத்துக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் அப்போது நினைத்து இருந்தால் பல்வேறு வகையான தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு தீர்வு கண்டு இருக்கலாம். அன்று தீர்வு காண தவறியவர்கள் இன்று இதை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக பேசுகிறார். அதில் உண்மை இல்லை.

கேள்வி:- எம்.எல்.ஏ.க்கள் செந்தில் பாலாஜி, கனகராஜ் உண்ணாவிரதம் இருப்போம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது இதுபோன்ற சூழல் நடக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- 123 எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதா ஆட்சி தொடரவேண்டும் என்று தான் செயல்படுகிறார்கள். மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் சில இடங்களில் இருக்கலாம். முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வரும்போது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் எந்த பிரச்சினையும் இல்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வராது

கேள்வி:- எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்தை கூட்டி முதல்-அமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- இது அவருடைய கருத்தாக இருக்கலாம். எங்கள் பக்கம் இருக்கும் 123 எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

கேள்வி:- துரைமுருகன் 6 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என்றும், மீண்டும் தேர்தல் வரும் என்றும் கூறி வருகிறார். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- பூனை கண் மூடிவிட்டால் உலகமே இருண்டு போய்விட்டது என்று பழமொழி சொல்வார்கள். அதை போல அவர்கள் பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். தூக்கத்தில் இருக்கும் தி.மு.க.வினரை தட்டி எழுப்புவதற்காக இந்த கருத்தை சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி வருகிறது. 6 மாதம் என்ன? 60 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. ஆட்சிக்கு வராது. தேர்தலை எப்போது சந்தித்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

தயாராக இருக்கிறேன்

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் உங்கள் வசம் இருக்கும் நிதி அமைச்சர் பதவியை கேட்பதால் தான் நீங்கள் அவரை பற்றி கருத்து கூறுவதாக பேசப்படுகிறது?

பதில்:- அவருக்கு இந்த பதவி வேண்டும் என்றால், நான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு ஜெயலலிதாவின் ஆட்சி தொடர, கட்சியின் நலன் கருதி நான் வகிக்கும் எல்லா துறைகளையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன்.

கேள்வி:- கட்சியின் நலன் கருதி நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பது போல், முதல்-அமைச்சர் பதவியையும் விட்டுக்கொடுப்பீர்களா?

பதில்:- ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள் என எல்லோரும் விரும்புகிறார்கள். அதற்கு யாராவது ஒருவர் தியாகம் செய்ய வேண்டும். நீங்கள் என்னிடத்தில் நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பீர்களா என்று கேட்டீர்கள். அதனால் என் கருத்தை சொன்னேன்.

அமைச்சரவை பட்டியல்

கேள்வி:- பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சரவை பட்டியலில் மாற்றம் இருக்குமா?

பதில்:- வெளியில் அவர்கள் எதையும் பேச வேண்டாம். தலைமை கழகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வரட்டும். கோரிக்கைகளை பேசி தான் தீர்க்க முடியும்.

கேள்வி:- பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெறுமா?

பதில்:- நாளை (இன்று) உட்கார்ந்து பேசினால் தான் தெரியும்.

கேள்வி:- அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருக்கும் சசிகலா, டி.டி.வி.தினகரன் படங்களை அகற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறியதாக தெரியவருகிறது. அதுதொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுகிறதா?

பதில்:- அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இதுவரை எனக்கு தெரியவில்லை. அவர்கள் தினமும் ஒரு கோரிக்கைகளை வைக்கிறார்கள்.

நான் நம்புகிறேன்

கேள்வி:- கோடைக்காலம் தொடங்கி இருப்பதால் ஏரிகள், குளங்கள் வறண்டு வருகிறது. அதை தடுப்பதற்கும், அதில் இருக்கும் மீன்களை காப்பாற்றுவதற்கும் எதுவும் நடவடிக்கை எடுக்கப்படுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் ‘சீட்’ அமைத்தது போல நீங்கள் எதுவும் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்:- இயற்கை ஒரு பெரிய வரபிரசாதம். அதை அனுசரித்து போகும் அளவுக்கு எல்லா உயிரினங்களுக்கும் ஆற்றல் உள்ளது. அதனால் மீன்களுக்கு பாதிப்பு இருக்காது. தமிழ்நாட்டில் 27 லட்சம் குளங்கள், 38 ஆயிரம் ஏரிகள் இதற்கு தண்ணீர் விட முடியுமா? இயற்கை தான் அதற்கு வழி செய்ய வேண்டும். கோடை மழை கைகொடுக்கும் என்று நான் நம்புகிறேன். மழையை தான் நம்பி இருக்கிறோம். ஏரிகளில் நீர் இருப்பு குறையாமல் இருக்கவும் வழிவகை செய்யப்படும்.

நியாயமில்லை

கேள்வி:- இரட்டை இலையை மீட்பதற்காக பணம் கொடுத்ததாக டெல்லி போலீசில் டி.டி.வி.தினகரன் ஆஜராகி இருக்கிறார். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்:- யாருடைய நிர்ப்பந்தத்தின் பேரில் அல்லாமல், நாங்களாகவே கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் ஆகியோர் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரை சார்ந்த குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்த வேண்டும் என்ற அவர்களின் கருத்தின் அடிப்படையில் அவர் ஒதுக்கப்பட்டார். அவர் சம்பந்தமாக எந்த வித கருத்தையும் எங்களிடம் கேட்பதில் நியாயமில்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
ரெயில் டிக்கெட் கட்டண சலுகை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் வயது வரம்பு 70 ஆக உயர்கிறது?


ரெயில் டிக்கெட் கட்டண சலுகை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் வயது வரம்பை 70 ஆக உயர்த்த ரெயில்வே அமைச்சகம் பரிசீலிக்கிறது.
ஏப்ரல் 24, 04:45 AM

புதுடெல்லி

ரெயில் டிக்கெட் கட்டண சலுகை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் வயது வரம்பை 70 ஆக உயர்த்த ரெயில்வே அமைச்சகம் பரிசீலிக்கிறது.ரெயில்வேக்கு இழப்பு

இந்திய ரெயில்வே அமைச்சகம், பயணிகள் ரெயில்களை இயக்குவதில் ஆண்டுக்கு ரூ.34 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து வருகிறது. இந்த இழப்பில், ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிற 53 பிரிவிலான மானியங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ.1,500 கோடி சலுகை கட்டண வகையில் இழப்பு ஏற்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், ராணுவ வீரர்கள் என பல தரப்பினருக்கும் ரெயில் பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.வயது வரம்பு உயர்த்த பரிசீலனை

இந்த சலுகைகளை குறைப்பதற்கான வழிவகைகளை ரெயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

தற்போது பொதுமக்களில் பெண்களுக்கு 58 வயது, ஆண்களுக்கு 60 வயது முடிந்திருந்தால் அவர்கள் மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகையை பெற முடிகிறது. ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது.

இனி மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 70 ஆக்கி விடலாம் என ரெயில்வே அமைச்சகம் கருதுகிறது. இது தொடர்பாக பரிசீலித்தும் வருகிறது. அது மட்டுமின்றி, மூத்த குடிமக்களுக்கு வழங்கக்கூடிய சலுகையினால் ரெயில்வேக்கு ஏற்படுகிற நிதிச்சுமையை பகிர்ந்து கொள்ளுமாறு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையிடம் கேட்கவும் ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.அதிகாரி தகவல்

இதுபற்றி ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர், ‘‘ஏற்கனவே பயணிகள் ரெயில் கட்டணத்தில் மானியம் வழங்கப்படுகிறது. ராணுவத்தினருக்கான பயண கட்டண சலுகையை பாதுகாப்பு அமைச்சகமும், மூத்த குடிமக்களுக்காக கட்டண சலுகையை சமூக நீதி அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமும், மாணவர்களுக்கான கட்டண சலுகையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஏற்க செய்ய வேண்டும். இதுபற்றி பரிசீலிக்கப்படுகிறது’’ என்று கூறினார்.

எனவே இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் நிம்மதியாக வாழ முடியாதா?'

பதிவு செய்த நாள்23ஏப்
2017
23:16

புதுடில்லி: 'காதலிக்கும்படி எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த நாட்டில், பெண்கள் நிம்மதியாக வாழ முடியாதா' என, சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

காதலிக்க கட்டாயப்படுத்தியதால், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த, 16 வயது மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் தற்கொலைக்கு துாண்டியதற்காக, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தவன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளான்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியதாவது:
இந்த நாட்டில் பெண்கள் நிம்மதியாக வாழ முடியாதா? காதலிக்கும்படி, யாரையும் எவரும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. காதலிக்கும்படி, சிறுமியர், மாணவியர் துன்புறுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. தான் யாரை காதலிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உள்ளது.இவ்வாறு கேள்வி எழுப்பிய அமர்வு, தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
அந்தஸ்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
பதிவு செய்த நாள்24ஏப்  2017 02:16




புதுடில்லி: 'விவாகரத்து பெறும் போது, மனைவிக்கு அளிக்கப்படும் ஜீவனாம்ச தொகை, கணவன், மனைவி ஆகிய இருவரின் அந்தஸ்துக்கு பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

கடந்த, 1995ல் திருமணமாகி, 2012ல், விவாகரத்து பெற்ற தம்பதி தொடர்பான வழக்கை, சமீபத்தில், கோல்கட்டா ஐகோர்ட் விசாரித்தது. விவாகரத்து பெற்ற கணவனின் மாதச் சம்பளம், 63,500 ரூபாயிலிருந்து, 95 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருந்தது. அதே சமயம், விவாகரத்து பெற்ற கணவன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவள் மூலம், ஒரு குழந்தைக்கு தந்தையாகி உள்ளார்.

