Wednesday, September 13, 2017

கூகுள் தெரியும், டக்டக்கோ தெரியுமா?

Published : 08 Sep 2017 10:03 IST

சைபர்சிம்மன்

(



மாற்றுத் தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ‘டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கூகுளுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது ‘டக்டக்கோ’. இதற்கு முக்கிய காரணம், டக்டக்கோ இணையவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவதுதான். இணையவாசிகளின் தேடலைக் கண்காணிக்காமல் இருப்பதும், அவர்களைப் பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதுமே டக்டக்கோவின் தனிச்சிறப்பு. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.

எனவே, உங்கள் இணைய தேடல் அனாமதேயமாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களும் டக்டக்கோவை பயன்படுத்திப் பார்க்கலாம். பிரைவசி பாதுகாப்பு முதன்மை அம்சம் என்றாலும், டக்டக்கோவுக்கு மாற்றிக்கொள்ள மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ பல தனித்தன்மையான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பல பிரத்யேகமானவை.

ஸ்டாப் வாட்ச்

நீங்கள் விரும்பினால் டக்டக்கோவை ஸ்டாப் வாட்சாக பயன்படுத்தலாம். இதன் கட்டத்தில் ஸ்டாப் வாட்ச் என டைப் செய்தால் போதும், அதற்கான கடிகாரம் தோன்றும். அதில் உங்களுக்குத் தேவையான நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல, அடுத்தடுத்து வேலைகள் இருந்தால், லேப் வசதி மூலம் தொடச்சியாகப் பயன்படுத்தலாம். இதே முறையில் டைமர் சேவையையும் பயன்படுத்தலாம். டைமரில் நேரம் முடிந்ததும் அலாரமும் ஒலிக்கும்.

ஆங்கில வாசகங்களில் தேவையான இடங்களில் கேபிட்டல் எழுத்துகளை அமைக்க விரும்பினால், அதற்கான வசதியையும் இந்தத் தேடியந்திரம் வழங்குகிறது. வாசகத்தை டைப் செய்து அதற்கு முன் ‘டைட்டில் கேஸ்’ என குறிப்பிட்டு இடைவெளி விடுவதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துகளை லோயர் கேஸ் அல்லது அப்பர் கேஸாக மாற்றவும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்திகளைத் தேட

கூகுளில் தகவல்களைத் தேடும்போது, தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால், டக்டக்கோ தேடல் முடிவுகளை மட்டுமே அளிக்கிறது. இருப்பினும் செய்திகளும் இடம்பெற விரும்பினால், தேடலுக்கான கீவேர்டு முன் அல்லது முடிவில் நியூஸ் என சேர்த்துக்கொண்டால் போதும், தொடர்புடைய செய்திகளையும் காணலாம். 100-க்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.

டக்டக்கோவில் எச்.டி.எம்.எல். கோப்புகளையும் எளிதாகத் தேடலாம். எச்.டி.எம்.எல். என குறிப்பிட்டால் பொருத்தமான முடிவுகளைக் காணலாம். புரோகிராமிங் சிறப்பு குறியீடுகளையும் தேடலாம். இதேபோல பிடிஎப் கோப்புகள் அல்லது மின் புத்தகங்களை எதிர்பார்க்கும்போது, கீவேர்டுடன் பிடிஎப் எனும் வார்த்தையைச் சேர்த்துக்கொண்டால் போதும், கோப்புகளை மட்டும் தேடலாம்.

உடனடி பதில்கள்

சில நேரம் ஒட்டுமொத்த இணைய கடலிலும் தேட விரும்பாமல் குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட விரும்பலாம். இதற்கும் டக்டக்கோவில் வழி உண்டு. இந்த வசதி ‘ஐபேங்க்’ என சொல்லப்படுகிறது. தேடல் பதத்துக்கு முன் ஆச்சரியக்குறியைச் சேர்த்து, குறிப்பிட்ட தளத்துக்கான முதல் எழுத்தை குறிப்பிட்டால் போதும், அந்த ஒரு தளத்தில் மட்டும் தேடலாம். உதாரணத்துக்கு !a என்றால் அமேசான் தளத்தில் தேடலாம். இப்படி நூற்றுக்கணக்கான தளங்களில் நேரடியாக தேடும் வசதியை அளிக்கிறது. இதற்கான நீண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுப் பிரிவிலும் தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்தச் சேவை மிகவும் பயனளிக்கும். இவ்வளவு ஏன், இந்த வசதியை பயன்படுத்தி கூகுளிலும் தேடலாம்.

‘இன்ஸ்டண்ட் ஆன்சர்ஸ்’ எனும் பெயரில் உடனடி பதில்களையும் டக்டக்கோ வழங்கி வருகிறது. குறிப்பிட்ட பல கேள்விகள் அல்லது பதங்களுக்கு தேடல் வார்த்தையை டைப் செய்ததுமே பொருத்தமான பதிலை காணலாம். கிளிக் செய்யாமலே தேடும் வசதி எனும் வர்ணனையோடு டக்டக்கோ இதை அறிமுகம் செய்தது. ‘கூகுள் நாலெட்ச் கிராஃப்’ எனும் பெயரில் இதுபோன்ற வசதியை வழங்கினாலும், முதலில் டக்டக்கோதான் இதை அறிமுகம் செய்தது.

