Saturday, September 8, 2018

கல்விக்கடன் வழங்க வேண்டும் : வங்கிகளுக்கு ஐகோர்ட் அறிவுரை

Added : செப் 08, 2018 00:06


மதுரை: 'தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளுக்கு சமூக பொறுப்பு உள்ளது. ஏழை மாணவர்கள் உயர்கல்வி கனவு நிறைவேற, வங்கிகள் கல்விக் கடன் வழங்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, அழகர்சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கூலி வேலை செய்கிறேன். என் மகள், பவித்ரா பிளஸ் 2 வில், 1,081 மதிப் பெண் பெற்றார். வாசுதேவநல்லுார், தங்கப்பழம் வேளாண் கல்லுாரியில், விவசாய பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். பி.எஸ்சி., நான்காண்டு படிப்பிற்கு, கல்வி மற்றும் இதரக் கட்டணம், 4.60 லட்சம் ரூபாய். இதைகல்விக் கடனாக வழங்க கோரி, கருப்பட்டி ஆந்திரா வங்கி கிளையில் விண்ணப்பித்தோம். விவசாயக் கடனை செலுத்தவில்லை எனக்கூறி, வங்கி நிர்வாகம் கடன் வழங்கவில்லை. என் விவசாயக் கடனை அரசு தள்ளுபடி செய்தது. மகளுக்கு கல்விக் கடன் வழங்க, வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அழகர்சாமி மனு தாக்கல் செய்தார்.நீதிபதி, வி.பார்த்தி பன் விசாரித்தார்.

வங்கி நிர்வாகம் தரப்பில், தெரிவிக்கப்பட்டதாவது: ஒட்டுமொத்த வாராக் கடன் நிலுவையில், 3.45 லட்சம் பேரிடமிருந்து கல்விக்கடன், 6,356 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும், வாராக்கடனில் கல்விக் கடன், 40 சதவீதம். இவ்வாறு வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: பெற்றோர் கடனை செலுத்தத் தவறியதற்காக, அவர்களின் வாரிசுகளுக்கு கல்விக் கடன் மறுக்கக்கூடாது. மறுப்பதற்கான காரணங்களை, வலைபோட்டு வங்கி கண்டுபிடிக்கிறது. இலவச உயர்கல்வி வழங்க வேண்டியது, அரசின் கடமை. அதில் இருந்து, அரசு பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. தற்போது உயர்கல்வி வழங்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் காளான்கள் போல் முளைத்து வருகின்றன. இதற்கேற்ப கல்விக் கட்டணம் உயர்ந்து வருகிறது. இச்சூழ்நிலையில் கல்விக் கடன் வழங்கி, ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக, பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவு இலக்கை நிறைவேற்ற, வங்கி உதவ வேண்டும். கடன் மறுப்பதால் ஏழை மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பறிபோகும். தேசியமய வங்கிகளுக்கு சமூக பொறுப்பு உள்ளது. தொழில்நுட்பக் காரணங் கள் அடிப்படையில், தகுதி யான மாணவர்களுக்கு கல்விக்கடன் மறுக்கக்கூடாது. மனுதாரர் மகளுக்கு, கல்விக் கடன் வழங்க, வங்கி கிளை மேலாளர், தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறினார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...