Sunday, September 24, 2017

சாய்தள பாதை இல்லாமல் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளனவா?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Published : 23 Sep 2017 13:38 IST

சென்னை




சாய்தள பாதை மற்றும் தீ தடுப்பு விதிகளை பின்பற்றாமல் புதிய மருத்துவமனைகள் கட்ட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாய்தள பாதை மற்றும் தீ தடுப்பு விதிகளை பின்பற்றாமல் புதிய மருத்துவமனைகள் கட்டப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மருத்துவமனைகளில் நோயாளிகள் எளிதில் வந்து செல்ல ஏதுவாக தரை தளத்திலிருந்து அனைத்து தளத்திருக்கும் சாய்தள பாதையை அமைப்பதை கட்டாயமாக்க கோரி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், மருத்துவமனை மற்றும் பள்ளிகளில் சாய்தள வசதி, தீ தடுப்பு கருவிகளை பொருத்துவது குறித்து விரிவான திட்டத்தை தயாரிக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் பானு, தீயனைப்பு துறை இணை இயக்குனர் சாகுல் ஹமீது, மனுதாரர் மற்றும் 6 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நிபுணர் குழுவுக்கு மனுதாரரின் பரிந்துரைகளை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், சாய்தள பாதை மற்றும் தீ தடுப்பு விதிகளை பின்பற்றாமல் புதிய மருத்துவமனைகள் கட்டப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025