வீடியோ தேடல்

வீடியோ கோப்புகள் மட்டும்தான் தேவை என்றால், தேடல் பதத்துக்கு முன் வீடியோ என சேர்த்துக்கொண்டால் 28 வீடியோக்கள் வந்து நிற்கின்றன. மேலும் வீடியோக்கள் தேவையெனில் அதற்கான வசதியை கிளிக் செய்யலாம். சமையல் குறிப்பு வீடியோக்கள் என்று குறிப்பிட்டும் தேடலாம். இந்த முடிவுகள் யூடியூப்பை மட்டுமே சார்ந்திருப்பதுதான் ஒரே குறை.

இணையசேவைகளுக்கான கீபோர்டு சார்ந்த குறுக்கு வழிகள் தேவை எனில், சீட்ஷீட் வசதியைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு போட்டோஷாப் சீட்ஷீட் என தேடினால் போட்டோஷாப் தொடர்பான குறுக்கு வழிகளைப் பெறலாம். புரோகிராமிங் தொடர்பான தகவல்களையும் எளிதாக தேடலாம்.

டக்டக்கோவில் இன்னும்கூடப் பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லாம் சரி, கூகுள்போல வருமா எனக் கேட்பவர்களுக்காக கூகுள் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. கூகுளில் ஏதேனும் பிரச்சினையா எனும் பொருள்பட, ‘ஈஸ் கூகுள் டவுன்’ என கூகுளில் கேட்டால், இல்லை (நோ) என பதில் பளிச் எனத் தோன்றுகிறது.
கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி தமிழகத்தில் வளர்ந்து வருகிறது இந்தி

Published : 12 Sep 2017 08:12 IST


ஆர்.ஷபிமுன்னாபுதுடெல்லி




கோப்புப் படம்

தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பை மீறி அங்கு இந்தி மொழி வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

கடந்த 1949 செப்டம்பர் 14-ல் இந்தியை அரசு மொழியாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மக்களிடையே எழுந்த எதிர்ப்பை திராவிட கட்சிகள் கையில் எடுத்து கடும் போராட்டத்தில் குதித்தன. மத்திய அரசும் இந்தியை திணிக்கும் முயற்சியை கைவிடவில்லை என்று புகார் நிலவுகிறது. இந்நிலையில், தொலைதூரக் கல்வியில் இந்தி பயில சேர்ந்த மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்தி இயக்குநரகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மையம் செயல்படுகிறது.

இந்தி மொழி கற்க 2012-ல் சான்றிதழ் பிரிவில் 1,886 பேர் சேர்ந்தனர். இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டில் அதிக அளவாக 7,447 ஆக உயர்ந்தது. பட்டயப் படிப்பில் 475 பேர் சேர்ந்தனர். அடுத்த ஆண்டு இது 1,572 ஆக உயர்ந்தது. பொறியியல் மாணவர்கள் இந்தி பயில அந்த ஆண்டில் அதிக விருப்பம் காட்டியதே இந்த உயர்வுக்கு காரணம் ஆகும்.

கொங்கனி, ஒரியா, பெங்காலி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, அசாமி ஆகிய மொழிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது. இதில் மற்ற அனைத்து மொழிகளையும் விட தமிழில் இந்தி கற்பவர்கள் படிப்படியாக உயர்ந்து தற்போது சுமார் 70 சதவீதமாக உள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் இந்தி இயக்குநரக அதிகாரிகள் கூறும்போது, “வழக்கமாக தொலைதூரக் கல்வியில் இந்தி கற்கச் சேரும் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதில்லை. அவர்கள் நோக்கம் இந்தி கற்றுக் கொள்வது மட்டுமே. பாடங்களை பெற்று கற்றுக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்பவர்களில் தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை தேர்வெழுத கட்டாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்தனர். இதற்கிடையே இந்தி பிரச்சாரத்திற்காக தென் மாநிலங்களை குறிவைத்து மத்திய இந்தி இயக்குநரகம் சார்பில் ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்கள் கொண்ட அந்தப் படத்திற்கு ‘தக் ஷின் பாரத் மே இந்தி (தென்னிந்தியாவில் இந்தி)’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியால் மக்களிடையே ஒற்றுமை வளர்ந்து அது சுதந்திரப் போராட்டங்களில் அதிக பங்களித்ததாகவும், அதனால் மக்கள் இந்தி கற்பதை ஆங்கிலேயர்கள் தடுக்க முயன்றதாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளன. வயல்வெளி உட்பட பல இடங்களில் மக்கள் ரகசியமாக இந்தி கற்றதாகவும் காட்டப் படுகிறது.
வெளிநாட்டு உயர்கல்வி: கனவு தேசத்தில் படிக்கப் புறப்படுங்கள்!

