Saturday, October 13, 2018


நர்சிடம், 'கட்டிப்பிடி வைத்தியம்'

Added : அக் 12, 2018 22:14


நாகர்கோவில்: நாகர்கோவில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர், பணியில் இருந்த நர்சை கட்டி பிடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஓரிரு நாட்களுக்கு முன், திருவட்டார் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த, ரெஜி, 31, என்பவர் சிகிச்சை பெற்று வந்தார்.வார்டில் தனியாக இருந்த இவர், நேற்று அதிகாலை, திடீரென சத்தம் போட்டார். பணியில் இருந்த நர்ஸ், இளைஞர் அருகில் சென்று, காயம் பட்ட இடத்தில் வலி அதிகமாக உள்ளதா என கேட்டுள்ளார். அதற்கு, அருகில் வருமாறு அவரை அழைத்த இளைஞர், நர்ஸை கட்டிப் பிடித்ததோடு, அவரை கீழேயும் தள்ளியுள்ளார்.அதிர்ச்சியில், நர்ஸ் கூச்சலிட்டார். மற்ற ஊழியர்கள், ஓடி வந்து, அவரை மீட்டனர். 'பணியில் பாதுகாப்பு இல்லை' எனக் கூறி, மருத்துவமனை ஊழியர்களும், நர்ஸ்களும் போராட்டம் நடத்த தயாராகினர். மருத்துவமனை அதிகாரிகள், சமரசப்படுத்தினர்.பின், ரெஜியை வேறு வார்டுக்கு மாற்றினர். மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்படி, ரெஜி மீது, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026