Saturday, June 10, 2017

MHRD, UGC impleaded in PIL for uniform fee in PG medical admission


By Express News Service  |   Published: 10th June 2017 04:44 AM  |  
Last Updated: 10th June 2017 04:44 AM  | 
CHENNAI: The first bench of Madras High Court has impleaded the Union HRD Ministry, UGC and five medical colleges in Karaikkal and Puducherry as party-respondents in a PIL to declare that the fees payable for admission in PG medical courses in self-financing and deemed-to-be universities in the Union Territory shall be as fixed/to be fixed by the fee committe.
The bench of Chief Justice Indira Banerjee and Justice M Sundar ordered the impleadment when a PIL from advocate VBR Menon came up on Friday. It also issued notice to S Srinivasan, Assistant Solicitor General and to the five colleges, including Aarupadai Veedu Medical College, Kirumanpakkam, Puducherry, returnable by June 13.
The petitioner also prayed for a direction to Puducherry Government to provisionally admit all candidates issued provisional allotment orders by the Centralised Admission Committee for admissions into PG medical courses in self-financing colleges and Deemed to be Universities of Puducherry, by collecting fees fixed by Puducherry Fee Committee by its order dated May 24 last, pending final fixation of fees by panel.
According to the petitioner, counselling for seven medical colleges in Puducherry had been completed and PA orders had been issued by CENTAC, Puducherry. Of the above seven, three are affiliated colleges and the other four deemed universities. In the case of affiliated colleges, some of them are accepting the fee of Rs 5.5 lakh fixed by the Puducherry Fee Committee but are demanding to execute ‘post-course’ service bonds and undertakings from the candidates.
The deemed universities are not accepting the fees fixed by the Fee Committee and are demanding exorbitant fees of around Rs 40-50 lakh, apart from demanding execution of post-education service bonds and undertakings.
As the above demands are totally illegal, unreasonable and violative of the orders of the Supreme Court, the petitioner sought the intervention of the court.
திருப்பதியில் 15 மணிநேரம் காத்திருந்து தரிசனம்: பக்தர்கள் அலைமோதல்
2017-06-09@ 21:40:47



திருமலை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். இன்று காலையில் இருந்தே பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 73,797 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 45,299 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

இலவச தரிசனத்தில் 31 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். மலைப்பாதையில் வந்த பக்தர்கள் 21 அறையில் நிரம்பி 12 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். நாளையும் (சனி) நாளை மறுதினமும் (ஞாயிறு) விடுமுறை நாள் என்பதால் மேலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என தெரிகிறது.
சேலம் விமான நிலைய விரிவாக்கம் ஒரு அடி நிலத்தை கூட கொடுக்க மாட்டோம் : பேச்சுவார்த்தையில் விவசாயிகள் திட்டவட்டம்

2017-06-10@ 01:25:18




ஓமலூர் : சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக, ஒரு அடி நிலத்தை கூட கொடுக்க மாட்டோம் என்று, ஓமலூரில் அதிகாரிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 150 ஏக்கரில் விமான நிலையம் கட்டப்பட்டது. குறுகிய காலம் மட்டுமே விமான போக்குவரத்து நடந்த நிலையில், போதிய வருவாய் இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த விமான நிலையத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, சேலம் கலெக்டர் சம்பத் மற்றும் அதிகாரிகள், காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள இடத்தை கடந்த வாரம் பார்வையிட்டனர்.

அப்போது கிராம மக்கள், கலெக்டரை முற்றுகையிட்டு, விவசாய நிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்துக்கு போதிய தொகை வழங்கவில்லை என்றும், நிலத்தின் உரிமையாளர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதாக கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் புகார் ெதரிவித்தனர். இந்நிலையில் நேற்று, ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் பேசிய ஓமலூர் தாசில்தார் ராஜேந்திரன், காடையாம்பட்டி தாசில்தார் ராஜேஷ்குமார் ஆகியோர், விவசாயிகளிடம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுப்போருக்கு, கூடுதல் தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.

ஆனால், வறட்சியால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில், எங்களின் விவசாய நிலங்களை அழிக்க விடமாட்டோம். விமான நிலைய விரிவாக்கத்துக்காக ஒரு அடி நிலத்தைக்கூட கொடுக்க மாட்டோம் என்று ஒட்டுமொத்த விவசாயிகளும் தெரிவித்தனர். இதனால், இந்த கூட்டம் எந்தவித தீர்வுமின்றி முடிந்தது. உயர் அதிகாரிகள் ஆலோசனை பெற்று, மீண்டும் கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வுக்கு பின் நீட் தேர்வை நடத்தாமல் 3 மாதங்களுக்கு பிறகு நடத்தியது ஏன்?: ஐகோர்ட் கேள்வி

2017-06-09@ 16:35:41

சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கு பின் நீட் தேர்வை நடத்தாமல் 3 மாதங்களுக்கு பிறகு நடத்தியது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேபோல் கிராமம், நகரங்களில் கல்வித்தரம் வேறுபடும் போது சிபிஎஸ்இ அடிப்படையில் தேர்வு ஏன் எனவும் நீதிபதிகள் வினவியுள்ளனர். மேலும் இதுகுறித்து மத்திய, மாநில சுகாதாரத்துறை, இந்திய மருத்துவ கவுன்சில் பதில் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

2017-06-09@ 22:26:21

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியி்டப்பட்டது. ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை www.jipmer.edu.in இணையதளத்தில் பார்க்கலாம். ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு கடந்த 4-ம் தேதி நடைபெற்றது.

Plea against deemed varsities in Puducherry

They are refusing seats to meritorious students: petitioner

Alleging that deemed universities in Puducherry are refusing to accept students admitted through common counselling in the State quota, and are demanding fees to the tune of Rs. 40 to Rs. 50 lakh as against Rs. 5.5 lakh fixed by the statutory fee committee for self financing colleges, an advocate has moved the Madras High Court.
As institutions like deemed universities fall under the Union Ministry of Human Resource Development, the court impleaded the Secretary of the Ministry and the UGC as party to the PIL.
According to advocate V.B.R. Menon, common counselling to the PG medical courses has been completed and seats have been allotted to eligible candidates by the Centac.
But to the shock of the students, the deemed universities refused admission in their institutions and have asked the students to pay exorbitant amount, as fee payable to deemed university colleges has not been fixed by the committee.

HC questions rationale behind holding NEET

MCI, State to answer queries by June 26

Questioning the rationale of the Central Board of Secondary Education (CBSE) in conducting the NEET based on CBSE syllabus, when only 5% to 10 % of the total candidates are from CBSE schools, the Madras High Court on Friday asked the Medical Council of India (MCI), whether or not it is necessary to make the exam a level playing field.
“It is stated that only 4,675 science group students from 268 CBSE schools have appeared for the recent NEET, whereas 4.20 lakh science group students were from State board schools in Tamil Nadu. But when the exam is based on CBSE syllabus, would it not enable the CBSE students to grab maximum number of seats in the medical admission,” a Division Bench of Justices N. Kirubakaran and V. Parhiban observed.
Questioning the MCI whether is it possible to determine the calibre or intellect or merit of the students by a single NEET conducted by CBSE, when the students are from different syllabuses, the Bench also wanted to know whether exclusion of academic performance in plus one and two examination would not make the students non serious about their school studies and concentrate only on NEET, that too without any practical examination.
The Bench further wanted the MCI to consider the appropriateness of combining plus two and NEET marks in equal percentile to determine the merit, and the possibilities of conducting NEET along with class twelve exams. “Why not the MCI prescribe a uniform syllabus for Physics, Chemistry, Biology, and Maths throughout India to remove the disparity among various syllabus and whether the Tamil Nadu government is not responsible for dilution of standards of education in the State, as it has not taken any steps to revise the syllabus I tune with the times,” the Bench said.
The judges wanted to know from the State government as to why it should not appoint a well-trained teachers in all the higher secondary schools to prepare students for NEET.
The MCI and the State are to answer the queries by June 26.


புதுகையில் புதிய மருத்துவ கல்லூரி திறப்பு : 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி!

பதிவு செய்த நாள்10ஜூன்2017 00:03




புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவக் கல்லுாரியை, முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக, புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் உள்ள, கால்நடைப் பண்ணை வளாகத்தில், 127 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, 231 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. நடப்பு கல்வியாண்டு முதல், புதிய மருத்துவக் கல்லுாரி செயல்பட, இந்திய மருத்துவக் கவுன்சிலும் அனுமதி அளித்து, 150 மாணவர்கள் சேர்க்கைக்கும் அனுமதி அளித்துள்ளது. கட்டடப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று புதிய கல்லுாரி திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்று, கல்லுாரிக் கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது: புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டபடி நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், பொதுப்பணித் துறையால் மணல் குவாரிகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார். மொத்தம், 84 ஆயிரம் சதுர அடியில் கல்லுாரி, 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, குடியிருப்பு என மூன்று பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது.

விரைவில் முடிவு : விழாவுக்கு பின், நிருபர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ''மாட்டிறைச்சி விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் தெரிவிக்கப்படும். தமிழக அரசு நிலையாகவும், வலிமையாகவும் உள்ளது. 'நீட்' தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்து, பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.

