Sunday, September 24, 2017

குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை டிச. 31-க்குள் இணைக்க வேண்டும்: உணவுத்துறை தகவல்

Published : 23 Sep 2017 10:01 IST

சென்னை




டிசம்பர் 31-ம் தேதிக்குள் குடும்ப அட்டையுடன், ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று உணவுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு, தற்போது ஒரு கோடியே 92 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, இந்த திட்டத்தை செயல்படுத்த, குடும்ப அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் கைபேசி செயலி மூலமும், நேரடியாக நியாய விலைக்கடையிலும் ஆதார் எண்ணை இணைத்தனர்.

ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு மட்டுமே தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் செப்டம்பர் 31-ம் தேதி ஆதார் இணைப்புக்கு இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ தற்போது வரை, ஒரு கோடியே 61 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணையும் இணைத்துள்ளனர். 31 லட்சத்து 70 ஆயிரம் அட்டைதாரர்கள், ஒருவர், இருவர் என பகுதியளவு இணைத்துள்ளனர். மேலும், சென்னையில் 25 ஆயிரம் உட்பட தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் பேர் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இணைக்காதவர்கள் பட்டியலை தயாரித்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறோம். உண்மையாகவே விடுபட்டிருந்தால் அவர்களின் விவரங்களை பெற்று இணைக்கிறோம். இல்லாவிட்டால், குடும்ப அட்டை முடக்கி வைக்கப்படும்,’’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025