Published : 12 Sep 2017 10:30 IST


எஸ். ஆர். இராஜகோபாலன்




அயல்நாடுகளில் உயர்கல்வி படிக்கும் கனவு பலருக்கு இருக்கும். தரமான கல்வி, படித்து முடித்தபின் நல்ல வேலைவாய்ப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், மேலை நாடுகளுக்குச் செல்லும் அனுபவம், அதனால் கிடைக்கும் அங்கீகாரம் இப்படி அதற்குப் பின்னால் பல காரணங்கள் பின்னப்பட்டுள்ளன. ஆனால், நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இது நிறைவேறாத கனவாகவே கலைந்துபோகிறது. காரணம், சரியான வழிகாட்டுதல் இன்மையே.

வாய்ப்பளிக்கும் டாலர் தேசம்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கிழக்காசிய நாடுகள் உட்படப் பல்வேறு உலக நாடுகளில் உங்களுக்கு விருப்பமான படிப்பைப் படித்துப் பிரகாசிக்கலாம்.

கல்வி, மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி, பொருளாதார பலம், தொழில் வளம், விவசாய மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி போன்ற பல துறைகளிலும் முன்னணி வகிக்கிறது அமெரிக்கா. நோபல் பரிசுகளையும் வட அமெரிக்க விஞ்ஞானிகள்தான் அதிக அளவில் பெற்றிருக்கிறார்கள்.

ஏனென்றால், வட அமெரிக்காவில் மட்டும் தரமான கல்வி அளிக்கும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவை தவிர ஆயிரக்கணக்கில் தரச்சான்றிதழ்கள் பெற்ற சமுதாயக் கல்லூரிகளும் (Community Colleges) இருக்கின்றன. வட அமெரிக்கா முழுவதும் ஆங்கில வழிக் கல்விதான். மக்கள் பேசும் மொழியும் ஆங்கிலம்தான். இங்கு தொழில்நுட்பம், பொறியியல், அறிவியல், நிர்வாகவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், மனோதத்துவம், மருத்துவம், சட்டம் போன்ற எல்லாப் படிப்புகளுக்கும் மதிப்பும் அதற்குரிய வேலைவாய்ப்பும் உள்ளன.

இங்குக் கல்விக்கான செலவு ஆண்டுக்கு 35 ஆயிரம் டாலர் முதல் 75 ஆயிரம் டாலர்வரை. இந்தத் தொகை கல்விக் கட்டணம், தங்கும் வசதி, சாப்பாடு, காப்பீட்டுத்தொகை, புத்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

சம்பாதித்துப் படிக்கலாம்!

இங்கு படிக்கும்போதே பல்கலைக்கழக வளாகத்தில் பலவிதப் பகுதிநேர வேலைகளைச் செய்து பணம் ஈட்ட வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக நான்கு மணி நேரம் வேலை செய்யலாம். வேலைக்கேற்ப ஒரு மணி நேரத்துக்கு ஆறு டாலர் முதல் பதினைந்து அல்லது இருபது டாலர்வரை சம்பாதிக்கலாம். இதைத்தவிர முதல் செமஸ்டர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால், உதவித்தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில், இளநிலை மாணவர்களுக்குக் கற்பித்தல், ஆராய்ச்சி சம்பந்தமான வேலை, அலுவலக வேலை, கணினி வேலை, உணவு விடுதியில் வேலை போன்ற 15 வகையான வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவை தவிர ஒரு வருடம் முதுநிலைப் படிப்பு (MS) முடிந்தவுடன் பயிற்சி வேலையும் கிடைக்கும். இந்தப் பயிற்சியைப் பல்கலைக்கழகமே ஏற்பாடு செய்துதரும். இதன்படி 36 மாதங்கள்வரை ஒரு மாணவர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து சம்பாதிக்கலாம். இது சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. அதன்பிறகோ முன்போ அந்த மாணவர் அதே பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி வந்து தன்னுடைய மேல்படிப்பைத் தொடரலாம். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மீதமுள்ள படிப்புக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிறப்பாகப் பயிற்றுவிக்கும் முறைகள் கையாளப்படுகின்றன. தாங்கள் கற்றவற்றைத் தாங்களாகவே நூலகத்திலும் சோதனைக் கூடத்திலும் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது. மாணவர்களே சிறப்பு வகுப்பு எடுக்கும் திட்டமும் கடைப்பிடிக்கப்படுவதால் மனப்பாடத்துக்கு இடமில்லை.

தேவையான தகுதி

வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி:

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் முதலில் ஆங்கில அறிவுக்கான சோதனைத் தேர்வுகளான TOEFL, SAT ஆகிய இரண்டு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.

கனடா, வட அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்பானது (BS) நான்கு வருடங்கள். இதன் பிறகு இரண்டாண்டு முதுநிலைப் படிப்பை (MS) மேற்கொள்ளலாம். நேரடியாக முதுநிலைப் பட்டப் படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் இந்தியாவில் 16 வருடங்கள் கால அவகாசம் கொண்ட பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை பெற்றிருக்க வேண்டும்.

வேலை அனுபவம் கட்டாயம்

இந்தியாவில் MA., M.Sc., B.E., B.Tech., போன்ற பட்டங்கள் பெறுபவர் நேரடியாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கும் கட்டாயமாக TOEFL, GRE போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். உங்களுடைய ஆங்கிலம், கணித அறிவு இந்தத் தேர்வுகளில் சோதிக்கப்படும்.

