Tuesday, October 2, 2018


அதிரடி சலுகைகளுடன் அமேசான் விற்பனை விழா வரும் 10ம் தேதி தொடக்கம்



2018-10-02@ 01:53:54



சென்னை: அமேசான் நிறுவனம் வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை ‘கிரேட் இந்தியன் பெஸ்டிவல்’ பெயரில் அதிரடி தள்ளுபடி விற்பனையை அறிவித்துளளது. மேற்கண்ட விற்பனை காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன், பெரிய சாதனங்கள், டிவி, வீட்டு உபயோக பொருட்கள், மளிகை, அழகு சாதன பொருட்கள், மின்னணு சாதனங்கள் உட்பட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொருட்களை சலுகை விலையில் வாங்கலாம். அமேசான் நிறுவனம் மேற்கண்ட விழாக்கால விற்பனையுடன் டிஜிட்டல் பரிவர்த்தனையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பயன்களை அறிவித்துள்ளது.

இதன்படி முன்னணி இந்திய வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மீது பிரத்யேக சலுகைகளை வழங்க உள்ளது. இதன்மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையில் வியத்தககு கேஷ்பேக் பெறலாம். மேலும், அடுத்த ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் சலுகைக்காக ஷாப்பிங் நேர அட்டவணையை வைத்திருக்கலாம் என அமேசான் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...