Sunday, September 2, 2018

Othet States

குஜராத்: தேர்வில் 50க்கு 80 மார்க் பெற்ற மாணவன்

ஆமதாபாத் : குஜராத் மாநில கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில், மொத்தம் 50 மதிப்பெண் தேர்விற்கு, ஆசிரியர் 80 மதிப்பெண் வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத் கல்வி வாரியத்தால், இந்தாண்டின் முற்பகுதியில் 10ம் வகுப்பிற்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. கணித தேர்வில், மொத்த மதிப்பெண்களே 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர் ஒருவர் அத்தேர்வில் 80 மதிப்பெண் பெற்றிருந்தார்.

உண்மையில் அந்த மாணவன் 8 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். பின்னர் தான் இந்த குளறுபடி கண்டுபிடிக்கப்பட்டது

3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்மன் :

10 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தலில், இதுபோன்ற குளறுபடிகளை செய்ததாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க குஜராத் கல்வி வாரியம் சம்மன் அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026