Sunday, September 24, 2017

மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரி மகா புஷ்கர விழா நிறைவு பெற்றது


மயிலாடுதுறை துலா கட்டத்தில் நடைபெற்று வந்த காவிரி மகா புஷ்கர விழா நிறைவு பெற்றது. இதில் 12 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.

செப்டம்பர் 24, 2017, 04:00 AM
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலா கட்டத்தில் கடந்த 12-ந் தேதி மகா புஷ்கர விழா தொடங்கியது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சென்றனர். பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து துலா கட்டத்தில் புனித நீராடினர்.

விழாவையொட்டி துலா கட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த காவிரி அம்மனுக்கு தினமும் பாலாபிசேகம் நடந்து வந்தது. மாலையில் நடந்த ஆரத்தி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முதல்நாளில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் புனித நீராடினர். அதைத்தொடர்ந்து கடந்த 20-ந்தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புனிதநீராடி வழிபாடு செய்தார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று துலா கட்டத்தில் புனித நீராட வந்த பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி துலா கட்டத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். நிறைவுநாள் என்பதால் துலாகட்டத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் ஓங்கார ஆசிரமத்தின் நிறுவனர் சுவாமி ஓங்காரனந்தா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பெண்ணாக மாறிய வக்கீல் குமார் என்கிற ராஜகுமாரிக்கு, துர்க்கை அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு சேலையை சிவாச்சாரியார்கள் வழங்கினர்.

நேற்று மாலை காவிரிக்கு ஆரத்தி வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து காவிரி தாய்க்கும்-சமுத்திரராஜனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா புஷ்கர விழாவில் விடையாற்றி உற்சவம் நடக்கிறது. காவிரி மகா புஷ்கர விழா நாட்களில் துலா கட்டத்தில் மொத்தம் 12 லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW  TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...