நிர்வாகவியல் (MBA) படிக்க விரும்பினால் TOEFL, GMAT போன்ற தேர்வுகளை எழுத வேண்டும். MBA படிக்கக் குறைந்தது இரண்டு வருட வேலை அனுபவம் கட்டாயம்.

வசந்த காலம், இலையுதிர்காலத்தில்தான் பொதுவாக வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. வெளிநாட்டு மாணவர்களை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அனுமதிப்பதில்லை. குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களுக்கு 40 அமெரிக்க டாலர் முதல் 150 டாலர்வரை வசூலிக்கப்படும்.

இரட்டை ஏற்பாடு உள்ளது!

குட்டி நாடான சிங்கப்பூரில் உலகத் தரம் வாய்ந்த நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர், சிங்கப்பூர் நிர்வாகக் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. இங்கு இளநிலைப் படிப்புகளில் சேர ஆங்கிலத் திறனைச் சோதிக்கும் IELTS கட்டாயம் எழுத வேண்டும். நிர்வாகவியல் படிக்க விரும்புபவர்கள் GRE, GMAT தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவற்றைத் தவிர சிங்கப்பூரில் உரிய அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களும் உள்ளன. இவை ஆஸ்திரேலியா, கனடா, வட அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ள சில சிறந்த பல்கலைக்கழகங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்கிவருகின்றன. சிங்கப்பூரில் ஒரு வருடமும் அவை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு வருடமும் என்கிற அடிப்படையில் அளிக்கப்படும் ‘இரட்டை ஏற்பாடு’ (Twinning Program) என்கிற சான்றிதழ் படிப்பைப் படிக்கலாம்.

கட்டணம் குறைவு

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் தரமான உயர் கல்வி அளிக்கும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் இப்பல்கலைக்கழகங்களில் இணைய IELTS எழுத வேண்டும். அதில் 9 மதிப்பெண்ணுக்கு 6.5 மதிப்பெண் பெறுவது நல்லது. இந்த நாடுகளில் இளநிலை மூன்று ஆண்டுகள் படிப்பாகவும், முதுநிலை ஒரு வருடப் படிப்பாகவும் வழங்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் படிக்க அவர்களுடைய பிராந்திய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம். அங்கும் சமீப காலமாக ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது. ஆனாலும் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட அந்தந்த நாட்டு மொழிகளில் பேசும் திறமையையும் புரிந்துகொள்ளும் ஆற்றலும் அவசியம்.

ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படிக்க ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் செல்கின்றனர். சில பல்கலைக்கழகங்களில் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது. ஆனால், முதலாமாண்டு முடிவுக்குள் அவர்களுடைய பிராந்திய மொழித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே படிப்பைத் தொடர முடியும். இந்தியாவின் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கல்விக் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ரஷ்யா, சீனாவில் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணம் மிகவும் குறைவு.

கடன் உதவி

அயல்நாடுகளில் உயர்கல்வி பெற அதிகம் செலவாகும் என்கிற கவலை பெற்றோர்களுக்கு வேண்டாம். வங்கிகள் கல்விக் கடன் வழங்குகின்றன. அசையாத சொத்து இருந்தால், மாணவரின் பெற்றோர் கணிசமான மாதச் சம்பளம் பெறுபவராக இருந்தால் ரூ.30-35 லட்சம்வரை கல்விக் கடன் பெறலாம். இந்தக் கல்விக்கடனை 84 மாதங்களில் மாணவர் மேற்படிப்பு முடித்து வேலை கிடைத்த பிறகு கடனை அடைக்கலாம். அதுவரை ஆண்டுக்கு 14% வட்டி.

மேல்நாடுகளில் உயர் கல்விக்காக விண்ணப்பிக்கும் முன்னர் அயல் நாட்டு பல்கலைக்கழகங்களின் தரம், அங்கு அளிக்கப்படும் பாடப் பிரிவுகள், உதவித்தொகை பெறக்கூடிய வாய்ப்பு, படித்து முடித்தபின் வேலைவாய்ப்பு, விசா சம்பந்தமான விவரங்கள் உள்ளிட்ட எல்லாச் சந்தேகங்களுக்கும் தேர்ந்த கல்வி ஆலோசகரை அணுகுவது நல்லது.

கட்டுரையாளர் அயல்நாட்டு கல்வி குறித்த ஆலோசகர்,
சென்னை
ஆங்கில​ம் அறிவோமே 176: எதற்கெல்லாம் கண்ணடிப்பார்கள்?

Published : 05 Sep 2017 10:45 IST

ஜி.எஸ்.எஸ்.





கேட்டாரே ஒரு கேள்வி

# என்ற குறியீட்டை ஒருவர் ‘Hound sign’ என்று குறிப்பிட்டார். அகராதியைப் பார்க்கும்போது hound என்றால் நாய் என்று போட்டிருக்கிறது. மேற்படி குறியீட்டுக்கும், நாய்க்கும் என்ன தொடர்பு?

*******************

“Feelers என்கிறார்களே அவர்கள் யார்?”