கணவனின் சம்பளம் அதிகரித்து உள்ளதால், பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வந்த ஜீவனாம்ச தொகையை, 16 ஆயிரம் ரூபாயில் இருந்து, 23 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, கோல்கட்டா ஐகோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கணவன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஆர்.பானுமதி, எம்.எம்.சந்தனகவுடர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறும் கணவன், இருதரப்பின் அந்தஸ்துக்கு பொருந்தும் வகையில், ஜீவனாம்சம் அளிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில், ஜீவனாம்சம் அளிப்பவரின் நிதி நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஜீவனாம்ச வழக்கில், கணவன், மனைவி ஆகிய இருவரது நிகழ்கால சூழ்நிலையை பொறுத்தே, ஜீவனாம்ச தொகை அமையும்.

இந்த வழக்கில், கணவனுக்கு சம்பளம் உயர்ந்துள்ள போதிலும், அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணமாகி, குழந்தை பிறந்துள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும். அதனால், கோல்கட்டா ஐகோர்ட் கூறிய ஜீவனாம்ச தொகை, 23 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ் :  தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு
புதுடில்லி: டில்லியில், தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளது.



விவசாய கடன் தள்ளுபடி, விளை பொருட் களுக்கு உரிய விலை, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், 41 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

எலிகறி சாப்பிடுவது உள்ளிட்ட வித்தியாசமான போராட்டங்களை அவர்கள் நடத்தினர். அவர்களை, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் சந்தித்து பேசினர். டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, நேற்று அவர்களை சந்தித்துபேசினார். இதன் பின், 'போராட்டத்தை, மே 25 வரை ஒத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.

முதல்வர் உறுதி :

இது குறித்து, அய்யாக்கண்ணு கூறியதாவது:

எங்களின் கோரிக்கைகளை, பிரதமரிடம் கூறுவ தாக, தமிழக முதல்வர் உறுதி அளித் தார். தமிழக அரசு சார்பில், அனைத்து உதவி களும் செய்யப்படும் என்றும், அவர் தெரிவித் தார். மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ண னும், கடன் பிரச்னை தொடர்பாக, சில வாக்குறுதி களை அளித்துள்ளார். தமிழகத்தில், எதிர்க் கட்சியினர் நடத்தும் போராட்டங் களுக்கும், நாங்கள் மதிப்பளிக்க வேண்டும்.

வேண்டுகோள் ஏற்பு : இதனால், தமிழக அரசியல் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று,போராட்டம் ஒரு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. தமிழகத் தில் நடக்கும், முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்போம்; கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை எனில், மே 25ல், மீண்டும் போராடு வோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக,கோரிக்கைகள் அடங்கிய மனுவை,முதல்வர் பழனிசாமி யிடம், விவசாயிகள் அளித்தனர்.
சமூக வலைதள குழுக்களால் காங்கேயம் காளைகளை காக்கும் இளைஞர்

பதிவு செய்த நாள்24ஏப்
2017
00:52




ஈரோடு:''அடிமாட்டுக்கு செல்லாமல், பாரம்பரிய காங்கேயம் இனம் காக்க, 'பழையகோட்டை
மாட்டுத்தாவணி, கொங்க கோசாலை' அமைத்து, நாட்டு மாடுகளை வளர்க்க விரும்புவோருக்கு வழிகாட்டுகிறோம்,'' என, கொங்க கோசாலை நிர்வாகி சிவகுமார் கூறினார்.

வறட்சி, குடிநீர், தீவனம் தட்டுப்பாடு, நவீன வாகனங்களின் வருகையால், மாடுகளின் தேவை குறைந்து விட்டது என, பல காரணங்கள் கூறி, நாட்டு மாடுகளை, அடிமாட்டுக்கு விற்பது அதிகரித்துள்ளது.இதனால், நாட்டு மாடுகள், பாரம்பரிய வகைகளாக கூறப்படும் காங்கேயம், உம்பளச்சேரி, மணப்பாறை, குங்கனுார், பர்கூர், ஆலம்பாடி போன்ற ரகங்கள், அழியும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளன.

காங்கேயம் இன மாடுகளை காக்கும் நோக்கில், 'பழையகோட்டை மாட்டுத்தாவணி, கொங்க கோசாலை' நடத்தி வரும், நிர்வாகி சிவகுமார் கூறியதாவது:

பழையகோட்டை பட்டயக்காரர் ராஜ்குமார் மன்றாடியார் தலைமையில், காங்கேயம் இனம் காக்க பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.நாட்டு மாடுகள் அழிவதையும், அடிமாடாக விற்பதையும் தடுக்க, 'பழையகோட்டை மாட்டுத்தாவணி' என்ற மாட்டு சந்தையும், காடையூரில், 'கொங்க கோசாலை' என்ற காங்கேயம் ரக மாடுகளை வளர்க்கும் கோசாலையாகவும் நடத்துகிறோம்.

அமெரிக்காவில், கணினி துறையில் பணி செய்துவிட்டு, நான்காண்டுகளாக இப்பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன். பழையகோட்டை மாட்டுத்தாவணி, ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று சந்தையாக நடக்கிறது. இங்கு, காங்கேயம் மாடுகள் தவிர, வேறு மாடுகளுக்கு அனுமதி இல்லை. கொங்க கோசாலையிலும், 1,500 மாடுகளுக்கு மேல் பராமரிக்கிறோம்.

காங்கேயம் மாடுகளை வளர்ப்பவர்கள், அவற்றை அடிமாட்டுக்கு விற்காமல் தடுத்து, வளர்ப்பவர்களிடம் விற்பவர்கள், ஆர்வலர்களை கொண்டு, வாட்ஸ் ஆப் குரூப்கள், 'கொங்கு நாட்டின் கொங்க காங்கேய மாட்டு ரகங்கள்' என்ற பேஸ்புக் தளத்திலும் இணைத்துள்ளோம்.அடி
மாட்டுக்கு விற்பதைவிட, கூடுதல் தொகை கொடுத்து வாங்குவதால், 95 சதவீதம், அடிமாட்டுக்கு செல்லாமல் தடுத்துள்ளோம். நான்காண்டுகளில், 1,500 மாடுகளுக்கு மேல், விற்பனை செய்துள்ளோம்.

நாட்டு மாடுகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம். நாட்டு மாட்டை ஜல்லிக்கட்டு, கறவை, உழவு, வண்டிகளில் பூட்டி இழுத்தல் என, பல பயன்பாட்டுக்கு விடலாம். நாட்டு மாடுகளை அடிமாடாக்கினால், அதன் விளைவை நமது சந்ததிகள் சந்திக்க நேரிடும், என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்கான விழிப்புணர்வை, சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஏற்படுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய்க்கு பஞ்சமில்லை


நாட்டு மாடுகளின் பால் தரமானது. தேடி வந்து வாங்கி செல்வர். பால் மட்டுமின்றி சாணம், கோமியத்தையும் வருவாய் ஆக்கலாம். ஒரு மாடு ஒரு நாளைக்கு, 10 கிலோ சாணம் இடும். வரட்டியாக தட்டி உலர்த்தினால், நான்கு கிலோவாகும். 10 நாளில், 40 கிலோ வரட்டியை எரித்தால், 15 கிலோ விபூதி கிடைக்கும். ஒரு கிலோ விபூதி, 200 முதல், 350 ரூபாய்க்கு விலை போகிறது.

10 மாடுகள் வைத்திருந்தால், விபூதி மூலம் மட்டும் மாதம், 1.50 லட்சம் ரூபாய் லாபம் பார்க்கலாம். சாணம், கோமியம் மூலம், விபூதி, ஷாம்பு, கொசு விரட்டி, சோப்பு, பஞ்சகவ்யம்
உட்பட, பல்வேறு பொருட்களை தயாரிக்கலாம். இவற்றுக்கு நாங்கள் பயிற்சியும் தருகிறோம். மே, 6, 7ம் தேதிகளில் சுவாமி ஆத்மானந்தா மூலம் பயிற்சியை நடத்த உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

அடிமாடாக விற்பது நஷ்டம்

அடிமாடாக விற்கும் போது, இளம் கன்றுகளைக்கூட குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். கலப்பின மாட்டைவிட, நாட்டு மாட்டை அடிமாடாக வாங்கி செல்பவர்கள், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்று பணமாக்குகின்றனர். அதற்கு மாற்றாக வளர்த்தால், வளர்ப்பவர்கள் நல்ல லாபம் பார்ப்பதுடன், நாட்டு இனங்கள் அழியாமல் காக்கலாம்.

