Saturday, October 13, 2018


குழந்தைக்கு முழு டிக்கெட் 8 ரூபாயை கொடுக்க உத்தரவு

Added : அக் 13, 2018 06:39


உசிலம்பட்டி:மூன்று வயது நிரம்பாத குழந்தைக்கு முழு டிக்கெட் கொடுத்த வழக்கில் 8 ரூபாயை திருப்பிக்கொடுக்கவும், 8 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.உசிலம்பட்டி வழக்கறிஞர் சோலைராஜா. கடந்த 2015ல் தனது இரண்டரை வயது மகளுடன் திருமங்கலம் சென்ற அரசு பஸ்சில் தும்மக்குண்டு சென்றார். 8 ரூபாய்க்கு தனக்கு மட்டும் டிக்கெட் எடுத்தார். கண்டக்டர் பாலகிருஷ்ணன் நிர்ப்பந்தம் காரணமாக குழந்தைக்கும் முழு டிக்கெட் எடுத்தார்.

இதுதொடர்பாக மதுரை நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்த சோலைராஜா, 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு பாதிக்கட்டணம் என்ற நிலை இருந்தும், நிர்ப்பந்தப்படுத்தி முழு டிக்கெட் எடுக்க வைத்தனர் என குறிப்பிட்டிருந்தார்.விசாரித்த தலைவர் பாலசுந்தரகுமார், உறுப்பினர் மறைகாமாலை, நிர்வாக இயக்குனர், கிளை மேலாளர், கண்டக்டர் ஆகியோர் டிக்கெட்டுக்காக வசூலித்த 8 ரூபாயை திருப்பிக் கொடுக்கவும், மன உளைச்சலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், மூவரும் சேர்ந்து மேலும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...