To put out feelers என்றால் நீங்கள் செய்த அல்லது செய்யப்போகும் ஒரு செயலைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய நீங்கள் எடுக்கும் முயற்சி.

“I have been putting out a few feelers and it seems that most people are against the committee we have formed” என்றால் நீங்கள் ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறீர்கள். அது குறித்த மக்கள் கருத்து என்ன என்பதை அறியச் சில முயற்சிகளை எடுக்கிறீர்கள் (இதற்காகச் சில பேரை நீங்கள் நியமிக்கக் கூடும்). இதன் மூலம் மக்கள் அந்தக் குழுவை ஏற்கவில்லை என்பதை அறிந்துகொள்கிறீர்கள்.

கரப்பான்பூச்சி, பட்டாம்பூச்சி போன்றவற்றின் தலைப் பகுதிக்கு அருகே இரண்டு நீளமான கறுப்புக் குழாய்கள் இருக்கும். இவற்றை feelers என்பார்கள் (சில சமயம் antenna என்றும் கூறுவதுண்டு). இவற்றைக் கொண்டு எதிர்ப்படும் பொருள்களைத் தொட்டுப் பார்த்து அவற்றின் தன்மை குறித்து இந்தப் பூச்சிகள் அறிந்துகொள்ளும்).*******************

கேட்டாரே ஒரு கேள்விக்கான பதில் இது. hound sign அல்ல. Pound sign. அதாவது எடையின் அளவீடான பவுண்ட் என்பதற்கான குறியீடுபோலவே இது அமைந்திருப்பதால் அப்படிக் கூறுகிறார்கள்.

இதை octothorpe என்றும் குறிப்பிடுகிறார்கள். Octo என்றால் 8 என்று பொருள். எண்ணிப் பார்த்தால் இந்தக் குறியீட்டில் எட்டு முனைகள் இருக்கும்.

என்றாலும் தற்காலத்தில் இந்தக் குறியீட்டை Hashtag என்றுதான் பலரும் குறிக்கின்றனர். இசைக் கலைஞர்கள் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தும்போது அதை sharp என்பதற்கான குறியீடாகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது அரை ​step அதிகமாக இசைக்க வேண்டும்.

புரூஃப் திருத்தும்போது இரண்டு வாக்கியங்களுக்கு நடுவே இடைவெளி வேண்டும் என எண்ணினால் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.

கணினி சங்கேதக் குறியில் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தினால் ‘தொடர்வதெல்லாம் கருத்துகள்தானே தவிர ஆணைகள் இல்லை’ என்று பொருள்.

*******************

Invariably என்றால் என்ன பொருள்?

Variation என்றால் மாறுபடுவது. மாறுபடாத தன்மை கொண்டிருந்தால் invariably என்று குறிக்கப்படுகிறது. அதாவது invariably என்பதன் சம வார்த்தை always.

The train is invariably late என்றால் (கிட்டத்தட்ட) எல்லா நாட்களு​மே அது தாமதமாகத்தான் வருகிறது என்று பொருள்.

For a lot of companies the biggest costs are invariably employment costs.

‘Forty winks’ என்று எதைக் குறிப்பிடுவார்கள் என்ற கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

முதலில் wink என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். வேகமாகக் கண்ணை ​மூடித் திறப்பதை wink என்பதுண்டு. ஒரு நகைச்சுவையைக் கூறிவிட்டு நாம் கண்ணடிப்பதுண்டு. அன்பு காரணமாகவோ அடையாளம் தெரிந்து கொண்டதற்கு அறிகுறியாகவோ கண்ணடிப்பதுண்டு (வேறு எதற்காவது கண்ணடிப்பார்களா என்ன?) இப்படிக் கண்ணடிப்பது என்பதும் winkதான். He winked at them as they passed.

பளபளப்பதையும் சில சமயம் winked என்ற வார்த்தையால் குறிப்பிடுவதுண்டு. The diamond in the necklace winked in the moonlight.

Forty winks என்றால் குட்டி ​தூக்கம் என்று அர்த்தம். இதற்கு forty என்ற எண்ணை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்குத் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

போட்டியில் கேட்டுவிட்டால்?

இந்த நான்கில் இலக்கணப்படியும், அர்த்தத்​ தின்படியும் சரியான வாக்கியம் எது?

(1) He worked hard yet he failed.

(2) Though he worked hard yet he failed.

(3) Though he worked hard he failed.

(4) He worked hard and failed.

(5) He hardly worked but failed.

இலக்கணப்படி நான்காவது வாக்கியம் சரியானதுதான். ஆனால், கடுமையாக வேலை செய்தும் அவன் தோற்றுப் போனான் என்பது பொருத்தமாக இருக்குமளவுக்குக் கடுமையான வேலை செய்தான், தோற்றுப் போனான் என்பது பொருத்தமாக இல்லை.

Working hard என்றால் கடுமையாக வேலை செய்வது. Hardly worked என்றால் (கிட்டத்தட்ட) வேலையே செய்யவில்லை என்று அர்த்தமாகிறது. எனவே, ஐந்தாவது வாக்கியம் சரியானதல்ல.

