Friday, January 13, 2017

போகி, பொங்கல்,மாட்டுப்பொங்கல் சாமி கும்பிட நல்ல நேரம்

சென்னை: மார்கழி 29ஆம் தேதி ஜனவரி 13ஆம் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை முதல் நாள் ஜனவரி 14ஆம் தேதி தை பொங்கல் திருநாளும், ஜனவரி 15ஆம் நாள் மாட்டுப்பொங்கலும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

போகி பண்டைய காலத்தில் இந்திர விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. இது இந்திரனுக்காக கொண்டாடப்படும் பண்டிகை. இந்திரனைப் போல நாமும் மகிழ்ச்சியுடன் தினசரியும் போகம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை 'போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சாமி கும்பிட நல்ல நேரம்
பழைய பொருட்களை நீக்கிவிட்டு புதிய பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நாளை போகி திருநாளில் பழையவைகளை நீக்கி புதியவைகளை வைத்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை
பொங்கல் பண்டிகை தை முதல்நாள் பொங்கல் வைக்க நல்ல நேரம் பகல் 11.00 - 12.00

மாட்டுப்பொங்கல் நாளில் பசுக்கள், காளைகளுக்கு நன்றி செலுத்த பொங்கல் வைத்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 8.00 மணி முதல் 10 மணி வரை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 வரை நல்ல நேரம்
source: oneindia.com
Dailyhunt

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...