கைது : புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி திறப்பு விழாவில், பங்கேற்க தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,க்களான புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன் ஆகியோருக்கு கடைசி நேரத்தில் மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது. இதையடுத்து, நேற்று காலை விழாவுக்கு செல்ல, மூன்று எம்.எல்.ஏ.,க்களும் தங்களின் ஆதரவாளர்களுடன் புதுக்கோட்டை, தி.மு.க., கட்சி அலுவலகத்தில் கூடினர். அங்கு வந்த போலீசார், எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆதரவாளர்களை அழைத்து வரக்கூடாது என்று கூறினர். இதனால், ஆத்திரம் அடைந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களும், அங்கேயே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கான்பூர், அலகாபாத் ரயில் நிலையங்கள் தனியாருக்கு ஏலம்!

பதிவு செய்த நாள்10ஜூன்2017 06:15




புதுடில்லி: ரயில் நிலையங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. அதன்படி, கான்பூர் ரயில் நிலையத்துக்கு ரூ.200 கோடியும், அலகாபாத் ரயில் நிலையத்துக்கு ரூ.150 கோடியும் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நவீனமயம்:

ரயில் நிலையங்களை நவீனமயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, பெங்களூரு, புனே, தானே, மும்பை, விசாகப்பட்டினம், ஹவுரா, அலகாபாத் உள்ளிட்ட நாட்டின் 25 முக்கிய ரயில் நிலையங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட முடிவுவெடுத்துள்ளது. இந்த ரயில் நிலையங்களை ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஏலம் விட முடிவு செய்துள்ளது.

ஏலம்:

இந்நிலையில், தற்போது கான்பூர் மற்றும் அலகாபாத் ரயில் நிலையங்களுக்கான அடிப்படை தொகையை நிர்ணயித்துள்ளது. கான்பூர் ரயில் நிலையத்துக்கு ரூ.200 கோடியும், அலகாபாத் ரயில் நிலையத்துக்கு ரூ.150 கோடியும் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களுக்கான ஏலம் ஜூன் 28ம் தேதி ஆன்லைனில் நடைபெறும். ஜூன் 30ல் ஏலத்தின் முடிவு அறிவிக்கப்டவுள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 13–ந்தேதி காஞ்சீபுரம் வருகிறார்.
ஜூன் 10, 2017, 03:02 AM

காஞ்சீபுரம்,

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மே மாதம் 24–ந்தேதி காஞ்சீபுரம் வருவதாக இருந்தது. அதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. திடீரென அவரது வருகை நிர்வாக காரணங்களால் ரத்து ஆனது.
இந்தநிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 13–ந்தேதி(செவ்வாய்க்
கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வருகிறார். அங்கு இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சீபுரத்திற்கு வருகிறார்.
காமாட்சி அம்மன் கோவில்
அங்கு சங்கர மடத்திற்கு சென்று காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெறுகிறார். பின்னர் சங்கரமடத்தில் முக்தி அடைந்த காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பிருந்தாவனத்திற்கு செல்கிறார்.
இதையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார்.
ஜனாதிபதியின் காஞ்சீபுரம் வருகையையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட வருவாய்துறை அதிகாரி சவுரிராஜன், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மாவட்ட செய்திகள்
உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீர் சாவு 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு


கவுந்தப்பாடி அருகே உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென இறந்தார். இதுதொடர்பாக போலீசார் 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஜூன் 10, 2017, 05:40 AM

கவுந்தப்பாடி,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சினம்பட்டியை சேர்ந்தவர் சக்தி(வயது 42). அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். அவருடைய மனைவி மங்கையர்கரசி(36). கோர்ட்டில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர்களுடைய ஒரே மகள் பாக்யஸ்ரீ (17) அந்த பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து முடித்துவிட்டு 2-ம் ஆண்டு செல்ல இருந்தார்.

பாக்யஸ்ரீ 60 கிலோ எடை இருந்தார். அதனால் தன்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணினார். தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடமும் தெரிவித்தார். அவர்கள் 60 கிலோ என்பது அதிக எடை கிடையாது என்று கூற, அதை ஏற்க மறுத்த பாக்யஸ்ரீ ஆஸ்பத்திரியில் சேர்ந்து எடையை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவருக்கு ஏற்கனவே கண்பார்வை குறைபாடும், தீராத சளித்தொல்லையும் இருந்துள்ளது.

உடல் எடையை குறைக்க...

சக்தியின் உறவினர் நவீன்பாலாஜி என்பவர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள கந்தசாமியூரில் இயற்கை மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் கடந்த 2-ந் தேதி பாக்யஸ்ரீயின் உடல் எடையை குறைப்பதற்காக அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அவர்களும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தனர். டாக்டர் நவீன்பாலாஜி பாக்யஸ்ரீக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

இதற்கிடையே மங்கையர்கரசியின் தம்பி திருமணம் கடந்த 7-ந் தேதி நடந்தது. பாக்யஸ்ரீயை தானே பார்த்துக்கொள்வதாக நவீன்பாலாஜி கூறியுள்ளார். இதனால் சக்தியும், மங்கையர்கரசியும் திருமணத்துக்கு சென்றுவிட்டனர்.

திடீர் சாவு

இந்தநிலையில் சிகிச்சைபெற்று வந்த பாக்யஸ்ரீ நேற்று முன்தினம் காலை திடீரென இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி பணியாளர்கள் பாக்யஸ்ரீயின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி அவருடைய பெற்றோர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு திருமணம் முடிந்ததும் மகளை மருத்துவமனையில் சென்று பார்ப்பதற்காக சக்தியும், மங்கையர்கரசியும் புறப்பட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டுக்குள் மருத்துவமனை பணியாளர்கள் பாக்யஸ்ரீயின் உடலை கொண்டுவந்து வைத்துவிட்டு அவருடைய பெற்றோரிடம், ‘உங்கள் மகள் இறந்து விட்டார் என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.

சாவில் சந்தேகம்

ஒரே ஆசை மகளை பார்ப்பதற்காக புறப்பட்ட பெற்றோர் அவர் பிணமாக கொண்டு வரப்பட்டதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்கள். சிறிதுநேரம் அவர்கள் ஒன்றும் புரியாமல் அலறி துடித்தார்கள். பின்னர் உறவினர்களுடன் ஒரு ஆம்புலன்சில் பாக்யஸ்ரீயின் உடலை ஏற்றி மீண்டும் கந்தசாமியூரில் இருக்கும் நவீன்பாலாஜியின் மருத்துவமனைக்கே கொண்டு சென்றார்கள். உடலை ஆஸ்பத்திரிக்குள் வைத்து முற்றுகையிட்டார்கள்.

பின்னர் கவுந்தப்பாடி போலீசில் இதுகுறித்து மங்கையர்கரசி புகார் அளித்தார். அதில் ‘என்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. தவறான சிகிச்சையால்தான் என் மகள் இறந்துவிட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி இருந்தார்.

மருத்துவமனை நிர்வாகி மீது தாக்குதல்

அதைத்தொடர்ந்து கவுந்தப்பாடி போலீசார் மருத்துவமனைக்கு சென்று பாக்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி துல்லிய பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குவிந்து இருந்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு டாக்டர்கள் கூறினார்கள். பாக்யஸ்ரீயின் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீதும், தனியார் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்காதவரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகி நவீன் பாலாஜி மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கல்பனா ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது மாணவியின் உறவினர்களுக்கும், மருத்துவமனை உரிமையாளர் நவீன் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவரை தாக்க முயன்றனர். போலீசார் அவரை உறவினர்களிடம் இருந்து மீட்க முயன்றும் அவர் மீது அடி விழுந்தது. இதன்பின்னர் போலீசார் கூட்டத்தில் இருந்து நவீன் பாலாஜியை மீட்டு பத்திரமாக அழைத்துச்சென்றனர்.

மாணவியின் இறப்பு குறித்து நவீன் பாலாஜி கூறும்போது, நான் மருத்துவமனை நிறுவனர்தான். சிகிச்சை அளித்த டாக்டர் வேறு. மாணவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது என்று தெரிவித்தார்.

மாணவியின் தந்தை சக்தி கூறும்போது, ஒரே மகளை பறிகொடுத்து நிர்கதியாக நிற்கிறேன். இதுபோன்று யாருக்கும் வரக்கூடாது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து உடலை பெற்றுச்சென்றனர்.

8 பேர் மீது வழக்குப்பதிவு

இதற்கிடையில் பாக்யஸ்ரீக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கல்பனா, நிவேதினி, மருத்துவமனை நிறுவனர் டாக்டர் நவீன் பாலாஜி மற்றும் மாலதி, வர்மா, பணியாளர்கள் பிரியதர்ஷினி, தேவிமோகன், ஜோதி என 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே மருத்துவமனையை அதன் நிர்வாகிகளே பூட்டி விட்டனர்.

உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுத்ததால் ஒரே மகளையும் இழந்த சக்தியும், மங்கையர்கரசியும் ஆஸ்பத்திரியில் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது.
தேசிய செய்திகள்
ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு மத்திய அரசு அறிவிப்பு



ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி போன்ற மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வை அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜூன் 10, 2017, 05:15 AM
புதுடெல்லி,

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதுபோல், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி, யுனானி ஆகியவை உள்ளடக்கிய ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கும் நீட் தேர்வை அமல்படுத்த மத்திய அரசு விரும்பியது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மத்திய ஆயுஷ் அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளின் ஆயுஷ் துறைகளுக்கும் கடிதம் எழுதியது. பெரும்பாலான மாநிலங்கள், இதற்கு ஆதரவு தெரிவித்தன.