இப்போது முதல் மூன்று வாக்கியங்களைப் பார்க்கலாம். Though என்று ஒரு வாக்கியம் தொடங்கினால் yet என்பது அந்த வாக்கியத்தின் பின்பகு​தியில் வர வேண்டும். எடுத்துக்காட்டு - Even though she spoke to me rudely, yet I will be polite to her. இப்படிப் பார்க்கும்போது முதல் இரு வாக்கியங்களுமே சரியானவையாக உள்ளன.

(1) He worked hard yet he failed.

(2) Though he worked hard yet he failed.

சிப்ஸ்

Dumbfound என்பதற்குப் பொருள் என்ன?

வியப்பின் எல்லைக்கே செல்வதை இப்படிக் குறிப்பிடுவார்கள்.

Mac என்றால் என்ன?

பேச்சு வழக்கில் mackintosh என்பதை mac என்று சுருக்கி அழைக்கிறார்கள். தண்ணீர் புகாத ரப்பரால் ஆன உடையை (Rain Coat) mackintosh என்பார்கள்.

தவறுவது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம். இதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்?

To err is human. To forgive is divine.


தொடர்புக்கு - aruncharanya@gmail.com
ஆங்கிலம் அறிவோமே 177: தப்பிக்க விடாத பொத்தான் துளை!

Published : 12 Sep 2017 10:30 IST


ஜி.எஸ்.எஸ்.






கேட்டாரே ஒரு கேள்வி

Loo என்றால் கழிப்பறையைக் குறிக்கிறது. Waterloo என்பதற்கும், இதற்கும் தொடர்பு உண்டா?

Waterloo என்பது நெப்போலியனுக்குத் தோல்வியை அளித்த இடம். அது பெல்ஜியத்தில் உள்ளது.

பிரெஞ்சு மொழியில் ‘லூ’ (L’eau) என்பது நீரைக் குறிக்கும். (சிறுநீர், பிற நீர் இரண்டையும்தான்!).

I will just go to the loo என்றால் டாய்லெட்டுக்குச் சென்று வரவிருக்கிறார் என்று அர்த்தம். Loo roll என்றால் toilet paper.

பிரிட்டனில் கழிப்பறையை latrine என்பார்கள். அமெரிக்காவில் அதை wash room என்பார்கள்.

Toilet என்பது கழிவறையைக் குறிக்கும். அதே நேரத்தில் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு தன் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ளும் அறையையும் குறிக்கும். அதனால்தான் சில பேர் toilet என்பதை ஒப்பனை என்று மொழிபெயர்கிறார்கள். பிரெஞ்சு மொழியில் ‘toilette’ என்றால் ‘துணி அல்லது உறை’ என்று பொருள்.

************

He was high என்றால் என்ன பொருள் என்று கேட்கிறார் ஒரு <DP>வாசகர்.

இங்கே high என்பது மனநிலையைக் குறிக்கிறது. அவர் எக்கச்சக்கமான சந்தோஷத்தில் இருக்கிறார் என்பதுடன் மிக மிக உற்சாகப் பெருக்கிலும் இருக்கிறார். இதன் காரணம் அவருக்குக் கிடைத்த ஏதோ மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம் அல்லது மதுவை அருந்தியதாலும் இருக்கலாம்.

He has been on a high ever since his article was published in the magazine.

************

Face value என்றால் என்ன?

ஒரு நாணயத்திலோ அஞ்சல் தலையிலோ அச்சிடப்பட்டிருக்கும் அதன் மதிப்பு. பொதுவாக அச்சிடப்பட்டிருக்கும் மதிப்பைவிட அதன் நிஜ மதிப்பு குறைவாக இருக்கும்.

அதாவது ஒரு நாணயத்திலுள்ள உலோகத்தின் மதிப்பு குறைவாகவே இருக்கலாம். ஆனால் 10 ரூபாய் என்று அச்சிடப்பட்ட நாணயம் என்றால் அதன் face value 10 ரூபாய்.

The coins are sold for the metal they contain rather than their face values.

To accept something at face value என்றால் ஒன்றை அப்படியே ஏற்றுக்கொள்வது. அதாவது அது நிஜம்தானா, எந்த அளவுக்கு நிஜம் என்பதையெல்லாம் யோசிக்காமல் ஏற்றுக்கொள்வது. These threats should not be taken at face value என்பதன் பொருள் “இந்த எச்சரிக்கையை அப்படியே நம்பிவிடத் தேவையில்லை” என்பதாகும். I take her story at face value because I assume that she is not lying.




“Normalcy என்பதற்கும் normality என்பதற்கும் என்ன வேறுபாடு” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

normality என்றாலும், normalcy என்றாலும் ஒன்றுதான்.

Normality என்றாலும் normalcy என்றாலும் normal ஆக இருக்கும் ஒரு நிலை. அதாவது வழக்கமாக இருப்பது. எதிர்பார்க்கக்கூடியது. “The place gradually returned to normality” என்றால் (இடையில் ஏதோ காரணத்தால் எதிர்பாராத சூழல் உண்டான) அந்த இடம் மெள்ள மெள்ள தன் இயல்பு நிலைக்குத் திரும்பியது” என்று பொருள்.