வரவிருக்கும் விசேஷங்கள்


  • ஏப்ரல் 29 (ச) அட்சய திரிதியை
  • ஏப்ரல் 30 (ஞா) ஆதிசங்கரர் ஜெயந்தி
  • ஏப்ரல் 30 (ஞா) ராமானுஜர் ஜெயந்தி
  • மே 01 (தி) மே தினம்
  • மே 04 (வி) அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
  • மே 05 (வெ) மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
'நீட்' நுழைவு தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு
பதிவு செய்த நாள்24ஏப்  2017  01:16




சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில், நீட் தேர்வை கட்டாயமாக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, கடந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த ஆண்டு, தமிழகம் தவிர மற்ற மாநிலங்கள், 'நீட்' தேர்வை ஏற்று கொண்டுள்ளன. தமிழகத்திற்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் மாநிலம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 11.37 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, நேற்று, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் ரகசிய குறியீடு மூலம், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு அறைக்கு வருவது குறித்த விபரங்களும், ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டு உள்ளது.
பெட்ஷீட்டுக்கு முன்பதிவு ஐ.ஆர்.சி.டி.சி., அறிவிப்பு

பதிவு செய்த நாள்  24ஏப்  2017   02:01




பயணிகளின் தேவை கருதி, ரயில்வே நிர்வாகம் பல்வேறு திட்டங்கள், சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், 'ஏசி' வகுப்பு அல்லாத பெட்டிகளில் பயணிப்பவர்கள் சொகுசாக செல்லும் வகையில், 'பெட் -- ரோல்', பெட் ஷீட், கம்பளி, தலையணை ஆகியவற்றை முன்பதிவு செய்து பெறலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வேயின், www.irctc.co.in எனும் இணையதளத்தில், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே உணவும் முன்பதிவு செய்து, பயனடைந்து வருகின்றனர். 'ஏசி' அல்லாத பெட்டிகளில் பயணிப்பவர்கள், 650 ரூபாய் செலுத்தி, 'பெட் ரோல்' முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம். தவிர, 'பெட்ஷீட்', தலையணை, மெத்தை விரிப்பு ஆகியவற்றையும், 450 ரூபாய் செலுத்தி, பெற்று கொள்ளலாம். நெடுந்துார ரயில்களில் பயணிப்பவர்களுக்கு, இது பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Saturday, April 22, 2017

குடியால் அழிந்தது போதும்! - திறக்காதே மூடு

க .தனசேகரன்


#BanTasmacஜெயராணி, படங்கள்: க.தனசேகரன், தே.சிலம்பரசன், ரமேஷ்

குன்றத்தூரில் வாழும் கெளரிக்கு, மூன்று பெண் குழந்தைகள். வீட்டு வேலைகள் செய்து மகள்களை வளர்த்தெடுத்தார். 20 வயதான மூத்த மகள் ராஜேஸ்வரியை, மதுரவாயலைச் சேர்ந்த 26 வயதான பாஸ்கருக்கு மணமுடித்தார். மணமுடிக்கும் தருவாயிலேயே பாஸ்கருக்குத் தீராதக் குடிப்பழக்கம் இருந்தது.

20 வயதுடைய ஓர் இளம்பெண்ணுக்கு, திருமணம் பற்றி என்னென்னவோ கனவுகள் இருக்கும். ஆனால், தினசரி அடிகளும் உதைகளும், பாலியல் துன்புறுத்தல்களும், வசவுகளுமே வாழ்வனுபவமாகக் கிடைத்தன. `குடிக்கிறவன் அடிக்கத்தான் செய்வான். பொம்பள அதை எல்லாம் தாங்கிக்கிட்டுத்தான் குடும்பம் நடத்தணும்’ என்ற அறிவுரைகளுக்கிடையில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. பகலும் இரவுமாகக் குடித்துக்கிடந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், பிள்ளைகளோடு அம்மா வீட்டுக்கு வருவதும், பிறகு மீண்டும் கணவன் வீட்டுக்கு அனுப்பப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தன. திருமணம் முடிந்த நான்காவது ஆண்டில் அதாவது, கடந்த டிசம்பர் 30-ம் தேதி நள்ளிரவு, கொடுமையான தாக்குதலைத் தாங்க முடியாமல் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக்கொண்டார் ராஜேஸ்வரி.

70 சதவிகிதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான்கே நாள்களில் மகள் மரித்தபோது கௌரி வெடித்து அழுத அழுகை, சொற்களுக்குள் அடங்காத துயரம். `குடிகாரக் கணவனின் கொடுமைகளாலேயே தன் மகள் தீக்குளித்தாள்!' எனப் பதிவுசெய்ய, அவர் காவல்நிலையத்துக்கு அலைந்தார். ஆனால், `மருத்துவமனையில்தான் பதிவுசெய்ய வேண்டும்' எனச் சொல்லி, படிப்பறிவற்ற அவரைத் திசை திருப்பினார்கள். ராஜேஸ்வரியின் அநியாயச் சாவு, பதிவுசெய்யப் படாமலேயே முடிந்தது. ஆனால், கௌரியின் துயரம் முடியவில்லை. மகளைப் பறிகொடுத்த முப்பதாவது நாளில் மர்மமாக இறந்துகிடந்தார் மருமகன் பாஸ்கர். இந்த மரணமும் அதற்கான காரணமும் எதிலுமே பதிவுசெய்யப்படவில்லை. மனைவி இறந்த துக்கத்தில் பாஸ்கரன் குடித்தே இறந்துவிட்டதாக, பச்சாத்தாபத்தோடு சொல்லப்பட்டது. தாயையும் தந்தையையும் ஒரே நேரத்தில் இழந்து, மூன்றரை வயது மற்றும் ஒன்றரை வயதேயான குழந்தைகள் பரிதவித்து நிற்கின்றன.



இது கௌரியின் கதை. கெளரியைப்போல, பெற்ற பிள்ளையின் சாவைப் பார்க்கும் பெருந்துயரத்தை நெஞ்சில் ஏந்தும் இந்தத் தலைமுறைப் பெற்றோரின் கதை. மதுப்பழக்கம், `குடிநோய்' ஆக மாற்றப்பட்ட இந்த 15 ஆண்டுகளில், தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் `பெருமைகள்’ ஏராளம். குடிப்பவர் எண்ணிக்கையிலும் குடிக்கும் அளவிலும் முன்னிலை வகிக்கிறது தமிழகம். இந்தியாவிலேயே தற்கொலைகளில் இரண்டாம் இடம். சாலை விபத்துகளில் முதல் இடம். இளவயது மரணங்களில் முதல் இடம். கணவனை இழந்த 30 வயதுக்குட்பட்ட பெண்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு.

இங்கே பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 85 சதவிகிதத்துக்கு குடியே காரணம். குடித்துச் சாகிறவர்களின் எண்ணிக்கையும் இங்குதான் அதிகம். ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர். ஆனால், கௌரியின் கதையைப்போல மறைக்கவும் திரிக்கவும்பட்டவை இந்தக் கணக்கிலேயே சேராது. தற்கொலை என்றால் எதற்கான தற்கொலை, விபத்து என்றால் எப்படியான விபத்து என்பதற்கான உண்மையான காரணங்கள் பெரும்பாலும் மறைக்கப்படுகின்றன. குடியால் நிகழும் தற்கொலைகள், குடும்பத் தகராறில் மனமுடைந்த மரணங்களாக்கப் படுகின்றன; வாகன விபத்துகள்/சாலை மரணங்கள், இன்ஷூரன்ஸுக்காகவும் குடும்பத்தின் பெயரைக் காப்பாற்றவும் ராஷ் டிரைவிங் என மாற்றிப் பதிவுசெய்யப் படுகின்றன. குடியால் மாரடைப்பு, குடியால் ஸ்ட்ரோக், குடியால் கல்லீரல் நோய் போன்றவை, காரணம் மறைக்கப்பட்டு வெறும் நோய் தாக்குதலாகப் பதிவுசெய்யப்படுகின்றன. அரைகுறையான கணக்குகளே குரல்வளையைப் பிடிக்கும்போது, நேர்மையான ஆய்வுகள் செய்யப்பட்டால் குடியால் தமிழகம் அடைந்திருக்கும் இழப்புகள் நூற்றாண்டு காலத்துக்கு ஈடுசெய்ய முடியாததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்களுக்கு இதுதான் பின்னணி. அதிலும் பெண்கள் திரண்டுவந்து போராடுவதன் காரணம் அவர்கள் படும் பாடும், அடையும் இழப்புகளும்தான்! எந்த வீடும் எந்தத் தருணத்திலும் இழவு வீடாக மாறக்கூடிய அவலம் பெருகிநிற்கும் சூழலில் மதுச்சீரழிவு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் அமைதி காப்பது சகிக்க முடியாததாக இருக்கிறது. அதுசரி, சட்டமன்றத் தேர்தலோ நாடாளுமன்றத் தேர்தலோ வந்தால் ஓட்டு வாங்க `மதுவிலக்கு' என்ற முழக்கம் பயன்படும். இப்போது பேசுவதால் அவற்றுக்கு என்ன லாபம்? ஆனால், மக்கள் போராட்டங்கள் அப்படியான லாபங்களை முன்வைத்து நடப்பதில்லை. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள் சில ஆண்டுகளாகவே பெண்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கான சமீபத்திய காரணம் இது.

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் `நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை, 2017 - மார்ச் 31-ம் தேதிக்குள் மூட வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கியபோது, சில மாநில அரசுகள், பல மது ஆலை உரிமையாளர்கள், பல டாஸ்மாக் உரிமம் பெற்றவர்கள் மற்றும் `குடி’மக்கள் ஆகியோர் கடுமையான அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும், நமது `நீதி’ அமைப்பின்மேல் இருந்த நம்பிக்கையில் இந்த மார்ச் 31-ம் தேதி வரையிலும் கால அவகாசத்தை நீட்டிக்கச் சொல்லி காத்துக் கிடந்தன. ஆனால், குடியால் பெருகும் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு `மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்' என உச்ச நீதிமன்றம் கெடுபிடி செய்யவே, தமிழக அரசு திணறத் தொடங்கியது.

புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க, டாஸ்மாக் கடைகளைத் திறப்பது, பார்களுக்கு டெண்டர் விடுவது, கமிஷன் பார்ப்பது போன்ற பொதுநலச் சேவைகளுக்கு மட்டுமே பழக்கப்பட்டவர்களுக்கு, `மூடுதல்’ என்பது முற்றிலும் புதிய அனுபவம். அதனாலேயே `மூடுதல்' என்ற வார்த்தையை `இடமாற்றம் செய்வது’ எனத் தமிழக அரசு அர்த்தப்படுத்திக் கொள்ள முனைகிறது. `இடமாற்றம் செய்வது' என முடிவுசெய்த பிறகு, நெடுஞ்சாலை முழுக்க 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தி, அவரவர் தலையிலா வைத்துக்கொள்ள முடியும் அல்லது காடுகளுக்குள் கொண்டுபோக முடியுமா?

`யார் செத்தால் எனக்கு என்ன, கொள்ளை லாபம் மட்டுமே குறிக்கோள்’ என்ற டாஸ்மாக்கின் டேக்லைனுக்கு நியாயம் செய்தாக வேண்டு மானால், நேராக அவற்றைக் குடியிருப்புப் பகுதிகளுக்கு `ஷிஃப்ட்’ செய்வதைத் தவிர, வேறு வழியில்லை. ஆகவேதான் குடியிருப்புப் பகுதிகளில் அவசர அவசரமாகக் கடைகளைத் திறக்க அது முனைப்புக் காட்டுகிறது. அத்துடன் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்டதாக மாற்றும் சதியும் நடந்தேறுகிறது.

ஆனால், என்ன செய்தாலும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க, மக்கள் முன்புபோல் இல்லையே! தமக்கு எதிரான அநீதிகளை அவர்கள் தட்டிக்கேட்கும் சமூக மாற்றம் நிகழ்ந்திருக்கும் காலகட்டம் இது. கடந்த சில ஆண்டுகளாகவே டாஸ்மாக்குக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், இந்தப் புதிய போர்க்குணம் மதுவுக்கு எதிரான அவர்களின் பழைய வெறுப்புணர்வைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது.



திருப்பூர் சாமளாபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது எனப் பெண்கள் கூடி போராடியதில், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் சாமானியர்கள். குடியின் பாதிப்பை நேரடியாக அனுபவித்தவர்கள் அல்லது கண்ணாரக் கண்டவர்கள்.

கணவனால் துயரப்படும் பெண்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், ஏதும் அறியாத பிஞ்சுகள் குடி எனும் புதைகுழியில் சிக்கி, முளைக்கும் முன்னரே கருகுவதைத் தாய்மார்களால் ஏற்க முடியவில்லை. குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்துவதன் காரணம், தம் பிள்ளைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற பரிதவிப்புதான்.

எந்த ஒரு சீரழிவும் வெகுகாலத்துக்குக் `கொண்டாட்ட முகமூடி'யை அணிந்து கொண்டிருக்க முடியாது. குடிநோயாளிகளைச் சகிக்க முடியாமல் குடும்பங்களும் சமூகமும் துயரப்பட்டு நிற்கின்றன. அந்த அவதியிலிருந்தே மக்கள் போராட்டங்கள் வெடிக்கின்றன. அறியாமை மிகுந்த சமூகம் எந்த அவலத்துக்கும் எதிர்வினையாற்ற தன் நல்வாழ்வை விலையாகக் கொடுத்து, அதற்கான அவகாசத்தை எடுத்துக்கொள்ளும். தமிழக மக்கள், கடந்த சில ஆண்டுகளாகவே மதுச் சீரழிவுக்கு எதிரான தமது போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். ஆனால், கடந்தமுறை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, அதைக் கண்டுகொள்ளவே இல்லை. 2015-ம் ஆண்டில் மதுத் தீங்குக்கு எதிராக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் பெண்களும் பொதுமக்களும் உக்கிரமாகப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட ஜெயலலிதா `படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என அறிவித்தார். அதன்படி, கடந்த மே மாதம் 500 கடைகளை மூட உத்தரவிட்டார். மதுவிலக்கு குறித்து அவருக்கு அடுத்தடுத்து என்ன செயல்திட்டம் இருந்தது என நமக்குத் தெரியாது. எடப்பாடி முதல்வர் ஆனதும், மேலும் 500 கடைகள் மூடப்படும் என அறிவித்தார். ஆனால், உண்மையிலேயே டாஸ்மாக்கை மூடும் எண்ணம் கொண்ட அரசாக இருந்திருந்தால் நெடுஞ்சாலை கடைகளை மூட்டைகட்டி, குடியிருப்புப் பகுதிகளுக்குக் கொண்டுவர இவர்கள் முயற்சி செய்வார்களா?

ஜெயலலிதா அறிவித்தபடி மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவேண்டிய அ.தி.மு.க (அம்மா) அரசு, புதிய தலைவலிகளை மக்களுக்குக் கொடுக்க நினைக்கிறது. சசிகலா குடும்பத்தாரின் `மிடாஸ்' நிறுவன பிசினஸ் பாதிக்கப்படும் என்ற வருத்தம் அதற்கு. அதுமட்டுமல்ல, மக்கள் போராட்டங்களை காவல் துறையைக்கொண்டு ஒடுக்கி, தமிழகத்தை போலீஸ் ஸ்டேட்டாக மாற்றவும் முயல்கிறது. மக்களின் கால்களில் கை வைக்கவே காவலர்களுக்கு அதிகாரம் இல்லாதபோது, தலையைக் குறிபார்த்து அது தாக்குதல் நடத்துகிறது. மரியாதைக்குரிய காவல் துறையினர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், மக்கள் போராட்டங்கள் காவலர்களுக்காகவும் தான் நடக்கின்றன. காவலர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம்தானே! காவலர்களில் பலர் இளவயதில் மாரடைப்பால் இறப்பதற்கும் தற்கொலை செய்துகொள்வதற்கும் மதுப்பழக்கம் காரணமாக இருப்பதை அவர்களால் வெகுகாலத்துக்கு மறைக்க முடியாது. தமிழகத்தில் உருவாக்கப்படும் குழப்படிகள், அரசு என ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகத்தை வலுக்கச்செய்யும் நிலையில், காவல் துறையின் கட்டவிழ்ப்பு அதற்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது.

அதனாலேயே `மூடு டாஸ்மாக்கை மூடு!’ என்ற மக்கள் போராட்டங்கள் அதிகரிக்கின்றன. அந்த முழக்கம் ஒன்றே மாற்றுத்தீர்வுகளை நோக்கி அரசை நகர்த்தும். மதுக்கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான நெருக்கடியை அது கொடுக்கும். தமிழக அரசின் மதுக்கொள்கையில், கள்ளச்சாராய ஒழிப்பு குறித்துதான் விளக்கப்பட்டிருக்கிறது. மெத்தனால் என்ற எரிசாராயத்தில் செத்தவர்களின் கணக்கை டாஸ்மாக் வழங்கும் எத்தனால் என்ற `நல்ல’ சாராயத்தை அளவில்லாமல் குடித்துச் செத்தவர் களின் எண்ணிக்கை மிஞ்சுகிறது. ஆனாலும், நல்ல சாராயத்துக்கான எந்த விதிமுறைகளும் கடந்த ஆட்சிகளில் புதிதாக வகுக்கப்படவில்லை.

அத்துடன் பொதுவான மதுக்கட்டுப் பாட்டுக்கான எந்த விதிமுறையும் அதில் இல்லை. 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுவை விற்கக் கூடாது, பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களிலிருந்து 50 மீட்டருக்குள் டாஸ்மாக் கடைகளை அமைக்கக் கூடாது என்ற இரண்டே விதிகள், போனால் போகட்டும் எனச் சேர்க்கப்பட்டன. இவை இரண்டுமே மதிக்கப் படவில்லை என்பதற்கான ஆதாரம்தான், சமூக வலைதளங்களில் அவ்வப்போது சுற்றுக்கு வரும் பள்ளிச் சீருடையுடன் மாணவ-மாணவிகள் டாஸ்மாக்கில் நிற்கும் புகைப்படங்களும் வீடியோக்களும்! குடியிருப்புப் பகுதிகளில் கடைகளை வைக்க எதிர்ப்பு பரவுவதால் பள்ளி கேன்டீனிலும் வழிபாட்டுத்தளங்களுக்குள்ளும் மதுவைக் கொண்டுபோனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.



பல தன்னார்வ இயக்கங்கள், மதுக்கட்டுப் பாட்டுக் கொள்கைக்கான மாதிரி வரைவை பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கியுள்ளன. டாஸ்மாக்கை மூடு என்பதோடு சேர்த்து மக்கள் பல கோரிக்கைகளை முன்வைக்கவேண்டியிருக்கிறது. அதில் முக்கியமானது, குடிமுறிவு மற்றும் மறுவாழ்வு மையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது.

இரண்டாவது கோரிக்கை, மதுத்தீங்கு குறித்த விழிப்புஉணர்வுப் பிரசாரத்தை முடுக்கிவிடுவது. தமிழகக் குடிகாரர்களில் 40 சதவிகிதம் பேர் படிப்பறிவு குறைந்த அடித்தட்டுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மதுத்தீங்கு குறித்த அறிவை இதுபோன்ற கட்டுரைகளைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு நேரடியாகப் போய் சேரும் வகையில் வானொலி, சுவரொட்டிகள், தொலைக்காட்சி ஊடகங்களில் விளம்பரங்கள் செய்து புதிதாகக் குடிக்க வருபவர்களை, குறிப்பாக பருவ வயதினரைத் தடுக்கும் வேலையை அரசு தொடங்க வேண்டும். மது குடித்தால் கேடு உண்டாகும் என்பதை, பாட்டிலை வாங்கிப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் படுமோசமான நிலையே நிலவுகிறது. பெற்றோரின் கண்ணீரையும் மனைவியரின் கோபத்தையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பருவ வயதினரையும் இளைஞர்களையும் டாஸ்மாக்கின் பக்கம் போகாமல் தடுக்கும் வழிகள் எதுவுமே நம்மிடம் இல்லை. மது விற்பனையில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அரசு, குடிநோய் சிகிச்சைக்கு சில நூறு கோடி ரூபாய் ஒதுக்கும் அரசு, மதுவுக்கு எதிரான விழிப்புஉணர்வுப் பிரசாரத்துக்கு அரசு ஒதுக்கியிருக்கும் நிதி வெறும் ஒரு கோடி ரூபாய்தான்.

