Tuesday, April 22, 2025

சேலத்தில் இதுவரை இல்லாத அளவாக 102.2 டிகிரி வெப்பம் பதிவு


சேலத்தில் இதுவரை இல்லாத அளவாக 102.2 டிகிரி வெப்பம் பதிவு 

சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தாண்டிய வெயில், திங்கள்கிழமை அதிகபட்சமாக 102.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.

Din Updated on: 22 ஏப்ரல் 2025, 1:50 am 

சேலம்: சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தாண்டிய வெயில், திங்கள்கிழமை அதிகபட்சமாக 102.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால், கடந்த சில நாள்களாக வெயில் 100 டிகிரியை எட்டிய நிலையில், நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக திங்கள்கிழமை 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் கடுமையான அனல்காற்று வீசியது.

வெயிலின் தாக்கத்தால் பகல்நேரங்களில் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனா். குறிப்பாக, கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

பழக்கடைகளிலும், சாலையோரம் உள்ள தற்காலிக ஜூஸ் கடைகளிலும் பழச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்கின்றனா்.

கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் வகையில் சுடிதாா் துப்பட்டாவை தலையில் மூடியவாறும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமா்ந்த பெண்கள் குடையை பிடித்தவாறும் செல்வதை காணமுடிகிறது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நான்கு சாலை, சூரமங்கலம், கொண்டலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இளநீா், நுங்கு, பதநீா், முலாம்பழம், தா்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், கரும்புச்சாறு, மோா் ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவில் அருந்துகின்றனா்.

வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்தவரை பொதுமக்கள் தவிா்க்குமாறும், ஜூஸ், இளநீா், மோா், கரும்புச்சாறு போன்ற நீா் ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...