அமல்படுத்த முடிவு

இதையடுத்து, அடுத்த ஆண்டில் இருந்து, நாடு முழுவதும் இளநிலை ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வை அமல்படுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ஏற்று செயல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசுகளுக்கு அந்த கவுன்சில் எழுதிய கடிதத்தில், ‘ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கு திறமையான மாணவர்களை உருவாக்கும் நோக்கத்தில், நீட் தேர்வை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அடுத்த ஆண்டில் இருந்து, இந்த படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகள் நடத்தி வந்த நுழைவுத்தேர்வுகள் கைவிடப்பட வேண்டும். அனைத்து இளநிலை படிப்பு இடங்களும் நீட் தேர்வு ரேங்க் அடிப்படையில் மாநில அரசுகளால் நிரப்பப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், அடுத்த ஆண்டில் இருந்து இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீடு கிடையாது

மேலும், ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அப்படிப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த வெளிநாட்டு இந்தியர் ஒதுக்கீடும், நிர்வாக ஒதுக்கீடும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து இடங்களும் நீட் தேர்வு ரேங்க் அடிப்படையில் மாநில அரசால் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், ஒதுக்கீட்டு முறை ரத்து செய்யப்படுவதற்கு சுயநிதி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிநாட்டு இந்தியர் ஒதுக்கீடும், நிர்வாக ஒதுக்கீடும் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தனியார் மருத்துவ கல்லூரி கட்டணம் : புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள்10ஜூன்2017 02:01

சென்னை: புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு, அம்மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தையே வசூலிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, புதுச்சேரி அரசு மற்றும் மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் மேனன் தாக்கல் செய்த மனு:
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு, மாணவர்கள் சேர்க்கைக்கான, 'கவுன்சிலிங்' முடிந்துவிட்டது. மாணவர்கள் சேர்க்கைக்கான மத்திய குழு, ஒதுக்கீடுக்கான உத்தரவுகளையும் வழங்கிவிட்டது.
ஏழு கல்லுாரிகளில், மூன்று கல்லுாரிகள், பல்கலையின் இணைப்பு பெற்றவை; நான்கு கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலை அந்தஸ்து பெற்றுள்ளன. 

இணைப்பு கல்லுாரிகளில் சில, புதுச்சேரி கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த, 5.50 லட்சம் ரூபாய் கட்டணத்தை ஏற்றுள்ளன.
நிகர்நிலை பல்கலையின் கீழ் வரும் கல்லுாரிகள், கட்டண நிர்ணய குழு நிர்ணயம் செய்த கட்டணத்தை ஏற்கவில்லை. 40 - 50 லட்சம் ரூபாய் வரை, கட்டணம் கோருகின்றன; இது, சட்ட விரோதமானது.எனவே, புதுச்சேரி கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையே, தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகள் வசூலிக்கும்படி உத்தரவிட வேண்டும்.
உச்ச நீதிமன்றம் வகுத்த வழிமுறைகளின்படியே, கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. 

பல்கலை மானிய குழு சார்பில் பதிலளிக்க, உதவி சொலிசிட்டர் ஜெனரல் சீனிவாசன், புதுச்சேரி அரசு சார்பில், சிறப்பு பிளீடர் கோவிந்தராஜன், 'நோட்டீஸ்' பெற்றனர்.
இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர், வி.பி.ராமன், 'நோட்டீஸ்' பெற்றார். புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகளையும்,
மத்திய அரசையும் வழக்கில் சேர்த்து, பதில் மனு தாக்கல் செய்ய, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. 

விசாரணை, வரும், 13க்கு தள்ளிவைக்கப்பட்டது.


'நீட்' நுழைவுத்தேர்வு விவகாரம் : ஐகோர்ட் சரமாரி கேள்வி

பதிவு செய்த நாள்10ஜூன்2017 00:09

சென்னை: 'வெவ்வேறு பாடத்திட்டங்களில் படிக்கும் போது, மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேர்வு மூலம் மட்டுமே, மாணவர்களின் அறிவு திறனை கண்டுபிடிக்க முடியுமா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், தேசிய நுழைவுத் தேர்வான, 'நீட்'டில் பெற்ற மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணையும் கணக்கில் எடுக்க வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

உத்தரவு
மனுவை விசாரித்த, நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' மனுதாரர் அனுப்பிய மனுவை, மூன்று வாரங்களில் பரிசீலிக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு, மே மாதம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், வழக்கில் முக்கிய பிரச்னை எழுப்பப்பட்டதால், மனுவை நிலுவையில் வைத்திருந்தது. இவ்வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், வி.பி.ராமன், மனுதாரரின் மனுவை பைசல் செய்து விட்டதாக, நீதிபதி
களிடம் தெரிவித்தார். 

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. 'நீட்' தேர்வு நடத்துவதில், அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில், இந்த நீதிமன்றம் ஆர்வம் காட்டுகிறது.

கஷ்டம்
தேசிய அளவில், ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்துவது, முறையானதாக இருந்தாலும், வெவ்வேறு பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள், பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். 

பிளஸ் 2 பாடத் திட்டங்கள், ஒரே மாதிரியாக இல்லை. மாநில பாடத் திட்
டம், மத்திய பாடத் திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டம் என, வெவ்வேறு முறைகள் உள்ளன.

தமிழகத்தில், 268 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 4,675 அறிவியல் பிரிவு மாணவர்கள்; 6,877 மாநில பள்ளிகளில், 4.20 லட்சம் அறிவியல் பிரிவு மாணவர்கள், 2016 - 17ம் ஆண்டில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டும். 

l வெவ்வேறு பாட திட்டங்களில் மாணவர்கள் படிக்கும் போது, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் ஒரே தேர்வான, 'நீட்' மூலம், மாணவர்களின் அறிவுத்திறன், தகுதியை கண்டுபிடிக்க முடியுமா?

l சி.பி.எஸ்.இ.,யால் கேள்விகள் தொகுக்கப்படும் போது, அதே சி.பி.எஸ்.இ., முறையில் பயின்ற மாணவர்களுக்கு எளிதாகவும், மற்ற
மாணவர்களுக்கு கடினமாகவும் இருக்காதா?

l மொத்த மாணவர்களில், ௫ முதல், 10 சதவீதம் வரை உள்ள சி.பி.எஸ்.இ., மாணவர்கள், அதிக இடங்களை கைப்பற்றும் வகையில், இது இருக்காதா?
l வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் நிலையில், அனைத்து மாணவர்களுக்கும், சம வாய்ப்பு வழங்குவது தேவையில்லையா?

l 'நீட்' தேர்வுக்கு மட்டும் கவனம் செலுத்தும் வகையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கு, அதிக கவனம் செலுத்தாமல், தவிர்ப்பது சரியாக இருக்குமா?

l ஒரே தேர்வு என்ற அடிப்படையில் முடிவு செய்வதை விட, பிளஸ் 2
மதிப்பெண், 'நீட்' மதிப்பெண்களை சம அளவில் சேர்த்து வழங்கி, மாணவர்களின் தகுதியை, திறனை மதிப்பிடுவது சரியாக இருக்காதா?

l பிளஸ் 2 தேர்வோடு, 'நீட்' தேர்வையும் தொடர்ந்து நடத்துவது சாத்தியமில்லையா; அதனால், 'நீட்' தேர்வுக்கு தயாராக, கூடுதல் நேரம் ஒதுக்குவதையும், அதன்மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் தவிர்க்கலாம் அல்லவா?

l இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் இந்தியா முழுவதும், ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை, ஏன் கொண்டு வரக் கூடாது?

l 'நீட்' தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையில், பாடத்திட்டங்களை மாற்றியமைக்க, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கல்வியின் தரத்தை நீர்த்து போக செய்வதில், மாநில அரசுக்கு பொறுப்பில்லையா?

l 'நீட்' தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், அனைத்து பள்ளிகளிலும், நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை, ஏன் நியமிக்கக் கூடாது?

இந்த கேள்விகள் அனைத்துக்கும், வரும், 27க்குள் பதிலளிக்க வேண்டும். மருத்
துவ மாணவர்கள் சேர்க்கையில், அகில இந்திய அளவில் விளைவுகள் ஏற்படும் என்பதால், இந்த வழக்கை, தலைமை நீதிபதிக்கு 
பரிந்துரைக்கிறோம்.

இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


ஆதார் உள்ளவர்களுக்கு கட்டாயம்! : பான் கார்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
பதிவு செய்த நாள்10ஜூன்2017 00:41

புதுடில்லி: புதிதாக பான் கார்டு பெறுவதற்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் சட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

பல்வேறு அரசு நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கு ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதேபோல் புதிதாக பான் கார்டு வாங்குவதற்கும், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது, ஜூலை, 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், பார்லிமென்டில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. 'மத்திய அரசின் உத்தரவு, பல்வேறு அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதை கட்டாயமாக்கக் கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது' என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'பொய்யான தகவல்கள் கொடுத்து பான் கார்டுகள் வாங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆதார் எண்ணில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஆதாரை கட்டாயமாக்கியதால், 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது' என, வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வாதிட்டார்.இதை விசாரித்த, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண் அடங்கிய அமர்வு, தன் தீர்ப்பை, மே, 4ல் ஒத்தி வைத்தது. இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது, புதிய பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண்ணை குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது. அதே நேரத்தில், ஆதார் எண் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது; ஆதார் எண், தனி மனித உரிமைக்கு எதிரானது என்று தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் அரசியலமைப்பு அமர்வின் தீர்ப்பு, இந்த வழக்குக்கும் பொருந்தும் என்றும் சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

யாருக்கு விலக்கு? : சுப்ரீம் கோர்ட் அமர்வு அளித்துள்ள தீர்ப்பின் முக்கிய அம்சம்:

 வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் பான் கார்டுக்கு ஆதார் எண்ணை குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் வகையில், வருமான வரிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் செல்லும்

 ஏற்கனவே ஆதார் எண் உள்ளவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக, பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், ஆதார் விபரங்களை அளிக்க வேண்டும்

 அதே நேரத்தில், ஆதார் எண் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது

 ஆதார் எண்ணுக்காக பதிவு செய்து, இதுவரை அந்த எண் கிடைக்காதவர்களுக்கும், கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

 ஆதார் எண், தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்பது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கிறது. அதில் அளிக்கப்படும் தீர்ப்பு, இந்த வழக்குக்கும் பொருந்தும்.
மதுரை ஏ.டி.எம்.,மில் 'விளையாட்டு' : போலி 2,௦௦௦ ரூபாய் வந்தது எப்படி

பதிவு செய்த நாள்10ஜூன்2017 01:13



மதுரை: மதுரை வண்டியூர் கனரா வங்கி ஏ.டி.எம்.,மில் போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வந்தது குறித்து விசாரணை நடக்கிறது.