எயிட்ஸ், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், காலரா, டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா என விதவிதமான வைரஸ்களுக்கு எவ்வாறெல்லாம் பிரசாரம் நடந்தன! இங்கே எவரையுமே கொல்லாத `எபோலா'வுக்குக்கூட எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என எவ்வளவு விரட்டல்கள்! ஆனால், கண்ணுக்கு எதிரே இத்தனை பேர் குடித்துச் சாகும்போது அது குறித்து அரசு சார்பில் யாரேனும் பேசினார்களா? ஆளும் கட்சி பேசியதா? ஊடகங்கள்தான் பேசினவா? தமிழகத்தில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் மதுவால் சாகிறார்கள். ஆனால், ஏன் இந்தச் செய்தி பரபரப்பாக்கப்படவில்லை? டாஸ்மாக் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளை யடிக்கும் அரசியல்வாதிகளிடம்தான் மக்கள் தமக்கான நீதியைப் பெற வேண்டும் என்பது வேதனையான முரண்.

குடி என்பது, வெறும் ஆரோக்கிய சீர்கேடு மட்டும் அல்ல; அது மக்களைச் சிந்திக்கவிடாமல் செய்கிறது. தமக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகச் செயலாற்றவிடாமல் முடக்குகிறது. அவர்களின் நுண்ணறிவையும் நுண்ணுணர் வையும் கெடுக்கிறது. நாட்டின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுக்கிறது. ஏற்கெனவே, தமிழகம் பல வகைகளிலும் வஞ்சிக்கப்படும் நிலையில் மக்கள் தம் திராணி அனைத்தையும் திரட்டிப் போராடவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இப்போதுகூட நடக்கும் பொதுவான மக்கள் போராட்டங்களில் பெண்களும் மாணவர்களுமே பெரிதளவில் கலந்துகொள்கின்றனர். நடுத்தர வயது
ஆண்கள் எங்கே போனார்கள்? கட்சி சார்பில் நடத்தப்படும் மறியல், கடை அடைப்பில் மட்டுமே போதையில் இவர்களைப் பார்க்க நேர்கிறது. ஒரு தலைமுறையை முடக்கிவிட்டு அடுத்த தலைமுறையைக் குறிவைத்து அடங்காப் பசியுடன் அலைகிறது மதுச் சீரழிவு.

`2020-ம் ஆண்டில், அதிக இளைஞர்களைக்கொண்ட இளமையான நாடாக இந்தியா இருக்கப்போகிறது' என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அந்த இளைஞர்கள் ஆரோக்கியத்தை இழந்தவர்களாக, அறியாமை மிகுந்தவர்களாக, நாட்டின் அவலங்களை எதிர்க்க முடியாதவர்களாக இருக்கப்போகிறார்கள் என்பது மறைக்கப்பட்ட உண்மையாக உறங்கிக்கிடக்கும். இந்த நாட்டின் மனிதவளமும் பேராற்றலும் எத்தகைய அவலத்தில் தத்தளிக்கின்றன பாருங்கள்!

மதுவும் மதமும்தான் இந்தியாவில் மாஃபியா. அரசு, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெருந்தொழிலதிபர்கள், சமூகவிரோதிகளின் கூட்டுதான் இந்தியர்களைக் குடிகாரர்களாக்குகின்றன. இந்தச் சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்வதுதான் மக்களுக்கு இருக்கும் உடனடியான சவால். தலைமேல் குண்டு போட்டுக் கொல்வது மட்டுமல்ல, ஆபத்தான அணுமின் நிலையங் களையும் திட்டங்களையும் நம் தலைமேல் கட்டுவது மட்டுமல்ல, போதைப்பழக்கத்தைப் பரவச் செய்து உடல்நலனைக் கெடுத்து, சிந்திக்கவிடாமல் செய்வதும் இன அழிப்புச் சூழ்ச்சிதான். அந்தச் சூழ்ச்சிக்கு யார் துணை போனாலும், அது இனத் துரோகம்தான். தமிழகக் குடும்பங்கள் இவற்றை உணர்ந்து தன்னெழுச்சிப் பெற்றாலேயொழிய மீள முடியாது.

மக்களுக்கு நல்லது செய்வதுதான் அரசின் கடமை. அடித்தட்டு மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து காக்கும் ரேஷன் கடைகள் மூடப்படுகின்றன. குடிநீர் கிடைக்க வில்லை. அரசுப் பள்ளிகளின் தரமும் எண்ணிக்கையும் குறைக்கப் படுகிறது. இயற்கைவளங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன. சாதியவாதமும் மதவாதமும் தலைதூக்குகின்றன. உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இவற்றைத் தடுக்க வழிசெய்யாமல் மதுக்கடைகளைப் பாதுகாக்க ஓடோ ஓடென்று ஓடுகிறது தமிழக அரசு. மாநிலக் கட்சிகளை அழித்தொழித்துவிட்டு அரியணையில் அமரத்துடிக்கும் பா.ஜ.க-வின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க வேண்டுமானால், ஆளும் கட்சி மட்டுமல்ல... எதிர்க்கட்சி உள்பட அனைத்து மாநிலக் கட்சிகளுமே மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்தால் மட்டுமே, இனி அவை பிழைக்க முடியும்.

கருணாநிதி, ஜெயலலிதா காலம்போல் இது இல்லை. கால மாற்றத்தைப் புரிந்துகொண்டு மக்கள் சேவைக்குத் தயாராவதே தமிழக அரசியல்வாதிகளுக்கான தற்காப்பு!

மது அருந்துவதால் உண்டாகும் தீவிர பாதிப்புகள் இவை.

* 21 வயதுக்குக் கீழ் மது அருந்தும் பழக்கமிருந்தால், இந்தப் பாதிப்புகள் பன்மடங்கு மூர்க்கமாக இருக்கும்.

* மூளை, நுரையீரல், எலும்பில் காசநோய் வரலாம். சிறுநீரகங்கள் பழுதடையும்.

* உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். ஊட்டச்சத்துக் குறைபாடு உண்டாகும்.

* தசைகள் தளர்ச்சியடையும். உடல் உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படும்.

* நரம்பு மண்டலம் பலவீனமடைந்து, நரம்புத்தளர்ச்சி வரும். கை, கால்களில் நடுக்கம் இருக்கும். வலிப்புநோய் வரலாம்.

* புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* கணையம் பாதிக்கப்படும். இன்சுலின் சுரப்பதில் குறைபாடு ஏற்பட்டு, நீரிழிவுநோய் வரும்.

* ஹார்மோன்கள் சுரப்பதில் குறைபாடு இருக்கும் என்பதால், ஆண்மைக்குறைவு ஏற்படும். உடல் உறவில் நாட்டம் குறையும்.

* நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுக்கோளாறுகள் வரும்.

* இதயநோய்கள் வரும் வாய்ப்புகளும் அதிகம். மதுவுடன் சேர்த்துச் சாப்பிடும் உணவுகள், அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

* பார்வை பறிபோகும்.

* வயிறு தொடர்பான பிரச்னைகள் அதிகம் வரும். வயிறு வீக்கம், வலி, வயிற்றுப்புண் வரும். கல்லீரல் அதிகமாகப் பாதிக்கப்படும்.

* மூளை வளர்ச்சி பாதிப்பதுடன் ரத்தக்கசிவும் ஏற்படும். சிந்திக்கும் ஆற்றல், நினைவாற்றல் குறையும். மனச்சிதைவு நோய் வரும். குழப்பமான மனநிலை இருக்கும். வார்த்தைகள் தெளிவின்றி பிறழும்.

டீன் - ஏஜ் குடிகாரர்கள்

தமிழகத்தில் வயது வந்த ஆண்களில் 30-35 சதவிகிதம் பேர், குடிப்பழக்கம் உள்ளவர்கள். இதனால் 40 வயதுக்குட்பட்ட இளவயது மரணங்கள் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன. குடிகாரக் கணவனால் படும் துயரங்கள், தமிழகப் பெண்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டன. ஆனால் எது புதிது எனில், தம் பருவ வயது மகனைப் போதையில் பார்ப்பது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் மதுவுக்கு அறிமுகமாகும் வயது 25. ஆனால் இப்போது, 12-13 வயதில் பிள்ளைகள் மதுவைச் சுவைக்கின்றனர். உடல் உறுப்புகள் 13-21 வயது வரைதான் வேகமாக வளர்ச்சியடைகின்றன எனும்போது, அந்த வயதுகளில் மது அருந்துவது உடல் உறுப்புகளைச் சிதைத்து, நிரந்தர நோயாளிகளாக மாற்றி, ஆயுளையும் குறைத்து விடுகிறது.

மருத்துவர்கள் எங்கே?

