Friday, March 3, 2017

கும்பகோணம் மாசி மக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தஞ்சாவூர்: - கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், 10 நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், மக நட்சத்திரத்தன்று, மாசி மக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகா மக விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, 2016ல் மகா மகம் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று மகா மகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவில், உள்ளிட்ட சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் நேற்று விழா துவங்கியது. முதலாவதாக ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவிலில் கொடியேற்றப்பட்டது.
வைணவத் தலங்கள் : வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபால சுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில், இன்று காலை, 9:30 மணிக்கு, 10 நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.உயரமான புதிய கொடி மரம்கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலுக்கு, 70 அடி உயரத்திற்கு, புதிய கொடி மரம், மலேஷியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் கொடி மரம், 100 ஆண்டுகள் பழமையானதால், சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, அங்கு புதிய கொடி மரம் நிறுவ முடிவு செய்யப்பட்டது.

உபயதாரர் மூலம், இக்கோவிலுக்கு மலேசியாவிலிருந்து வேங்கை மரம், துாத்துக்குடிக்கு கப்பல் மூலம் எடுத்து வரப்பட்டது. 25 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த வேங்கை மரம், 70 அடி நீளம், 2 அடி அகலம் உடையது. சித்திரை திருவிழாவிற்குள் புதிய கொடி மரத்தை நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கோவிலுக்கு வந்த கொடி மரத்திற்கு, பட்டாச்சாரியார்கள் சிறப்பு அர்ச்சனை செய்தனர்.

No comments:

Post a Comment

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது...

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது... செயற்கை நுண்ணறிவு  Din Updated on:  03 ஏப்ரல் 2025, 6:15 am  எஸ். எஸ்...