மதுரை வண்டியூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் வகிதாராணி. ஜூன் 1ல் கனரா வங்கி ஏ.டி.எம்.,ல் இருந்து எட்டாயிரம் ரூபாய் எடுத்தார். அனைத்தும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களாக வந்தன; அதில் ஒன்று போலி. 'ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா' என்பதற்கு பதில் 'மனோரஞ்சன் பேங்க் ஆப் இந்தியா' என அச்சிடப்பட்டிருந்தது. மேலும், 'விளையாட்டு பொருள்' என குறிப்பிடும் வகையில் 'புல் ஆப் பன்' என்றும் அச்சிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அண்ணாநகர் கனரா வங்கி கிளையில் வகிதாராணி புகார் அளித்தார். நோட்டை ஆய்வு செய்த அதிகாரிகள், 'இது சிறுவர்கள் விளையாடும் நோட்டு. எங்களுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்.,மில் நிரப்பும் தனியார் நிறுவனம்தான் பொறுப்பு' என திருப்பி அனுப்பினர்.
ஒருவாரமாக வங்கிக்கு அலைந்தும் நடவடிக்கை இல்லாததால், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.வங்கி தரப்பில் புகார் பெற்று, தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


அடுத்தடுத்து 'டீன்'கள் ஓய்வு : மருத்துவ கல்லூரிகள் பாதிப்பு

பதிவு செய்த நாள்10ஜூன்2017 00:52

'அரசு மருத்துவ கல்லுாரி, 'டீன்'களின் பதவி காலம், அடுத்தடுத்து முடிவதால்,
ஐந்திற்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், டீன்கள் இல்லாத நிலை ஏற்படும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், 22 அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மருத்துவ கல்லுாரிகளில், டீன் பதவி காலியாக உள்ளது. அங்கு துறை சார்ந்த டாக்டர்களே, டீன் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி, துாத்துக்குடி மற்றும் நெல்லை மருத்துவ கல்லுாரி டீன்களின் பதவி காலமும், நவம்பர் மாதத்திற்குள் முடிகிறது. அதனால், ஐந்திற்கும் மேற்பட்ட மருத்துவ கல்லுாரிகளில், டீன் இல்லாத நிலை ஏற்படும்.ஏற்கனவே, சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரிகளில் காலியாக இருந்த டீன் பணியிடம், இரண்டு மாதத்திற்கு பின் தான் நிரப்பப்பட்டது. இதே நிலை, தற்போது ஏற்பட்டுள்ளது.பொறுப்பு டீன் இருந்தாலும், மருத்துவ கல்லுாரிக்கும், மாணவர்களுக்கும் வேண்டிய வசதிகள் அளிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. மேலும், டீன் இல்லாத மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் மெத்தனம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ கல்லுாரி டீன்கள், அடுத்தடுத்து ஓய்வு பெறுகின்றனர். நவம்பர் மாதத்துக்கு பின், புதிய டீன்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதுவரை, பொறுப்பு டீன்கள் நியமிக்கப்படுவர்' என்றனர்.

- நமது நிருபர் -
மதுரைக்கு 'எய்ம்ஸ்' வாய்ப்பு நழுவியது ஏன் மந்திரி ராஜினாமா மிரட்டல்

பதிவு செய்த நாள்10ஜூன்2017 01:45




மதுரை:'மதுரையில் தோப்பூர், ஈரோடு- பெருந்துறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் - செங்கிபட்டி என தமிழகத்தில் ஏதாவது ஒரு இடத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம்' என மத்திய அரசு பரிசீலனை செய்தது. ஆனால், தற்போது மதுரைக்கு வாய்ப்பு பறிபோய், தஞ்சையில் அமைக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியான இடம் குறித்து, பத்து கேள்விகளுடன் மத்திய அரசு, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆட்சியாளர்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ளும் குழப்பத்தில் இருந்ததால், மத்திய அரசின் கேள்விக்கு தாமதமாக பதில் அனுப்பினர்.

அதில், 'தஞ்சைதான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியான இடம்' என தெரிவிக்கப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் அமைந்தால், பத்து தென்மாவட்டங்கள் பயன்பெற்றிருக்கும். மத்திய அரசின் பெரிய நிறுவனங்கள் ஏதும் இல்லாத மதுரையில், எய்ம்ஸ் அமையும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எண்ணம் ஈடேறவில்லை. மதுரையின் இரண்டு அமைச்சர்கள், எம்.பி., க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உரிய முயற்சி எடுத்திருந்தால் இது நடந்திருக்கும்.

தடை ஆணை பெறுவோம்

இதுதொடர்பாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் கூறியதாவது: மதுரையில் எய்ம்ஸ் அமைக்க தகுதி இல்லாதது போல் தவறான தகவல்களை தமிழக சுகாதார துறை அமைச்சர் மற்றும் செயலர் கூறியுள்ளனர். ஏற்கனவே தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய மருத்துவமனைகள் உள்ளன.

ஆனால், மதுரையில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை; இங்கு எய்ம்ஸ் வந்தால், மருத்துவ தொழிற்சாலையாக திகழும் சிறு, குறு தொழில்கள் வளரும். தென்மாவட்ட மக்கள் பயன் பெறுவர். தமிழக அரசு அனுப்பிய கடிதத்தில் முழுக்க, முழுக்க அரசியல் தலையீடு இருக்கிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு கூறினார்.

தியாகம் செய்ய தயார்

இதுகுறித்து, திருமங்கலம் தொகுதியை சேர்ந்த அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:

எய்ம்ஸ் அமைக்க தோப்பூர் கோ.புதுப்பட்டியில் புல எண் 122 உட்பட 200 ஏக்கர் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. அதன் பின் மத்திய அரசின் இணை செயலர் தாத்திரி பாண்டா குழு இடத்தை பார்வையிட்டது. அவர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில், மதுரையில் எய்ம்ஸ் அமைவது குறித்து 21 அலுவலர்கள் விளக்கினர். இதுகுறித்து எல்லா துறையினரிடமும் கருத்துரு பெற்றும் அரசுக்கு அனுப்பப்பட்டது.

அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லவில்லை. அருகில் காசநோய் மருத்துவமனையை தவிர வேறு கட்டடங்கள் இல்லை. எனவே இந்த இடத்தில் எய்ம்ஸ் அமைப்பதை தவிர, வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற இயலாது. சர்வதேச விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன், நான்கு வழிச்சாலை என எல்லா கட்டமைப்புகளும் உள்ளன. இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்வரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன். எய்ம்ஸ் இங்கு அமைய என் பதவியை கூட தியாகம் செய்ய தயார்.இவ்வாறு கூறினார்.

முதல்வரிடம் பேசுவேன்

'மதுரைக்கு வர இருந்த எய்ம்ஸ், தஞ்சாவூர் போனது தெரியுமா' என அமைச்சர் செல்லுார் ராஜுவிடம் கேட்டபோது, அவர் கூறியது:மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நினைத்தால், மதுரையில் அமைக்க முடியும். மதுரையில் அமைக்க உறுதியாக உள்ளோம். மருத்துவமனை அமையும் இடத்தில் எரிவாயு குழாய் செல்வதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஆனது. வெளிநாட்டு, வெளிமாநில டாக்டர்கள் வந்து குடும்பத்துடன் தங்கி செல்லும் வகையில், 20 ஏக்கரில் 'தீம்' பார்க் உள்ளிட்ட வசதிகளுடன் திட்டம் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மதுரையில் அமைவதுதான் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

'தஞ்சையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதல்வர் பழனிச்சாமி மனு அளித்தாரே' என அமைச்சரிடம் கேட்டபோது, ''அதற்கு வாய்ப்பு இல்லை; அப்படி கொடுத்தாரா என தெரியவில்லை. மதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என முதல்வரிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன்,'' என்றார்.

தொடர்ந்து போராடுவேன்!

மதுரை எம்.பி.,யாக' என்ன செய்தீர்கள் என, கோபாலகிருஷ்ணன் எம்.பி.,யிடம் (அ.தி.மு.க.,-ஓ.பி.எஸ்.,) கேட்ட போது கூறியதாவது:விரைவில் மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து, 'மதுரையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும்' என வலியுறுத்த உள்ளேன். தஞ்சாவூரில் இடவசதி இல்லை. நான்கு வழிச்சாலை, விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால், மதுரையில் அமைவதுதான் பொருத்தமாக இருக்கும்.

