Saturday, September 23, 2017

ஐ.டி., பெண் அதிகாரியின் கணவரிடம் விசாரிக்க முடிவு

பதிவு செய்த நாள்23செப்
2017
02:15

சென்னை, வருமான வரித்துறை பெண் அதிகாரி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, அவரது கணவரான, ஆந்திர மாநிலம், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,விடம், சி.பி.ஐ.. அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், தமிழகம் - புதுவை பிராந்தியத்தின் தணிக்கை பிரிவில், ஆணையராக பணிபுரிந்து வருபவர், டி.எச்.விஜயலட்சுமி. 

அவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள், சென்னை, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கிடைத்தன. அதைத் தொடர்ந்து, அவர் மீதும், ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியில், பிரகாசம் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக உள்ள, அவரது கணவர் சுரேஷ் மீதும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: கணவன் - மனைவி இருவரும், 2010 முதல், 2016 வரையிலான காலகட்டத்தில், 5.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிஉள்ளனர். ஆனால், 4.84 கோடி ரூபாய்க்கு மட்டும், கணக்கு காட்டியுள்ளனர். 

எனவே, வருமானத்திற்கு அதிகமாக, 1.1 கோடி ரூபாய், அதாவது, 22 சதவீதம் கூடுதலாக, சொத்து சேர்த்துள்ளனர். விஜயலட்சுமியன் கணவர், ரயில்வேயில் கணக்குத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர். பின், ஜெகன் மோகனின் கட்சியில் சேர்ந்து, 2009ல், எம்.எல்.ஏ., ஆனார். 

தற்போது மீண்டும், எம்.எல்.ஏ.,வாக உள்ளார். சுரேஷிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதற்காக, விரைவில் ஆந்திரா செல்ல உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025