Sunday, December 27, 2015

மைனர் குழந்தை பாதுகாவலர்: மறுமணம் செய்த தாய்க்கு உரிமை உண்டு'

சென்னை: 'மறுமணம் செய்து கொண்ட தாய், தன் முதல் கணவர் மூலம் பெற்ற குழந்தையின் பாதுகாவலராக இருக்க உரிமை இல்லை எனக் கூறுவது, முறையற்றது; சமூக நீதிக்கு எதிரானது' என, சென்னை உயர்நீதிமன்றம், கருத்து தெரிவித்துள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம், மணல்மேடு பகுதியைச் சேர்ந்த, மேனன்பாபு -- சுபா தம்பதியருக்கு, மூன்றரை வயதில், காவியா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. மதுவுக்கு அடிமையான மேனன்பாபு, 2013ல், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின், தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்த சுபா, சுசீந்திரன் என்பவரை மறுமணம் செய்தார்.இந்நிலையில், மேனன் பாபுவின் தாய் காளியம்மாள், பள்ளி சென்று வீடு திரும்பிய குழந்தை காவியா ஸ்ரீயை கடத்திச் சென்றார். இது சம்பந்தமாக, சுபா அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த மணல்மேடு போலீசார், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, தன் மகளை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, சுபா உயர்நீதி மன்றத்தில், ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், நீதிபதி செல்வம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
'கணவன் இறப்புக்குப் பின், மறுமணம் செய்து கொண்ட சுபாவிடம் குழந்தையை ஒப்படைப்பது, அக்குழந் தையின் நலனுக்கு விரோதமானது' என, காளியம்மாள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது. கணவன் மரணத்துக்குப் பின், சட்டப்படி மறுமணம் செய்து கொள்ள சுபாவுக்கு உரிமை உள்ளது. விதவை மறு மணத்தை ஊக்குவிக்க, தமிழக அரசு கொள்கை முடிவை
எடுத்துள்ளது.மறுமணம் செய்து கொண்டார் என்பதற்காக, அவர், தன் குழந்தையின் பாதுகாவலராக இருக்க தகுதியற்றவராகி விட்டார்; அவருக்கு உரிமையில்லை எனக் கூறுவது சமூக நீதிக்கு விரோதமானது. மேலும், சுபா, குழந்தையின் தாய்; இயற்கை பாதுகாவலர். ஆனால், காளியம்மாள், தந்தை வழி பாட்டி தான்.
எனவே குழந்தையை, காளியம்மாள் உடனடியாக அதன் தாயிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை, நாகப் பட்டினம் போலீசார் வழங்க வேண்டும்.
இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...