Friday, March 10, 2017

பிள்ளையார்பட்டியில் மே1ல் கும்பாபிஷேகம்

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மே1ல் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று யாகசாலைக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இக்கோயிலில் 13 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் திருப்பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது. தற்போது பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை அமைக்கும் பணி நேற்று துவங்குவதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. முன்னதாக மூலவர் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சன்னதி முன் முகூர்த்தக்கால் புண்ணியாகவாசனம் செய்யப்பட்டது. பின் முகூர்த்தக்கால் ராஜகோபுரத்தின் கிழக்குப் பகுதியில் யாகசாலை அமைக்கப்படும் பகுதிக்கு வந்தது. அங்கு ஈசான்ய மூலையில் முகூர்த்தக்கால் கொண்டு வரப்பட்டது.கோவில் அறங்காவலர்கள் ஏஎல்.பெரியகருப்பன், என்.மாணிக்கவாசகன் தலைமையில் தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தரகுருக்கள் முன்னிலையில் பூமி பூஜை நடந்தது. காலை 10:30 மணிக்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. 101 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு, எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. 200 சிவாச்சாரியர்கள் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேகம் மே1ல் காலை 9:00-- 10:00 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...