மதுரையில்தான் அமைய வேண்டும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது மன்னார்குடி கும்பலை திருப்தி படுத்தும் வகையில், 'தஞ்சையில் அமைக்க வேண்டும்' என முதல்வர் பழனிசாமி கேட்கிறார். மதுரையில் அமைய வேண்டும் என அனைத்து தரப்பினருடன் சேர்ந்து போராடி வருகிறேன். ஜூன் 15ல் சென்னையில், எய்ம்ஸ் போராட்ட குழு நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்க உள்ளேன்.இவ்வாறு கூறினார்.
துவக்கப் பள்ளிகளில் ஜாதி விபரம் கட்டாயம் இல்லை
பதிவு செய்த நாள்10ஜூன்2017 01:48


திண்டுக்கல்: 'தமிழக துவக்கப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஜாதி விபரம் கட்டாயமில்லை. பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரம் பதிவு செய்யலாம்' என, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக துவக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஜாதி விபரங்கள் கேட்டு பதிவு செய்யப்பட்டன. சமீபகாலமாக பள்ளி கல்வித் துறையில் பல வகையான மாறுதல்கள் நடந்து வருகின்றன. 

பிளஸ் 1 பொதுத் தேர்வு முறை மாற்றம், இறைவழிபாட்டு முறையில் மாற்றம், மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் மாற்றம், டிஜிட்டல் வருகை பதிவேடு பராமரிப்பு என தினமும் ஒரு மாற்றம் நடந்து வருகிறது.
இந்நிலையில் துவக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க வரும் பெற்றோரிடம், பள்ளி நிர்வாகம் ஜாதி விபரங்களை கேட்கக் கூடாது. அதேநேரம் பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரங்களை பதிவு செய்யலாம் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி கல்வித் துறையின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கதே.இதன் மூலம் சமதர்ம சமுதாயம் உருவாகும். சமச்சீர் கல்வி சாத்தியமாகும் என்றார்.
சொந்த ஊர் முகவரியில் அரசு ஊழியருக்கு பாஸ்போர்ட் : மண்டல அலுவலர் தகவல்
பதிவு செய்த நாள்10ஜூன்2017 01:02

மதுரை: அரசு, பொது துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவரது சொந்த ஊர் முகவரியில் பாஸ்போர்ட் பெறலாம் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணிஸ்வரராஜா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இம்மண்டலத்தில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மதுரை கோச்சடை, திருநெல்வேலியில் செயல்படுகின்றன. திண்டுக்கல் முதல் குமரி வரை ஒன்பது மாவட்ட மக்கள் பாஸ்போர்ட் சேவை பெறுகின்றனர். வாரந்தோறும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்லும் அரசு மற்றும் பொது துறை நிறுவன ஊழியர்கள் அங்குள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

முதியவர்கள், குழந்தைகள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது இதுவரை கட்டணத்தை பாஸ்போர்ட் சேவை மையத்தில் பணமாக செலுத்தி வந்தனர். ஜூன் 12 முதல் இவர்கள் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்தி முன்தேதி பெறாமல் பாஸ்போர்ட் சேவை மையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மேலும் மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் குழந்தைகள் விண்ணப்பிக்கும் போது 'ஸ்டெப் பாதர்/மாதர்' தொடர்பாக சில விதிகளை தளர்த்தியுள்ளது. பொதுமக்கள் பாஸ்போர்ட் நிலையின் விபரங்களை அறிய 1800 258 1800ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் திருத்திய சம்பளம்

பதிவு செய்த நாள்10ஜூன்2017 04:21




புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்து, 18 மாதங்கள் முடியும் நிலையில், டி.ஏ., உள்ளிட்ட திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய முழு சம்பளம், ஜூலை மாதம் முதல் கிடைக்கும்.
நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 51 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டது.

கடும் அதிருப்தி :

'கடந்த, 2016, ஜனவரி மாதத்தில் இருந்து இது வழங்கப்படும்' என, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம், 16 சதவீதம், இதர படிகள், 63 சதவீதம் என, மொத்தம், 23.55 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது. பென்ஷன், 23.6 சதவீதம் உயர்த்தப்பட்டது.அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டாலும், டி.ஏ., மற்றும் எச்.ஆர்.ஏ., எனப்படும் வீட்டு வாடகைப் படி ஆகியவை குறைந்தது. இது, ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனால், படிகள் தொடர்பாக ஆய்வு செய்ய, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் லாவாசா தலைமையிலான ஒரு குழு அமைக்கப்|பட்டது. இந்தக் குழு தன் பரிந்துரையை, இந்த ஆண்டு, ஏப்ரல், 27ல் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் குறித்து, மத்திய கேபினட் செயலர் தலைமையிலான, அரசு செயலர்கள் அடங்கிய உயர் அதிகாரக் குழு ஆய்வு செய்து, தன் இறுதி பரிந்துரையை அளித்து உள்ளது.

49 லட்சம் ஊழியர்கள் :

வரும் வாரத்தில், இது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, படிகள் உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வரும், ஜூலை மாதம் முதல், திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய புதிய சம்பளம், நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ஐகோர்ட் உத்தரவு ரத்தாகுமா
'நீட்' வழக்கை 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்


மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' எனப்படும் தேசிய நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தாக்கல் செய்த மனு மீது, வரும், 12ல் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது.



மருத்துவப் படிப்புகளுக்காக, நீட் எனப்படும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மே, 7ல் நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடந்தது. இதில், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பிற மொழி கேள்வித் தாள்களில் வேறுபாடுகள் இருந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த, சென்னை ஐகோர்ட் கிளை, நீட் தேர்வு முடிவுகளை, ஜூன், 12ம் தேதி வரை வெளியிட தடை விதித்து, மே, 24ல் தீர்ப்பளித் தது.இதை எதிர்த்து, தேர்வை நடத்திய,


சி.பி.எஸ்.இ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டின் கோடை விடுமுறை கால நீதிபதிகள் அசோக் பூஷண், தீபக் குப்தா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்தியஅரசின் சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மணீந்தர் சிங், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். 'நாடு முழுவதும், 11.38 லட்சம் மாணவர் கள் தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடா விட்டால், அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்' என, அவர் வாதிட்டார்.அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை, வரும், 12ம் தேதி விசாரிப்பதாக, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

சி.பி.எஸ்.இ., சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவின்படியே, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. நிபுணர்களின் ஆலோசனை யின் படியே, கேள்வித்தாள்கள் வடிவமைக்கப் பட் டன.90.75 சதவீதம் பேர் ஆங்கிலத்திலும், மீதமுள்ள, 9.25 சதவீதத்தினர் பிராந்திய மொழிகளிலும் தேர்வை எழுதியுள்ள னர்.நுழைவுத் தேர்வுக் கான கேள்வித்தாள்கள், ஆங்கிலத்துக்கும், பிராந்திய மொழிகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் உள்ள கேள்வித்தாளை, 10 பிராந்திய மொழிகளில் ஒரே மாதிரியாக மொழிபெயர்த் தால், அது முன்கூட்டியே வெளியாவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் தான், வேறு வேறு கேள்வித்தாள்கள் தயாரிக் கப்பட்டன. உண்மை யில், பிராந்திய மொழி களை விட, ஆங்கில கேள்வித்தாள் சற்று கடினமாக வடிவமைக்கப் பட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் தான், 10 மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக் கப்பட்டது. கேள்வித்தாள் வடிவமைப்பிலோ, தேர்வு நடைமுறையிலோ எந்த பாகுபாடும் இல்லை. நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளி யிட தடை விதிக்கும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Friday, June 9, 2017

நிறைய வசதிகள்... குறைந்த விலை... ரெட்மியால் எப்படி சாத்தியம் ஆகிறது?

கார்த்தி


டச் ஸ்கீரின் மொபைல்கள் வெளியாக ஆரம்பித்த நாள்களிலிருந்தே அதன் விலை அதிகமாகத்தான் இருந்தது. ஆன்லைனில் மொபைல்கள் விற்க ஆரம்பித்ததும், அதன் விலை இறங்க ஆரம்பித்தது. அதுவும் மோட்டோரோலா, கூல்பேட் போன்ற பட்ஜெட் மொபைல்களின் வருகையால், மொபைல்களின் விலை, பல மடங்கு குறைந்தது. அதிலும் ஒருபடி மேலே போய் ரெட்மி போன்ற நிறுவனங்கள், ஃபிளாக்ஷிப் கில்லர் (Flagship Killer) என சொல்லப்படும் சிறப்பான ஸ்பெக்ஸ் இருக்கும் மொபைல்களைக் கூட 15000க்கும் குறைவாக ஆன்லைன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது எனக் கேட்டால், ”இதுதான் எங்கள் ஹிட்டிற்கான ரகசியம்” என்கிறார் ரெட்மி நிறுவனத்தின் இந்திய துணை தலைவர் மனுகுமார் ஜெய்ன். அவர் கூறும் முக்கியமான தொழில் நுணுக்கங்கள் இவைதாம்.



