Saturday, September 23, 2017

தினகரன் கூடாரம் காலியாகிறது2 பேர் அணி மாறினர்
மேலும் பலர் மாற உறுதி


தினகரன் ஆதரவு எம்.பி., வசந்தி முருகேசன், நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அணி மாற திட்டமிட்டிருப்பதால், தினகரன் கூடாரம் காலியாகிறது.



டில்லி, திஹார் சிறையில்இருந்து, தினகரன் வெளியில் வந்தபோது,37 எம்.எல்.ஏ.,க்கள், சென்னையில் அவரை சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களும்,தினகரனை ஓரங்கட்டியதும், அவரின் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களில் பலரும் அணி மாறினர். இறுதியாக,19 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும், தினகரன் பக்கம் சென்றனர்.

தகுதி நீக்கம்

மேலும், பலஎம்.எல்.ஏ.,க்கள், 'ஸ்லீப்பர் செல்' எனப்படும் ரகசியபடையாக, முதல்வர் அணியில் உள்ளனர். அவர்கள் உதவியுடன், ஆட்சியை கவிழ்க்கப் போவதாக, தினகரன் பூச்சாண்டி காட்டி வந்தார்;

ஆனால், முதல்வர் தரப்பில் பயப்படவில்லை. அந்த கோபத்தில் இருந்த தினகரன் உத்தரவின்படி, 19 எம்.எல்.ஏ.,க்கள், ஆக., 22ல், கவர்னரை சந்தித்து, முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக, கடிதம்
கொடுத்தனர்.அதற்கு பதிலடி தர, முதல்வர் தரப்புஅதிரடி நடவடிக்கையில்இறங்கியது. கவர்னரிடம் கடிதம் கொடுத்தவர்களை தகுதி நீக்கம் செய்ய, அரசு தலைமை கொறடாராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், தங்களை தகுதி நீக்கம் செய்ய மாட்டார்கள். முதல்வர் தரப்பில் இறங்கி வருவர் என எதிர்பார்த்தனர்.

அதற்கு மாறாக,சபாநாயகர் தனபால், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியதுடன், நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.அதனால் உஷாரான, எம்.எல்.ஏ., ஜக்கையன், சபாநாயகரை சந்தித்து, கவர்னரிடம்அளித்தகடிதத்தை, திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அதனால், அவர் சபாநாயகரின் நடவடிக்கையில் இருந்து தப்பினார். ஆனால், தினகரன் ஆதரவு, மற்ற எம்.எல்.ஏ.,க் கள், 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து,அவர்கள் தொடர்ந்த வழக்கிலும், உயர் நீதிமன்றம், சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனால், 18 பேரும் பதவி பறிபோனகலக்கத்தில் உள்ளனர்.கவிழ்க்க முடியாது மேலும், தினகரன் கூறியபடி, 'ஸ்லீப்பர் செல்' எம்.எல்.ஏ.,க்கள் யாரும் இல்லை என்பதும், ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பது உறுதியாகி உள்ளதாலும், அவர்கள் அனைவரும், அணி மாறும் மனநிலைக்கு வந்து விட்டனர்.

அதனால், ஜக்கையனை தொடர்ந்து, தற்போது, பெண் எம்.பி., ஒருவரும், தினகரனை விட்டு விலகியுள்ளார். தென்காசி தொகுதியைச் சேர்ந்த வசந்தி முருகேசன்,இதுவரை,தினகரன் அணியில் இருந்தார்.நேற்று, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அணி மாறினார். அடுத்தடுத்து, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தினகரன் அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதால், அவரது கூடாரம்காலியாகி வருகிறது.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில், முதல்வர் பழனிசாமியை சந்தித்த பின், வசந்தி முருகேசன் கூறியதாவது: 'எனக்கு பின்னாலும், அ.தி.மு.க., 100 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்காக இயங்கும்' என, ஜெ., தெரிவித்தார். அதன்படி, அவர் தந்த நலத் திட்டங்களை, முதல்வர், துணை முதல்வர் இணைந்து, செயல்படுத்தி வருகின்றனர்.

தொண்டர்கள் கொதிப்பு:

ஆனால், 'தி.மு.க.,வோடு கூட்டு சேர்ந்து, ஆட்சியை கவிழ்ப்பேன்' என, தினகரன் கூறுகிறார். இதனால், தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர். மக்கள் நலனுக்காக செயல்பட்ட, ஜெ., ஆட்சியை கலைப்பதாக கூறுவதை, ஏற்க முடியாது. எனவே, அவர் அணியிலிருந்து விலகினேன். விரைவில், மற்றவர்களும் வருவர். ஜெ.,வால் உருவாக்க பட்ட, எம்.எல்.ஏ.,க்களை, சிறை பிடித்து வைத்துள்ளனர்.

ஆட்சி கவிழக் கூடாது என்பதற்காக, முதல்வருக்குஆதரவு தெரிவித்துள்ளேன். இந்த ஆட்சி தொடர வேண்டும் என, மக்கள் நினைக்கின்றனர்.இவ்வாறு அவர்கூறினார்.

ஏழாக குறைவு!

தினகரன் அணியில், ராஜ்யசபா எம்.பி.,க்கள், விஜிலா சத்தியானந்த்,நவநீதகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன்; லோக்சபா எம்.பி.,க்கள் கோவை நாகராஜன், தென்காசி வசந்தி முருகேசன், விருதுநகர் ராதாகிருஷ்ணன், வேலுார் செங்குட்டுவன், திண்டுக்கல் உதயகுமார் என, எட்டு பேர் இருந்தனர். இவர்களில்,வசந்தி முருகேசன் அணி மாறியதை தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.பி.,க்கள் எண்ணிக்கை, ஏழாகக் குறைந்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025