தமிழகத்தில் சுமார் இரண்டு கோடி பேருக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது, அதில் 13 சதவிகிதம் பேர் தினமும் குடிப்பவர் எனும்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள மனநலப் பிரிவுகள் எத்தனை பேருக்குச் சிகிச்சை அளிக்க முடியும்? அதுமட்டுமின்றி, குடி முறிவுச் சிகிச்சைக்கு என பிரத்யேகமாகப் பயிற்சிபெற்ற மனநல மருத்துவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர் மட்டுமே இருக்கிறார் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

தமிழகத்தில் சுமார் 12 லட்சம் கல்லீரல் நோயாளிகள் உள்ளனர். கல்லீரல் வீக்கம், கல்லீரல் புற்றுநோய், லிவர் சிராசிஸ், ஹெபடைட்டிஸ் பி, சி எனக் குடி நோயாளிகள் கடுமையான கல்லீரல் பாதிப்பால் அவதிப் படுகின்றனர். சிராசிஸ் முதல் சைக்கோசிஸ் வரை குடிநோயாளிகள் எதிர்கொள்ளும் உடல்/மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பிரத்யேகக் குடி முறிவுச் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட வேண்டும். ஐந்நூறு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நூறு சுகாதார நிலையங்களையாவது திறப்பது.
அரசுக்கு நாட்டில் உள்ள விதவைகளைப் பற்றி கவலையில்லை - உச்ச நீதிமன்றம் சாடல்!

ர.பரத் ராஜ்




கடந்த 2007-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் விருந்தாவனில் உள்ள விடுதிகளில் இருக்கும் விதவைகளின் நிலையைப் பற்றி விவரித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம், 'மத்திய அரசு தேசிய பெண்கள் ஆணையத்துடன் இணைந்து நாட்டில் இருக்கும் விதவைகளின் நிலையை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று கூறியது. இதையடுத்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் 'தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று உத்தரவாதம் கொடுத்தது. ஆனால், இப்போது வரை அந்தப் பணிகள் துவங்கப்படாத நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசை விமர்சித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் மதன் பி.லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியார் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, 'உங்களுக்கு நாட்டில் இருக்கும் விதவைகளைப் பற்றி கவலையில்லை. நீங்கள் அவர்கள் நலன் சார்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் எதையும் செய்ய விரும்பவில்லை. ஆனால், இதைப் பற்றி நீதிமன்றம் கருத்து கூறினால், நாங்கள் தான் அரசை நடத்துகிறோம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்.' என்று கூறியுள்ளனர்.
எப்போது தீரும் சோமாலியாவின் சோகம்?
அஷ்வினி சிவலிங்கம்

சோமாலியாவில் நிலவி வரும் வரலாறு காணாத பஞ்சத்தால், அங்கு உள்ள மக்களுக்கு சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு உயிரிழந்து வருவதாக சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.




கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடும் பஞ்சத்தால் சுமார் 2,70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படக்கூடும் என்று கடந்த பிப்ரவரி மாதம் யூனிசெஃப் எச்சரித்திருந்தது. யூனிசெஃப் எச்சரித்தப்படி தற்போது அங்கு சூழல் மோசமாகி வருகிறது. அங்குள்ள குழந்தைகள் ஊட்டசத்து இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி மோசமான சுகாதாரம் காரணமாக குழந்தைகளுக்கு காலரா உள்ளிட்ட நோய்கள் தாக்கி உள்ளன.

கடந்த மாதம் அங்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கு 48 மணி நேரத்தில் 110 பலியானார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மீண்டும் அது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக சோமாலியாவில் உதவி செய்து வரும் தொண்டு நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. சோமாலிய அதிபர் முகமத் அப்துல்லாஹி முகமது பஞ்சத்தை தீர்க்க முடியாமல் தவித்து வருகிறார். வறட்சி, சுகாதார சீர்க்கேடு மட்டுமில்லை தற்போது இருப் பிரிவினர் இடையே கலவரங்கள் ஏற்பட்டு மேலும் மேலும் அங்குள்ள மக்களை வாட்டி வதைத்து வருகின்றன.
உங்கள் மொபைல் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்? #MobileTips
கார்க்கிபவா





மொபைல்போன் மலிவாகிவிட்டது. ஆனால், அதன் உதிரிபாகங்கள் விலை குறைவதே இல்லை. டச் ஸ்க்ரீன் மாற்ற நேர்ந்தால், மொபைல் விலையில் பாதியை கேட்கிறார்கள். போலவே, பேட்டரியை மாற்றுவதென்றாலும் அதிக பணத்தை கொடுக்க வேண்டியிருக்கிறது. பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும், என்ன காரணங்களால் பேட்டரி செயலிழக்கும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

1) அடிப்படையான விஷயத்தில் இருந்தே தொடங்குவோம். நீண்ட நேரம் சார்ஜில் இருந்த பின்னும் மொபைல் ஆன் ஆகவே இல்லையென்றால், பேட்டரி கதை முடிந்தது என அர்த்தம். புது பேட்டரி மாற்றுவதற்கு முன் அதே மாடல் பேட்டரி கிடைத்தால் போட்டு செக் செய்யலாம். விலை மலிவு என்பதற்காக போலி பேட்டரிகளை வாங்க வேண்டாம். அது நன்றாக இருக்கும் மொபைலையும் சேர்த்து கெடுத்துவிடும்.

2) சில பேட்டரிகள் வலுவிழுந்த யானையை போன்றது. தனக்குள் சக்தியை ஸ்டோர் செய்து, அதிலிருந்து மொபைலுக்கு அனுப்பும் திறனை இழந்திருக்கும். சார்ஜ் போட்டால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மொபைல் இயங்கும். சார்ஜில் இருந்து எடுத்த உடன் மொபைல் ஆஃப் ஆகிவிடும். இந்த பேட்டரியை உடனே மாற்ற வேண்டும். ஆபத்துக்கு உதவுவதாக எப்போதும் சார்ஜிலே போட்டு பயன்படுத்தினால், அது மொபைலையே வீணடித்துவிடும்.

3) அனைத்து ரீசார்ஜபிள் பேட்டரிகளும் சூடாகும். ஆனால், அந்த சூடு வெளியே தெரியாத அளவுக்கு தயாரிக்கப்படும். அதையும் மீறி, பேட்டரி சூடானால் அதன் வாழ்நாள் முடிவை நெருங்குகிறது எனப் பொருள். அதே சமயம், எப்போது சூடாகிறது என்பதை கவனிக்கவும். நீங்கள் அதிக நேரம் வெயிலில் சுற்றினால், அதனால் கூட மொபைல் சூடாகலாம். காரில் சென்றால் கூட வெயில் படும் இடத்தில் மொபைல் நீண்ட நேரம் இருந்தால் சூடாகும்.

4) பேட்டரி குண்டாகும். நோக்கியா 3310 காலங்களில் இது அதிகம் நடந்தது. காரணம், இரவு முழுவதும் சார்ஜில் போட்டு வைத்ததே. இப்போது வரும் சார்ஜர்கள், மொபைல் 100% சார்ஜ் ஆனதும் தானாக ஆஃப் ஆகிவிடும் என்பதால், பேட்டரிக்கு அந்தப் பிரச்னை இருப்பதில்லை. ஆனாலும், வேறு சில காரணங்களால் பேட்டரி குண்டாகலாம். இப்போது பெரும்பாலான மொபைல்களில் பேட்டரியை தனியே எடுக்க முடியாது. அதனால் பேட்டரி உருமாறியிருக்கிறதா என்பதை ஸ்பின் டெஸ்ட் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஸ்பின் டெஸ்ட் என்றதும் பெரிய விஷயம் என நினைக்க வேண்டாம். சமதளத்தில், பேட்டரி இருக்கும் திசை கீழிருக்கும் படி மொபைலை வைக்கவும். இப்போது மொபைலை பம்பரம் போல சுற்றிவிட்டால், குண்டான பேட்டரி சுற்றும்.



5) ஆண்ட்ராய்டு யூஸர்கள் *#*#4636#*# என்ற எண்ணை டயல் செய்யலாம். உங்கள் பேட்டரியின் தற்போதைய மெடிக்கல் ரிப்போர்ட்டை அது சொல்லிவிடும்.

6) சில பேட்டரிகள் நன்றாக சார்ஜ் ஏறும், 50% குறையும் வரை பிரச்னை இருக்காது. ஆனால், அதன் பின் சில நிமிடங்களிலே மொத்த சார்ஜும் குறைந்து மொபைல் ஆஃப் ஆகிவிடும். இதுவும், பேட்டரியின் பிரச்னைதான். இப்படி, சக்தி சீராக ஏறி இறங்காமல் இருந்தால் அந்த பேட்டரியையும் மாற்றி விடுவது நல்லது.

பேட்டரியை மாற்றும்போது முடிந்தவரை அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாற்றுவது நல்லது. ஏனெனில், சில சமயம் மொபைல் பிரச்னையை நாம் பேட்டரி பிரச்னை என எண்ணி விடலாம். சர்வீஸ் சென்டரில் அதை சோதித்து சொல்லிவிடுவார்கள்.