டிஸ்ட்ரிப்யூஷன் (Distribution)

பொதுவாக ஆஃப்லைனில் மொபைல் விற்கும் பல நிறுவனங்களின் டிஸ்ட்ரிப்யூஷன் ரேட் அதிகம். அது பல்வேறு நிலைகளைக் கடந்து வாடிக்கையாளர்களின் கைகளை வந்தடைகிறது. Brand --> National Distributor --> Regional Distributor --> Zonal Distributor --> Retailer --> Consumer. ஒரு மொபைலின் விலை அதிகமாவது இப்படித்தான். ரெட்மியைப் பொருத்தவரை, எங்கள் பிராண்டிலிருந்து நேரடியாக ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுகிறது. அதனால், எங்களால் இந்த மார்ஜினைக் குறைக்க முடிகிறது.

இன்வென்ட்ரி கிடையாது

எங்களிடம் ஸ்டாக் (Inventory) என்ற விஷயமே கிடையாது. பெங்களூருவில் இருக்கும் தொழிற்சாலையில் ஒரு மொபைல் திங்களன்று தயாரிக்கப்படுகின்றது என்றால், அது வியாழன் அன்று வாடிக்கையாளருக்காக பேக் செய்யப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு வாரமும் இது நடக்கின்றது. திங்களன்று பொருள் தயாராகிறது. செவ்வாயன்று அது warehouseல் வைக்கபடுகிறது. புதன் அன்று எங்கள் பார்ட்னர்களிடம் (அமேசான், ஃப்ளிப்கார்ட் தளங்கள்) சேர்க்கப்படுகிறது. வியாழன் அன்று விற்கப்படுகிறது. எங்கள் ஸ்டாக் புக்கிலோ, அல்லது பார்ட்னர்களின் புக்கிலோ, மொபைல் இருப்பு இருந்ததே இல்லை. இதுநாள்வரையில், இது இந்தியாவின் எந்த நிறுவனத்திற்கும் சாத்தியமாகாத ஒன்று என நினைக்கிறேன். மற்ற மொபைல் நிறுவனங்களிடமும், அவர்கள் பார்டனர்களிடமும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கான ஸ்டாக் இருக்கும். அப்படியே எங்களுக்கு ஸ்டாக் இருந்தாலும், அது சில நாள்கள் தான். இதனால், எங்களது வொர்க்கிங் கேபிடல் மிக மிகக் குறைவு.

மார்க்கெட்டிங்

எங்கள் பிராண்டிற்கு இருக்கும் மிகப்பெரிய வரமாக இதைக் கருதுகிறேன். ஆன்லைன்/ஆஃப்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் விளம்பரங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றன. டிவி, செய்தித்தாள், ஹோர்டிங் என நாங்கள் எங்கும் விளம்பரம் செய்வதில்லை. விளம்பரத்திற்காக நாங்கள் செலவு செய்யும் தொகை மிக மிகக் குறைவு . இந்தப்பணம் அப்படியே விலையில் பிரதிபலிக்கிறது. ரெட்மி மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்கள் தான் எங்கள் பிராண்ட் அம்பாசிடர்.

சாஃப்ட்வேரிலும் லாபம் பார்க்கலாம்

இந்தியாவிலிருக்கும் பல்வேறு மொபைல் நிறுவனங்கள், மொபைலை விற்பதில் மட்டுமே லாபம் பார்க்கிறார்கள். அதாவது அவர்களின் லாபம் , ஹார்ட்வேரோடு நின்றுவிடுகிறது. எங்களுக்கு ஒரு மொபைல் விற்கும்போது கிடைக்கும் லாபம் மிகக்குறைவு, எங்களுக்கு அதிலிருக்கும் மென்பொருள் மூலம் அந்த மொபைலை வாடிக்கையாளர் எத்தனை ஆண்டுகள் பயன்படுத்துகிறாரோ, அத்தனை ஆண்டுகள் பணம் வருகிறது. ஃபேஸ்புக், கூகுள் எப்படி விளம்பரங்கள் மூலம் பணம் பார்க்கிறார்களோ, அதைப் போன்றதொரு நடைமுறைதான் இது.

இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால், இவை நான்குதான் எங்கள் நிறுவன மொபைல்களின் குறைவான விலைக்குக் காரணம் " என்றார்.
என் குரலில் பேசி ஏமாற்றினால், விளைவுகள் கடுமையாக இருக்கும்!” எஸ்.ஜானகி ஆவேசம்

ANANDARAJ K





ரேடியோ பண்பலை நிகழ்ச்சியில், தன் குரலில் பேசிய நபரால் கடும் கோபத்தில் இருக்கிறார், பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி. ''இது, மிகப்பெரிய மோசடி வேலை. இதனால் நான் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன்' என ஆவேசப்பட்டுள்ளார்.

ஜூன் 2 ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாள். அன்றைய தினம், பிரபல ரேடியோ பண்பலையில், ரசிகர்கள் பங்கேற்று இளையராஜாவைப் பற்றி பேசும் சிறப்பு நேரலை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாடகி எஸ்.ஜானகியே போன் செய்து, இளையராஜாவைப் புகழ்வது போலவும், ஒரு பாடலைப் பாடுவது போலவும் ஒலிபரப்பானது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அவரிடம் பேசியபோது, ''அப்படி நான் எதுவும் பேசவோ, பாடவோ இல்லை. ஒலிபரப்பானது என் குரலே இல்லை'' எனக் கொந்தளித்த எஸ்.ஜானகியைக் கூலாக்கி பேச வைத்தோம்.



"அந்தத் தனியார் பண்பலையில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் நான் பேசுவதுபோல ஒலிபரப்பான ஆடியோவை என் ரசிகர்கள் பலரும் எனக்கு அனுப்பினார்கள். 'இது உங்கள் குரல் போல் இல்லையே' என்று சொல்லியிருந்தார்கள். 'நான் எதுவும் பேசவில்லையே. பேட்டியும் கொடுக்கவில்லையே' என்ற குழப்பத்துடன் அந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இளையராஜா பிறந்தநாள் தொடர்பான அந்நிகழ்ச்சியில் என் குரலில் வேறு யாரோ பேசியிருக்கிறார். அதுவும் என் கருத்துகளுக்கு மாறான கருத்தில் அவர் பேசியிருப்பது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே, சம்பந்தப்பட்ட பண்பலை நிறுவனத்துக்குப் போன்செய்து விசாரித்தேன். 'பாடகி ஜானகி பேசுகிறேன் என்றதாலும், உங்கள் குரலைப்போலவே இருந்ததாலும் நாங்களும் ஆரம்பத்தில் நம்பிவிட்டோம். கொஞ்ச நேரம் கழித்துதான் அந்தக் குரலில் சில மாற்றத்தைக் கவனித்து சந்தேகப்பட்டோம். ஆனால், நேரலை நிகழ்ச்சி என்பதால், நடுவில் குறுக்கிட முடியவில்லை. பிறகு, அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு விசாரித்தபோதுதான், பேசியது ஓர் ஆண் என்பது தெரியவந்தது. அவரைக் கடுமையாக எச்சரித்தோம்' என்று சொன்னதோடு நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பும் கேட்டார்கள்.

ஆனால், நடந்தது ரசிகர்களுக்குத் தெரியாதல்லவா... அந்த நிகழ்ச்சியைக் கேட்ட ரசிகர்களும், இனி அந்த ஆடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் கேட்கும் ரசிகர்களும், உண்மையாகவே நான் பேசியிருப்பதாகவே நினைப்பார்கள் அல்லவா? ஒருவர் குரலில் பேசி மற்றவர்களை ஏமாற்றுவது மிகப்பெரிய மோசடி வேலை. ஓர் ஆண், பெண் குரலில் பேசி ஏமாற்றுவது மிகவும் கீழ்த்தரமான செயல். நடந்த இச்செயலால் நான் மிகவும் மன வேதனை அடைந்திருக்கிறேன். இனியும் இதுமாதிரியான நிகழ்வுகள் தொடரத்தானே செய்யும். சம்பந்தப்பட்ட நபர்மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், அவர் அறியாமையாலும் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால், அவர் செய்த தவறை மன்னித்துவிட்டேன். இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். ஒருவரைப் போலவே பேசி ஏமாற்றுவது சட்டப்படி குற்றம். கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய இதுபோன்ற செயல்பாடுகளில் என்னுடைய ரசிகர்கள் யாரும் ஈடுபட வேண்டாம். மீறி யாராவது என் குரலில் பேசி ஏமாற்றினால், நிச்சயமாக போலீஸில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பேன். கடும் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்" என ஆவேசமாக முடித்தார் எஸ்.ஜானகி.

இனிமையான ஒரு நிகழ்ச்சி, யாரோ ஒருவரின் தவறான செயலால், பலருக்கும் வேதனையைத் தந்துள்ளது. இனி இதுபோன்று நிகழ்வுகள் நடக்காது என நம்புவோம்!
ஏடிஎம்மில் கள்ளநோட்டு... கண்டுகொள்ளாத வங்கி... கலெக்டரிடம் தம்பதி புகார்

ஈ.ஜெ.நந்தகுமார் சே.சின்னதுரை

மதுரையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கள்ளநோட்டு வந்ததைப் பற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

கடந்த நவம்பரில் பிரதமர் மோடி பணமதிப்பிழக்கத்தைக் கொண்டு வந்தபோது, இந்த அறிவிப்பின் மூலம் கள்ளநோட்டு ஒழிக்கப்படும் என கூறினார். ஆனால் புதிதாக அச்சடிக்கப்பட்ட நோட்டுகளே, அடுத்த சில நாள்களில் புழங்க ஆரம்பித்தது. மேலும் வங்கி ஏ.டி.எம்களிலும் கள்ளநோட்டு வருவதாக பல்வேறு மாநிலங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, கடந்த ஜூன் 1 ஆம் தேதி மதுரையைச் சேர்ந்த முகமது என்பவர் அங்குள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது 2000 ரூபாய் கள்ளநோட்டு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முகமது, வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். மேலும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று மதுரை ஆட்சியர் வீர ராகவராவிடம் புகார் அளித்தார், முகமது. கள்ளநோட்டு பணமாக வந்த 2000 ரூபாயை பெற்றுத் தருமாறு புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே மாதத்தில் 7 விபத்துகள்... பாம்பன் பாலத்தில் தொடரும் துயரம்
இரா.மோகன்
உ.பாண்டி

சென்னை விமான நிலையத்துக்கு இணையாக விபத்து நடப்பதில் பாம்பன் சாலை பாலம் சாதனை படைத்து வருகிறது என்றால் அது மிகையில்லை. காரணம் கடந்த ஒரு மாத காலத்தில் விபத்து நடக்காத நாள்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு நாள்தோறும் இங்கு விபத்துகள் நடந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஏற்படாத விபத்துகள் கடந்த 30 நாள்களில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.