************

வங்கியில் காசோலைகளை நிரப்பும்போது சிலர் செய்யக்கூடிய தவறுகளைக் கண்டிருக்கிறேன்.

40 என்பதை fourty என்று சிலர் குறிப்பிடுவார்கள். Forty என்பதே சரி.

3005 என்ற தொகையை சொற்களில் எழுதும்போது Three thousand five என்று எழுதுவார்கள். Three thousand and five என்றுதான் எழுத வேண்டும்.

வேறு சிலர் three thousands and five என்று எழுதுவார்கள். இங்கே thousands தவறு - thousandதான்.

************

தொடக்கம் இதுதான்

Buttonhole என்ற வார்த்தையைப் படித்தவுடனேயே அதன் பொருள் உங்களுக்கு விளங்கி இருக்கும், சட்டைகளில் பொத்தான் நுழைப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் துளைதான். ஆனால் Buttonhole என்ற வார்த்தையை verbஆகவும் பயன்படுத்துவதுண்டு.

ஒருவரிடம் பேசுவதற்காக அவரைப் பிடித்து வைப்பதைத்தான் இப்படிக் கூறுவார்கள். தான் சொல்வதை முழுவதுமாக எதிராளி கேட்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் அவரது சட்டை பொத்தானுக்கான துளையை விரல்விட்டுத் தன்னருகே இழுத்தபடி அதைக் கூறும் வழக்கம் 18-ம் நூற்றாண்டில் இருந்ததாம். எதிராளி அவருடைய விருப்பத்துக்கு மாறாக இந்தப் பேச்சைக் கேட்கும்படியாகிறது என்பது வெளிப்படை.

1860-களில் தையல் கலைஞர்கள் கழுத்துப் பகுதியில் பொத்தான் இல்லாமலேயே அதற்கான ஒரு துளையையும் வைத்துத் தைப்பது வழக்கமாம். காரணம் மேலே குறிப்பிட்டதுதான்.

Buttonhold என்ற வார்த்தை நாளடைவில் Buttonhole என்ற verb ஆக மாறியது என்பதுண்டு.

சிப்ஸ்

# In due course என்றால்?

வருங்காலத்தில், சரியான சமயத்தில். பெரும்பாலும் அலுவலகக் கடிதப் போக்குவரத்தில் இதைப் பயன்படுத்துகிறோம். I will let you know my decision in due course.

# Lessen, lesson என்ன வேறுபாடு?

முறையே குறைத்தல், பாடம்.

# Pitiable, Pitiful ஆகிய இரு வார்த்தைகள் ஒரே அர்த்தம் கொண்டவையா?

ஆமாம். பரிதாபப்படத்தக்க.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

இணைய உலா: துரத்தும் ஆன்லைன் விளையாட்டு பூதங்கள்!

Published : 08 Sep 2017 09:35 IST

க. ஸ்வேதா





புளு வேல் என்ற விளையாட்டு தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுவதால், அதைப் பற்றியே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், புளு வேலைப் போல இன்னும் பல விளையாட்டுகளை இளைஞர்கள் தினமும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவை ஒரே அடியாக மரணத்தைத் தூண்டாவிட்டாலும், ‘ஸ்லோ பாய்சன்’ போல மெதுவாக தீங்கு விளைவித்துக்கொண்டிருக்கின்றன.

‘போக்கிமான் கோ’ என்ற மொபைல் விளையாட்டும் புளு வேல்போல விபரீதமான விளையாட்டுதான். இது ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் அறிமுகமாகி, பின் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இது 2016-ல் கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற சாதனையையும் படைத்தது. போக்கிமான் என்னும் கார்ட்டூன் கதாபாத்திரத்தைக் கொண்டு, இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த விளையாட்டு வரவேற்பை பெற்றது. ஆனால், பிறகுதான் இதன் விபரீதங்கள் தெரிய ஆரம்பித்தன. அமெரிக்காவில் 17 வயது பெண் விடியற்காலையில், வெகு தூரம் சென்று, யாரும் இல்லாத இடத்தில் போக்கிமானை பிடிப்பதற்கு பதில் சவத்தை கண்டுபிடித்தார். அப்போதுதான் இந்த விளையாட்டின் விபரீதங்களைப் பலரும் உணர ஆரம்பித்தார்கள்.

இந்த விளையாட்டை பயன்படுத்தி பல திருட்டு சம்பவங்களும் கொலைகளும்கூட நடந்துள்ளன. வாகனம் ஓட்டிச் செல்லும்போது இதை விளையாடியதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விளையாட்டுக்கு அடிமையாகி, மக்கள் சுடுகாடுகள், அனுமதி மறுக்கப்பட்ட பல இடங்களுக்கு அத்துமீறி நுழைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இதுவரை எந்த விபரீதமும் இந்த விளையாட்டால் நடக்கவில்லை.