விடுமுறைகளை விலக்குவோம்

By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்  |   Published on : 22nd April 2017 01:31 AM  | 
அண்மையில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 'நாட்டுக்காகவும், சமூகத்துக்காகவும், உழைத்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் ஆகியவற்றுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது சிறிதும் தேவையற்றது.
ஏனெனில், பல மாணவர்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது ஏன் என்பதுகூட தெரியவில்லை. எனவே, தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களில், பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி அத்தலைவர்களைப் பற்றி மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
அதனால், இனி தலைவர்களின் பிறந்த நாள்கள் மற்றும் நினைவு நாள்கள் ஆகியவற்றுக்கு இனி உத்தரப் பிரதேசத்தில் விடுமுறைகள் கிடையாது' என அதிரடியாக அறிவித்துள்ளார்.
பொதுவாக நம் நாட்டு பள்ளிக்கூடங்களில் வருஷத்திற்கு 220 நாட்களாவது வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பல பள்ளிகள் இந்த விதிமுறையைப் பின்பற்றுவது கிடையாது.
சமீபக் காலமாக பள்ளிகள் பல்வேறு காரணங்களைக் காட்டி, பல சந்தர்ப்பங்களில் அரசியல் காரணங்களாக விடுமுறைகளை அறிவித்து விடுகின்றன.
இந்த சிறப்பு விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? எப்படி பொழுதைக் கழிக்கிறார்கள்? பெரும்பாலான மாணவர்கள் இந்த சிறப்பு விடுமுறை நாட்களில் வீட்டில் தங்குவதில்லை.
வெளியே நண்பர்களுடன் அரட்டையடிப்பதிலும், தொலைக்காட்சியிலும், கணினியிலும், செல்லிடப்பேசியிலும் திரைப்படங்களைக் கண்டு களிப்பதிலும் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள். இந்த நண்பர்களுடனான சந்திப்பு பல நேரங்களில் சண்டைச் சச்சரவுகளில் தான் முடிகிறது.
இதனால், வீட்டிலும் பிரச்னை, வெளியிலும் பிரச்னை. மேலும், இந்நாட்களில் திரை அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. விடுமுறை எந்த நோக்கத்திற்கான விடப்படுகிறது என்று மாணவர்களுக்குத் தெரியவில்லை.
எனவே, எந்தவித பயனுமில்லாமல் மாணவர்கள் தேவையற்ற வகையில் பொழுதைக் கழிப்பதற்காகவே விடப்படும் இத்தகைய விடுமுறைகள் தேவைதானா?
பள்ளி மாணவர்கள், இனி முக்கியத் தலைவர்கள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களை நினைவு கூர்ந்து, அவர்களை பற்றிய நல்ல விவரங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் தலைவர்கள் தொடர்பான விடுமுறை நாட்களின் போது சுதந்திரப் போராட்ட தியாகிகள் இந்திய விடுதலைக்காகவும், சமூக நீதிக்ககாவும், தீண்டாமை, ஜாதி ஒழிப்பு போன்றவற்றிக்காக போராடி வென்றதையும், அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, வறுமையில் உழன்று, தூக்கு மேடையையும் துச்சமென மதித்து நம் நாட்டிற்கு எவ்வாறு சுதந்திரம் வாங்கித் தந்தார்கள் என்பதையும் எடுத்துக் கூறி மாணவர்கள் ஊக்கம் பெறும் வகையில் அன்றைய தினம் பள்ளியில் வகுப்பு எடுக்க வேண்டும்.
சுயநலமில்லாமல் பொது நலத்துடன் போராடிய அந்தத் தலைவர்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்கக் கொடுக்க வேண்டும். இதனால், அவர்களுக்கு நாட்டுப்பற்று அதிகரித்து, அத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் எதிர்காலத்தை செம்மைப்படுத்த உதவும்.
அதுபோல சமயத் தலைவர்களின் விடுமுறை நாள்களின் போது அவர்கள் எடுத்துரைத்த அரிய உண்மைகளையும், அவர்கள் வாழ்வில் நடந்த சீரிய நிகழ்ச்சிகளையும், சிறந்த கொள்கைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பாடங்களை போதிக்க வேண்டும்.
கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று இந்து மதம் கூறியுள்ளவதையும், அரசனாகப் பிறந்த சித்தார்த்தன் எவ்வாறு புத்தன் ஆனார் என்பது குறித்தும், அவரது போதனைகளில் தலையாயதான ஆசையே எல்லா துயரத்திற்கும் காரணம் என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.
பல பேரரசுகளை வென்று மாவீரரான அலெக்ஸாண்டர், நான் என்ற அகந்தையை கைவிட்டது, வர்த்தமானர் எவ்வாறு மகாவீரரானவர் என்பது, மனிதர்களில் ஜாதி மத பேதமில்லை என்றுரைத்த குருநானக் சிந்தனைகளையும் போதிக்க வேண்டும்.
உன்னைப் போல் பிறரையும் நேசி என்று கிறிஸ்தவ மதமும் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் என்ற நபிகள் நாயகம் போதனைகளை அருளிய இஸ்லாம் மதமும் மக்களிடையே இணக்கமான அன்பையே போதிக்கின்றன.
இவற்றை விடுமுறை நாட்களில் மாணவர்களிடம் எடுத்துரைத்தால் இளமையிலே மாணவர்களிடையே சமய நல்லிணக்கம் வளர்வதுடன், வேற்றுமையில் ஒற்றுமையுடன் விளங்கி ஒற்றுமையுடன் பழகுவார்கள்.
இதனால் மாணவர்களிடையே கல்வி அறிவுடன், ஒழுக்க சிந்தனையும் ஒருங்கே வளர்வதனால் எதிர்காலத்தில் சாதி, சமய பேதமற்ற சமுதாயத்தை நம்மால் உருவாக்கவும் முடியும்.
விடுமுறை நாட்களில் மாணவர்களின் எண்ணங்கள் நல்வழி காண மடை மாற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி பள்ளிகளில் அவ்வப்போது விடப்படும் தேவையற்ற விடுமுறைகளை விலக்குவதுதான்.
காலத்தை வீணாக்குவது என்பது வாழ்வையே வீணடிப்பது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது. உலகில் உள்ள அரியவற்றிலெல்லாம் தலையாது நேரம்தான். அதனை விலை கொடுத்து வாங்க முடியாது. எனவே மாணவர்கள் விடுமுறை நாட்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் உற்ற துணையாக இருக்க வேண்டும்.

வாட்ஸ் அப் வம்பு

2017-04-20@ 14:17:10




நன்றி குங்குமம் டாக்டர்

விரல்கள் பத்திரம்

தொழில்நுட்பம் வளர்வதற்கு இணையாக தொல்லைகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆமாம்... வாட்ஸ்-அப் அதிகமாகப் பயன்படுத்துகிறவர்களுக்கு WhatsAppitis என்ற பிரச்னை ஏற்படுகிறது என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லட்சுமிநாதனிடம்இந்தப் புதிய பிரச்னை பற்றி கேட்டோம்...

‘‘வாட்ஸ்-அப்பை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் கைகளில் ஏற்படும் அழற்சியையே வாட்ஸப்பைட்டிஸ் என்கிறார்கள். அதாவது, வாட்ஸ்-அப் தொடர்ந்து பயன்படுத்தும்போது விரல் எலும்புகள் மற்றும் சவ்வு பகுதியில் வலி, வீக்கம், எலும்பு தேய்மானம், விரல்களை இணைக்கிற இணைப்பில் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று சர்வதேச அளவில் வாட்ஸப்பைட்டிஸ் என்பது அதிகரித்து வருகிற பிரச்னையாகவும் உருவாகி இருக்கிறது.

உடலின் ஒரே பகுதியில் ஏற்படும் அதீத அழுத்தத்தால் உண்டாகும் வலியை Repetitive strain injury என்கிறோம். வாட்ஸப்பைட்டிஸ் அந்த வகைகளில் ஒன்றுதான்.தொடர்ந்து வாட்ஸ்-அப்பில் டைப் செய்துகொண்டே இருக்கும்போது கையில் உள்ள Interphalangeal joint, metacarpophalangeal joint, Wrist joint போன்ற பகுதிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும். இதனால் கட்டைவிரல் நரம்பு மற்றும் சவ்வு பலவீனமாகி வீக்கம் அடைந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

அதனால், அதிக நேரம் வாட்ஸ் -அப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அவசியத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தைராய்டு தொந்தரவு உள்ளவர்கள், வயதானவர்கள், நீரிழிவு உள்ளவர்கள் வாட்ஸ்-அப்பில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு எளிதில் விரல் வீக்கம், தேய்மானம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது.
கம்ப்யூட்டரில் பணிபுரிகிறவர்களுக்கும் இதேபோல் அதிக உடல் சோர்வு ஏற்பட்டு கை, கழுத்து, முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடைந்து வலி உண்டாகிறது. இவர்களும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நேரத்தை அளவோடு பயன்படுத்தி, தேவையான ஓய்வையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கைகள் மற்றும் விரல்களில் வலி இருப்பவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதுபோன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை, ஒத்தடம் அல்ட்ரோ தெரபி, மாத்திரைகள், கை உறை, பெல்ட் அணிவது போன்ற பல சிகிச்சைகள் இருக்கின்றன என்பதால் கவலை வேண்டியதில்லை.பொதுவாக, தொழில்நுட்பம் வளர்வதற்கேற்ப வேலை செய்யப் பழகிக் கொள்வதுபோல் அதற்கேற்ப நம் உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில்லை. அதுதான் இதுபோன்ற தொந்தரவுகளுக்கு காரணம். அளவோடு பயன்படுத்தி, ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாண்டால் இதுபோன்ற தொந்தரவுகள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும்’’ என்கிறார்.

- க.இளஞ்சேரன்
பேரு பழசு... மேட்டர் புதுசு...

2017-04-21@ 12:14:07




நன்றி குங்குமம் டாக்டர்

உணவே மருந்து

‘‘பழைய சோறு என்றால் இரவில் மீந்து போன சோறு என்று மட்டுமே அர்த்தம் இல்லை. நம் முன்னோர்கள் அதன் பெருமைகளை உணர்ந்தே சாதத்தினை இரவுமுழுக்க நீரில் ஊற வைத்து காலையில் உணவாக உண்டு வந்திருக்கின்றனர். ஆமாம்... பேரு பழசாக இருந்தாலும் அதில் இருக்கும் சத்துக்கள் எல்லாமே புதுசு’’ என்கிறார் சித்தமருத்துவர் சத்திய ராஜேஷ்வரன்.