கடந்த 1974 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் இந்திரா காந்தியினால் பாம்பன் பாலம் அடிக்கல் நாட்டப்பட்டது. 19.26 கோடி ரூபாய் செலவில் சுமார் 2.5 கி.மீ தூரம் நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் கடல் மேல் பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் சுமார் 14 ஆண்டுகளுக்கு பின் 1988 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பாம்பன் பாலம் 'அன்னை இந்திரா காந்தி பாலம்' என பெயரிடப்பட்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறக்கப்பட்டது. இந்த பாலத்தி்ன் மையப் பகுதி கப்பல்கள் செல்லும் வகையில் இரும்பு இணைப்புகள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வீசும் காற்றில் அதிக உப்பு தன்மை இருப்பதால் இந்த இரும்பு இணைப்புகள் துருப்பிடித்து அவ்வப்போது சேதமடைந்து விடும். இதனால் பாலத்தினை வாகனங்கள் கடக்கும்போது அதிர்வு ஏற்படும். ஆனாலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்து கொண்டு அரசு பேருந்து ஒன்று கடலில் விழுந்து 8 பேர் பலியான சம்பவத்தை தவிர சொல்லிக் கொள்ளும்படியான விபத்துகள் நடந்ததில்லை.

இந்நிலையில் பாலத்தை சீர்படுத்த கடந்த ஆண்டு 18.56 கோடி ரூபாய் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னரும் பாலத்தின் மேற்பகுதி மற்றும் இணைப்பு பகுதிகள் சேதமடைந்து வந்தன.



இதனை சீர்படுத்த 2.70 கோடி ரூபாய் செலவில் வழுவழுப்பான ரப்பர் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சுண்ணாம்பு, தார் மற்றும் குவாரி துகள்கள் கொண்டு அமைக்கப்படும் இந்த சாலையில் கடந்த ஒரு மாத காலத்தில் எண்ணற்ற விபத்துகள் நடந்து வருகின்றன. ராமேஸ்வரம் வரும் சுற்றுலா வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டூ வீலர்கள் என அனைத்து வகை வாகனங்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன. வெயில் மற்றும் மழை நேரங்களில் புதிதாக போடப்பட்ட ரப்பர் சாலை இளகி விடுகிறது. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் தங்கள் வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் உபயோகித்தால் அவை முழுமையாக இயங்குவதில்லை. இதனால் எதிரில் செல்லும் வாகனங்கள் மீதோ தடுப்பு சுவர் மற்றும் விளக்கு கம்பங்கள் மீதோ மோதி விபத்தில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.

புதிய சாலையினால் ஏற்பட்ட விபத்துகளினால் கடந்த 2 நாள்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் பலியாகி உள்ளார். இந்த உயிர்ப் பலி மேலும் அதிகரிக்கும் முன்னர் இந்த புதிய சாலையில் உள்ள குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவு பகுதியைச் சேர்ந்த அனைத்துக்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

தரையில் விபத்து நடந்தாலே உயிர் பிழைப்பது பெரும்பாடு. இது கடலின் மேல் உள்ள பாலம். அர்த்தராத்திரி நேரங்களில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடலைக்கூட உடனடியாக எடுக்க முடியாது. எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நீட் தேர்வு: நீதிபதிகள் எழுப்பிய அதிரடி கேள்விகள்!
அஷ்வினி சிவலிங்கம்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மதிப்பெண்ணை சேர்க்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.



அப்போது நீதிபதிகள், இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி, பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாததற்கு என்ன காரணம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன, கல்வித்தரம் இல்லாதநிலையில் நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் கல்வித்தரம் வேறுபடும்போது அனைவரும் சி.பி.எஸ்.இ தேர்வை எப்படி எதிர்க்கொள்ள முடியும்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இவ்வாறு கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

பான் - ஆதார் இணைப்பு அவசியம் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போதைக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

வழக்கின் பின்னணி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்கியும், நிரந்தர பான் எண் பெற ஆதாரை அவசியமாக்கியும் மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

பான் எண்ணை இணைப்பதன் மூலம் போலி பான் எண் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க முடியும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "ஆதார் கட்டாயமல்ல என நாங்கள் உத்தரவு பிறப்பித்திருக்கும்போது நீங்கள் (மத்திய அரசு) எப்படி அதை கட்டாயமாக்கி உத்தரவிட முடியும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் ஏன் கட்டாயம் என்பதை அரசு விளக்க வேண்டும்" என்றனர்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பில் ஆஜரான அடர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, "ஷெல் நிறுவனங்கள் வாயிலாக நடைபெற்ற வரி ஏய்ப்பு பின்னணியில் போலி பான் எண்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணைகளை அடுத்து, இன்று(வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.
“ஒன் ப்ளஸ் 5 வரட்டும்னு காத்திருக்கோம்!” - வெயிட்டிங்கிலே வெறியேற்றும் 'வாவ்' மொபைல்

ஞா.சுதாகர்


நிறைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 20-ம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகவிருக்கிறது ஒன்ப்ளஸ் 5. இந்தியாவில் ஜூன் 22-ம் தேதி வெளியாகிறது.ரெட்மியின் பட்ஜெட் மொபைல்களைப் போலவே மிட்ரேஞ்ச் மொபைல்களில் ஹிட் அடித்த மாடல் ஒன்ப்ளஸ் 3-யும், ஒன்ப்ளஸ் 3T-யும். அதனால் ஒன்ப்ளஸ் 5 மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Snapdragon 835 பிராஸசர், டூயல் கேமரா என இப்போதே இந்த போன் தொடர்பான உறுதியான செய்திகளும் வலம்வரத் துவங்கிவிட்டன. ஒன்ப்ளஸ் 5-ல் என்னென்ன அம்சங்கள் இடம்பிடிக்கவிருக்கிறது?


ஒன்ப்ளஸ் 4-க்கு என்னாச்சு?

ஒன் ப்ளஸ் 3 போன் ஆனது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. அதன் அப்டேட் வெர்ஷனான 3T டிசம்பர் மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து ஒன் ப்ளஸ் 4 ஆனது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகவிருக்கிறது எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அடுத்து வரப்போவது ஒன்ப்ளஸ் 4 அல்ல. ஒன்ப்ளஸ் 5-தான் என இந்த ஆண்டின் மார்ச் மாதமே உறுதி செய்தது அந்நிறுவனம். 4-ம் எண்ணைத் தவிர்த்து நேரடியாக ஒன்ப்ளஸ் 5-க்கு செல்வதற்கு முக்கியமாக சொல்லப்படும் காரணம் சீனாவின் நான்காம் நம்பர் சென்டிமென்ட்தான். சீனாவைப் பொறுத்தவரை 4 என்பது மரணத்துடன் தொடர்புடைய எண்ணாக கருதப்படுவதால் அதைத் தவிர்த்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். நான்காம் எண்ணைக் கண்டு அஞ்சும் டெட்ராபோபியா பிரச்னை இந்த நிறுவனத்திற்கு மட்டுமல்ல. நோக்கியா, விவோ நிறுவனங்களுக்குக் கூட இருக்கின்றன.

View image on Twitter



பவர்ஃபுல் பிராஸசர்:

5.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, முன்பக்க ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், டேஷ் சார்ஜ் டெக்னாலஜியுடன் கூடிய 3,600 mAh பேட்டரி, 6 ஜி.பி ரேம், 128 ஜி.பி இன்டர்னல் மெமரி ஆகியவை இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் Snapdragon 835 பிராஸசர் இருப்பது மட்டுமே தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் பெர்பார்மன்சில் எந்தக் குறையும் இருக்காது என்பது மட்டும் உறுதி. மேலும், ஐபோன் போல திடீரென 3.5 mm ஆடியோ ஜாக்கை ஒன்ப்ளஸ் நிறுவனம் நீக்கப்போவதில்லை.

டூயல் கேமரா:

ப்ரீமியம் போன்களில் இருப்பது போன்ற டூயல் கேமரா செட்டப் என்பது உறுதியாகிவிட்டது. அது முன்பக்க கேமராவாகக் கூட இருக்கலாம். மேலும், தன் கேமராக்களின் போட்டோகுவாலிட்டியை மேம்படுத்துவதற்காக DxO நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. எனவே கேமராவில் சில நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். 16 எம்.பி திறன்கொண்ட ஃபிரன்ட் கேமரா மற்றும் ரியர் கேமராக்கள் இடம்பெறும் வாய்ப்பிருக்கிறது.



