Friday, October 19, 2018

ஆயுத பூஜையுடன் 4 நாள் விடுமுறை 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

Added : அக் 18, 2018 20:55

சென்னை, ஆயுத பூஜை விடுமுறையில், சென்னையில் இருந்து, மூன்று லட்சம் பேர், பிற மாவட்டங்களில் உள்ள, தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, நேற்று கொண்டாடப்பட்டது; இன்று, விஜயதசமி. நாளையும், நாளை மறுநாளும் சனி, ஞாயிறு விடுமுறை. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் உள்ளோர், பிற மாவட்டங்களில் உள்ள, தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டியுள்ளனர்.சென்னையில் இருந்து, தொலைதுார மாவட்டங்களுக்கு, நேற்று முன்தினம், 3,000 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றில், 1.5 லட்சம் பேர் வரை பயணித்தனர். நேற்று, 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தும், முன்பதிவு செய்யாமல், 20 ஆயிரம் பேர் என, ஒரு லட்சம் பேர் சென்றுள்ளனர்.ரயில்கள், சொந்த வாகனங்கள், ஆம்னி பஸ்களில், இரண்டு நாட்களில், 50 ஆயிரம் பேர் என, மொத்தம், சென்னையில் இருந்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர், சொந்த ஊர்களுக்கு சென்றுஉள்ளனர்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...