Saturday, September 23, 2017

தேங்காய் விலை ரூ.80 : குமரி மாவட்டத்தில், 'ஷாக்'

பதிவு செய்த நாள்23செப்
2017
02:08


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒரு தேங்காய், 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தேங்காய் உற்பத்தியில், கன்னியாகுமரி மாவட்டம், முன்னணியில் இருந்து வந்தது. 

ஈத்தொமொழி தேங்காய் பிரபலமானதாகும். இங்கு, அதிக அளவில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள தேங்காயை துருவினால், அதிக அளவில் தேங்காய் பூ கிடைக்கும்; அதிக ருசியும் இருக்கும்.கடந்த ஒரு மாத காலமாக, தேங்காய் விலை, 'கிடுகிடு' என உயர்ந்து வருகிறது. நேற்று, ஒரு கிலோ தேங்காய், 50 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு பெரிய தேங்காய், 80 ரூபாய் வரை விற்பனை ஆனது.'சில மாதங்களாக, மழை சரிவர பெய்யாததால், பல இடங்களிலும், தென்னையின் கொண்டை காய்ந்து, காய் உற்பத்தி பாதிக்கப்பட்டது தான், விலை உயர்வுக்கு காரணம்' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.தற்போது, மழை பெய்தாலும், விளைச்சல் ஆக பல மாதங்கள் ஆகும் என்பதால், தேங்காய் விலை இன்னும் உயரும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025