ஆபரேட்டிங் சிஸ்டம்:

ஆண்ட்ராய்டு நௌகட் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன், அப்டேட் ஆக வரவிருக்கிறது ஒன்ப்ளஸ் 5. மேலும், தன் கஸ்டமைஸ்டு ஆபரேட்டிங் சிஸ்டமான ஆக்சிஜன் ஓ.எஸ்.,ஸில் மட்டும் சில மாற்றங்களை செய்யவிருக்கிறது.

டிசைன்:

ஷார்ப் எட்ஜ் இல்லாமல், ரவுண்ட் எட்ஜ் எனப்படும் வட்டவடிவமான விளிம்புகளோடு இருக்கிறது ஒன்ப்ளஸ் 5. அலுமினியம் மெட்டாலிக் பாடியுடன், ஒன்ப்ளஸ் 3T-யை விடவும் கொஞ்சம் மெலிதாக இருக்கும். கறுப்பு, கோல்ட், பச்சை மற்றும் மேலும் ஒரு நிறத்துடன் வெளிவர வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இந்த கலர் ஆப்ஷன்கள் குறித்து ஏற்கெனவே ட்விட்டரில் கேள்வி கேட்டிருந்தது ஒன்ப்ளஸ்.

விலை:

தற்போது விற்பனையில் இருக்கும் ஒன்ப்ளஸ் 3 மாடல் 27,999 ரூபாய்க்கும், 3T மாடல் 29,999 ரூபாய்க்கும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பிராஸசர், கேமரா, ரேம் என அனைத்திலும் ஒன்ப்ளஸ் 5 கில்லியாக இருக்கும் என்பதால் இந்தமுறை 35,000 ரூபாய் அளவில் விற்பனைக்கு வரலாம்.
“திருமண முறிவின் கசப்பை, இனிமையாக்கியது யோகா!” - யோகா ஆசிரியையின் நெகிழ்ச்சிக் கதை

ஆர். ஜெயலெட்சுமி



பெண்களின் வாழ்வின் முழுமையே திருமண பந்தத்தில்தான் உள்ளது என்ற சூழல் சமூகத்தில் நிலவுகிறது. பெண்கள் சிறந்த குடும்பத் தலைவியாக செயல்படுவதில்தான் தங்கள் பிறப்பின் லட்சியமே அடங்கியுள்ளது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. பல பெண்கள் தனக்கென வேலை, பொழுதுப்போக்கு என எதுவும் இல்லாமல், அனைத்தையும் துறந்து குடும்பமே கதி என இருக்கின்றனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாட்டால் பிரச்னைகள் எழும்போது அந்தப் பெண்ணின் வாழ்வு கேள்விக்குறியாகி விடுகிறது. குடும்பத்தின் அன்றாடத் தேவைக்கு என்ன செய்வது? குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்குவது? என பெரும் கவலைக்குள் மூழ்கிவிடுகின்றனர். அதிலிருந்து ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வரும் பெண்களில் ஒருவராக, சாதனைப் பெண்மணியாக திகழ்கிறார் சிவகாசியைச் சேர்ந்த யோகா ஆசிரியை ஞானவாணி. குடும்ப வலி தந்த வலிமையில் தான் சாதித்த கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

‘‘என்னோட சொந்த ஊர் சாத்தூர். எல்லா பொண்ணுங்களைப் போல எனக்கும் பட்டப்படிப்பு முடிச்சதும் கல்யாணம். கல்யாணங்கிற பந்தத்தை நாங்க இரண்டு பேரும் முழுசா புரிஞ்சுக்கிறதுக்குள்ள குழந்தைப் பொறந்துருச்சு. கணவர்தான் நமக்கு எல்லாம்னு முடிவு பண்ணி எந்த வேலைக்கும் போகாம, வீட்டு வேலை, குழந்தையை வளர்க்கிறதுனு இருந்தேன். சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் தொடங்கி டைவர்ஸ் நோட்டீஸ் வர்ற அளவுக்குப் போயிடுச்சு. வேலைக்கே போகாத எனக்கு இரண்டு குழந்தைகளையும் வளர்க்கிற பொறுப்பு. எனக்கு வெளியுலகமே தெரியாது. இனி இப்படிதான் நம் வாழ்க்கை என்பதை ஏத்துக்கவே முடியல. அழுது அழுது மனஅழுத்தம் அதிகமாயிருச்சு. இனி குழந்தைகளுக்கு நான் மட்டும்தானு மனசுக்கு தெரிஞ்சாக்கூட என்னால அந்த வலியிலிருந்து வெளியேற முடியல'’ எனச் சொல்லும் போதே குரல் தழுத்தது.



‘‘மன அழுத்தத்துலேர்ந்து விடுபடுறதுக்காக யோகா கத்துக்கிட்டேன். அப்ப என்னோட பெரிய பையன் பத்தாவது படிச்சிட்டு இருந்தான். சின்ன பையன் எல்.கே.ஜி. முதல்ல சிரமமா இருந்துச்சு. தொடர்ந்த முயற்சி, பயிற்சியோட பலனா யோகாலேயே பிஜி டிகிரி படிக்கிற வரைக்கும் உயர்ந்தேன். என்னோட பொறந்த வீட்ல கொஞ்சம் எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. சமூகத்துல அங்கீகாரம் கணவர்தானு நினைச்ச என் நினைப்பு பொய்யாயிருச்சு. அவரோட அடையாளம் இல்லாம, நமக்குனு ஒரு அடையாளம் வேணும்ன்ற வெறி மட்டும் மனசுல நெருப்பா இருந்தது. ஸ்கூல்ல போயி பிள்ளைகளுக்கு யோகா கிளாஸ் எடுத்தேன். வீட்லேயும் பெண்கள், குழந்தைகளுக்குனு பிஸியா கிளாஸ் எடுத்துட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல மாநில அளவுல யோகா போட்டி நடந்தது. அதுல கலந்துக்கிட்டு முதலிடத்துல வந்தேன்’’ எனப் பெருமையாக சொன்னவர், அதன் பின் நடந்த சாதனைகளை விவரிக்கத் துவங்கினார்.

“முதல் வெற்றி தந்த ஊக்கத்தால 2013-ல் 20 நிமிஷத்துல 310 ஆசனங்கள் செஞ்சு உலக சாதனை பண்ணினேன். அடுத்து, 2015-ல ஜிம் பால்ல 1875 ஆசனங்கள் பண்ணி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல இடம் பிடிச்சேன். இப்பக்கூட கின்னஸ் சாதனைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அதுவும் சீக்கிரம் கிடைச்சிரும்னு’’ என நம்பிக்கையோடு பேசுகிறார் ஞானவாணி.. தான் கற்ற வித்தையை மற்றவர்களுக்கு கற்பிக்கும் விதத்தைப் பகிர்ந்தார்.

“வர்மக்கலையும் எனக்கு அத்துப்பிடி. யோகா, வர்மக்கலையால பெண்களோட வாழ்க்கையில ஏற்படுற மனப்பிரச்னை, உடல் பிரச்னையைத் தீர்க்க முடியும். அதுக்கான பயிற்சிகளைப் பெண்களுக்குக் கத்துக் கொடுத்துட்டு வர்றேன். எனக்குப் பாரம்பரியத்துல அவ்ளோ பற்று. வளர்ற தலைமுறை நல்ல உணவு, ஆரோக்கியத்தோட இருக்கணும்ன்றதுதான் என்னோட ஆசை. அதனால குழந்தைங்களுக்கு இலவச யோகா பயிற்சியோட, சித்தர் வாழ்வியல் நெறி முறைகளையும் கற்றுத் தர்றேன். குழந்தைங்க நிறைய பேர் ஆர்வமா கத்துக்கிட்டு வர்றாங்க. யோசிச்சுப் பார்க்கிறப்ப, எவ்ளோ அடிச்சாலும், ஸ்பின் பால் மாதிரி உயர எழுந்ததாலதான் நாம இன்னிக்கு இந்த அளவுல உயர முடிஞ்சதுனு நினைச்சுப்பேன்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

மெட்ரோ பணியால் வீட்டுக்குள் இருந்து வெளியேறிய சிமெண்ட் கலவை: அச்சத்தில் பொதுமக்கள்

கார்த்திக்.சி

மெட்ரோ பணியின் காரணமாக, சென்னை ராயபுரம் பகுதியில் சிமெண்ட் கலவை சாலையில் வெளியேறியது.




சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.5 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில், பழைய வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் பகுதியிலிருந்து தண்டையார்பேட்டை வரையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான பணி நடந்துவருகிறது. இந்த நிலையில், இன்று ராயபுரம் கல்லறைச் சாலை பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து திடீரென சிமென்ட் கலவை வெளியேறியது.

சுமார் 2 அடி உயரத்துக்கு வெளியேறிய இந்த சிமென் கலவை, ரோடு வரைக்கும் வெளியேறியது. திடீரென சிமென்ட் கலவை வெளியேறியதால், அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மெட்ரோ ஊழியர்கள் வந்து கழிவை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதிரி சிமென்ட் கலவை வெளியேறுவது இரண்டாவது முறையாகும். சென்னை முழுவதும் நடைபெற்றுவரும் மெட்ரோ பணியின் காரணமாக, அவ்வப்போது விசித்தரமான சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. ஏற்கெனவே, இதேபோல வண்ணாரப்பேட்டை பகுதியில் சிமென்ட் கலவை வெளியேறியது. இரண்டு முறை சென்னை அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...