அப்படி என்ன பழைய சோற்றில் இருக்கிறது?

‘‘ஒரு நாட்டின் தட்பவெப்பத்துக்கு ஏற்ற உணவுதான் அங்கே வாழ்கிற மக்களுக்கான சரியான உணவு. அந்த வகையில் வெப்பம் மிகுந்த நம் நாட்டில் காலை உணவை குளிர்ச்சியாகத் தொடங்குவதே நல்லது. அதற்கு பழைய சாதம் சரியான தேர்வு என்று சொல்லலாம். கோடை காலத்துக்கு மிகவும் உகந்தது பழைய சோறு.பழைய சோற்று தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் குளர்ச்சி அடைந்து பசியைத் தூண்டும். இரவில் நீர் ஊறிய சோற்றை அந்த நீரோடு அருந்தினால் ஆண்மை பெருகும், தேகத்தில் ஒளி உண்டாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பழைய சோற்றுடன் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், பிரம்மை நோய்கள் நீங்கும்.

செரிமான பிரச்னைகள் இருப்பவர்கள் காலையில் முதல் உணவாக பழைய சோற்றினை எடுத்துக்கொள்வது நல்லது. செரிமான சக்தி கூடுவதற்கு இது உதவும். பழைய சோறு 12 மணி நேரம் ஊறியதாக இருக்க வேண்டும்.அப்போதுதான் முறையான நொதித்தல் ஏற்பட்டு உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமாகத் தோன்றும். பழையசோற்றுக்கு சின்ன வெங்காயம்தான் சரியான ஜோடி. சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடும்போது பித்த, வாத நோய்கள் நீங்கும்.

எனவே, பழைய சோற்றினை4 வயது குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். காலையில் பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பதால் வேலைக்குச் செல்பவர்கள் தயிர்/மோர் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக பழைய சோற்றை சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்கும் சமயத்திலும், உடலுக்கு குளிர்ச்சி தேவையில்லை என்கிற சமயத்திலும் தவிர்த்துவிடலாம்.பழைய சோற்றுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய அரிசி இயற்கை விவசாயத்தின் மூலம் விளைந்ததாக இருப்பது நல்லது. கைகுத்தல் அரிசியாக இருப்பது இன்னும் நல்லது. அப்போதுதான் பழைய சோறு எல்லா நன்மைகளையும் தரக்கூடியஉணவாக இருக்கும். வடித்த சோற்றினை கொண்டுதான் பழைய சோறு செய்ய வேண்டும்.

குக்கரில் சமைத்த சாதத்தில் இருந்து பழைய சோறு தயார் செய்யக்கூடாது. பழைய சோற்றினை பிரிட்ஜில் வைத்தும் சாப்பிடக் கூடாது. இயற்கையான தட்பவெட்ப நிலையில்தான் பழையசோறு ஊட்டச்சத்துமிக்க உணவாக மாறும். சோற்றினை ஊற வைக்கும்போது மண் பானையில் ஊற வைப்பதும் நல்லது.மண்பானையில் இயற்கையாகவே உணவின் சத்துக்களைப் பாதுகாக்கும் தன்மை இருக்கிறது. வெப்பம் பாதிக்காமல் உணவை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கிறது’’ என்கிறார் சத்திய ராஜேஷ்வரன்.பழைய சாதத்தில் இருக்கும் சத்துக்கள் பற்றி உணவியல் நிபுணர் உத்ராவிடம் கேட்டோம்.

‘‘ஒரு நாள் உணவுப்பழக்கத்தில் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. அந்த முக்கியமான உணவுக்கு உகந்தது என்று பழைய சாதத்தைச் சொல்லலாம். ஒரு கப் பழைய சாதத்தில் 160 கலோரிகள் அடங்கியிருக்கிறது. இத்துடன் சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தனிமங்கள், கனிமப் பொருட்கள் அடங்கியுள்ளன. பி 6 மற்றும் பி 12 வைட்டமின்களும் நிறைந்துள்ளது. இரவு முழுவதும் சாதத்தை ஊறவிடும்போது லாக்டிக் அமில பாக்டீரியா, நன்மை பயக்கக்கூடிய உயிர்ச்சத்துக்கள் ஆகியவை உருவாகின்றன.

பழைய சோற்றுடன் மோர்,வெங்காயம் மட்டும் எடுத்துக்கொள்ளாமல் காய்கறி அவியல், தேங்காய் துவையல், கறிவேப்பில்லை, புதினா, கொத்துமல்லி துவையல் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம். இதனால் முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கும்.பழைய சோற்றை நீண்ட நேரம் வைத்திருந்து சாப்பிட்டால் வாந்தி, மயக்கம், வயிற்று கோளாறு உள்ளிட்ட ஒவ்வாமை பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதனால், நீண்ட நேரமானதைத் தவிர்த்துவிடலாம். அதேபோல் அரிசியின் தரம், சாதம் ஊற வைக்கிற தண்ணீர், உடல்நிலையைப் பொறுத்தும் பழைய சோறு பயன்படுத்த வேண்டும். தினமும் பழைய சோறு சாப்பிட விரும்புகிறவர்கள் புழுங்கல் அரிசி, பிரௌன் அரிசி, கைக்குத்தல் அரிசியில் சாதம் வடித்து பழையதாக்கி சாப்பிட்டால் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்கிறார்.

- க.இளஞ்சேரன்
படங்கள்: ஆர்.கோபால்
மாடல்: சுதா செல்வகுமார்

மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு கிடைக்க தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2017-04-22@ 00:48:46




சென்னை : தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமாக எவ்வித நடவடிக்கை யும் எடுக்காமல் அதிமுக அரசு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. கடிதம் எழுதி விட்டால் தன் கடமை முடிந்து விட்டது என்று கருதி, முதல்வரும் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் படும் இன்னல்கள் பற்றி பாராமுகமாக இருக்கிறார். அதிமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நீட் தேர்விலி ருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாவிற்கு இதுவரை அதிமுக அரசால் சட்ட அந்தஸ்தை பெற முடிய வில்லை.

தமிழக சட்டமன்ற மசோதாவிற்கு உரிய அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்பு தலை பெறவில்லை என்பதால் மருத்துவ மேற்படிப்பில் சேர வேண்டிய அரசு மருத்துவர் கள் இன்றைக்கு வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளில் அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள் சேர்ந்து படிக் கும் வாய்ப்பு பறிபோயிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பால் இன்றைக்கு பல்வேறு பிரிவுகளில் மருத்துவ மேற்படிப்பிற்கான 1225 இடங்களில் சேருவதற்கான வாய்ப்பு கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும், மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் உருவாகி விட்டது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்பு தலை அதிமுக அரசு குறித்த காலத்தில் பெற்றிருந்தால் இப்படியொரு அவல நிலைமை ஏற்பட்டிருக்காது.

அனைவருக்கும் தரமான சிகிச்சையை உறுதி செய்ய வேண்டிய அரசு இப்படி அலட்சிய மனப்பான்மையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்பட்டு, அரசு மருத்துவர்களின் நலனைக் காக்கத் தவறி, அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் முழுப்பயனும் சென்றடையாத வண்ணம் செய்து விட்டது. அதிமுக அரசு உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களை சேர்க்கவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகள் இதில் மிக முக்கியம் என்பதால் அரசு மருத்து வர்களின் போராட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி, அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடை க்க அதிமுக அரசு அதி வேகமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஏப்ரல் 24ம் தேதி முதல் 339க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 3 ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் அடுத்த அதிரடி

2017-04-22@ 00:02:36




சென்னை: பிஎஸ்என்எல் செல்போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் 339 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாளைக்கு தினமும் 2 ஜிபி இணைய டேட்டா பெறலாம். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பேசும் அனைத்து வெளி அழைப்புகளுக்கும் இலவசம். அதேபோல் தனியார் நிறுவன எண்களுக்கு பேசும் போது தினமும் 25 நிமிடங்கள் இலவச அழைப்புகளை வழங்கி வருகிறது. ஜியோவுக்கு நேரடி போட்டியாக கொண்டுவரப்பட்ட இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 339 ரூபாய்க்கு 28 நாளைக்கு தினமும் 3ஜிபி டேட்டா கட்டணமின்றி வழங்கும் புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பேசும் அனைத்து வெளிஅழைப்புகளுக்கும் இலவசம், அதேபோல் வேறு நிறுவன எண்களுக்கு பேசும்போது தினமும் 25 நிமிடங்கள் இலவசம் என்பதில் மாற்றமில்லை.
இது மட்டுமின்றி மேலும் 3 அதிரடி சலுகைகளை திட்டங்களை பிஎஸ்என்எல் தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி முதல் திட்டத்தில் 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாளைக்கு தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் உள்வட்டத்தில் அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் இலவசம். இது தவிர 2வது திட்டத்தில் 333 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா இலவசம்.

மேலும் 3வது திட்டத்தில் 395 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா இலவசம். இது தவிர பிஎஸ்என்எல் எண்களுக்கு 3000 நிமிடங்களும், தனியார் நிறுவன எண்களுக்கு 1800 நிமிடங்களும் இலவசமாக பேசலாம். இந்த திட்டத்தின் பயன்பாட்டுக் காலம் 71 நாட்கள். அனுமதிக்கப்பட்ட இலவச அழைப்புகள் தீர்ந்து விட்டால் அதற்கு பிறகு பேசும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 20 காசுகள் கட்டணம் இந்த அதிரடி சலுகைகள் அனைத்தும் வரும் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...