இதேபோல் பல ஸ்மார்ட்போன் கேம்களும் வீடியோ கேம்களும் நமக்கே தெரியாமல் தீங்கு விளைவிக்கின்றன. ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ’ போன்ற வீடியோ கேம்ஸ் மக்களிடம் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் ஒரு கட்டத்தில், விளையாடுபவர் ஒருவரை துன்புறுத்தி கேள்விகள் கேட்பதுபோல் விளையாட வேண்டும். அதில் சரியான விதிமுறைகள் எதுவும் இல்லாததால், ஆடுபவர் தன் விருப்பத்துக்கு அந்த நபரை துன்புறுத்த ஆரம்பித்தார். இந்த விளையாட்டும் மிகுந்த விமர்சனத்துக்குள்ளான விளையாட்டுதான்.

பல ஆண்டுகளாக ஏதோ ஒரு ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் அடிமைப்பட்டுகொண்டுதான் இருக்கிறார்கள். கேண்டி க்ரஷ், மினி மிலிடியா போன்ற விளையாட்டுகளை விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு நாளைக்கு 5 மணி நேரம் விளையாடுவது, நம்மை அதற்கு அடிமையாக்கி விடுகிறது.
கண்களால் ‘ஒளி’ செய்!

Published : 09 Sep 2017 09:57 IST

பெ. ரங்கநாதன்





தேசிய கண் தான இரு வாரம்: ஆகஸ்ட் 25 - செப்டம்பர் 8

‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, சிம்ரனின் கண்களில் அமிலம் பட்டுத் தன் இரண்டு கண் பார்வையையும் இழந்து விடுவார். அவருக்குக் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுப் பார்வை கிடைப்பதாகக் கதை.


இந்த சினிமா பார்த்தவர்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் சந்தேகம், கண்ணை தோண்டி எடுத்துவிட்டு இறந்தவர்களின் முழு கண்களையும் வைத்து விடுவார்களா என்பதுதான்.

அப்படியல்ல. கருவிழி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கருவிழியை அகற்றிவிட்டு, இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட கண்ணின் கருவிழியை எடுத்துப் பொருத்தும் அறுவை சிகிச்சைதான் ‘கருவிழி மாற்று அறுவை சிகிச்சை’ (கார்னியல் டிரான்ஸ்பிளான்டேஷன்).

அவசர சிகிச்சை

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 30 வயது இளைஞர் ஒருவர், தன் கண் சிவப்பாக இருக்கிறது என்றும், வலி இருக்கிறது என்றும் சொல்லி, மருந்துக் கடையில் தானாகச் சென்று மருந்து வாங்கி ஊற்றியுள்ளார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு வலி தாங்க முடியாமல் கண் மருத்துவரை அணுகியபோது, அவருடைய கண் கருவிழி முழுவதும் பூஞ்சைக் கிருமியால் பாதிக்கப்பட்டு, கண்ணுக்குள் கிருமி பரவத் தொடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அவர் பயன்படுத்திய ஸ்டீராய்டு கலந்த மருந்துதான் என்று மருத்துவர் கூறினார்.

தற்போது கிருமி பாதிப்பைக் கட்டுப்படுத்த அவருடைய பாதிக்கப்பட்ட கருவிழியை எடுத்துவிட்டு கண்தானமாகப் பெற்ற கருவிழியைப் பொருத்தியதால் அவருக்குப் பார்வை கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் அவசரமாகக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு மண்ணில் மறையும், தீயில் கருகும் கண்களைத் தானமாகக் கொடுத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையைக் காப்பற்றலாம்.



கண்தானம்: தெரிந்ததும் தெரியாததும்

ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை உடனடியாக அணுக வேண்டும்.

உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

கண்தான வங்கியிலிருந்து மருத்துவர்கள் வரும்வரை இறந்தவர்களின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப் பஞ்சை வைத்திருக்க வேண்டும். இறந்தவர் உடல் உள்ள அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும்.

கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூட கண்தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண்தானம் செய்யலாம்.

புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சுக் கிருமித் தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற முடியாது.

இறந்த ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் ஒரு ஜோடி கண்களைக்கொண்டு இரண்டு பார்வையிழந்தவர்களுக்குப் பார்வை கொடுக்க முடியும்.

பார்வையின்றித் தவிக்கும் 50 சதவீதம் பேர்

இந்தியாவில் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருபவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினரே. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவர்களாக வாழ்வது வேதனையானது.

நாட்டில் விபத்து, கிருமி பாதிப்பு, பிறவிக் குறைபாடு போன்ற காரணங்களால் பார்வையிழந்த சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள்.

கருவிழி பாதிப்பால் ஒரு கண்ணில் பார்வையிழப்பவர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 10 லட்சமாக இருக்கும் என ஓர் ஆய்வு கூறுகிறது.

தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான கண்களில் சுமார் 50 சதவீதக் கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. மீதமுள்ள 50 சதவீத மக்கள், பார்வையிழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பார்வை கொடுக்க நம்மால் நிச்சயம் முடியும். எப்படி?

உங்கள் ஊரிலோ, உங்கள் உறவினர் வீட்டிலோ, உங்கள் குடும்பத்திலோ யாராவது இறக்க நேரிட்டால், கண்தானம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி கண்களைத் தானமாகக் கொடுத்து உதவ வேண்டும்.

மண்ணில் புதைந்தவரை மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்க வைக்க, கண் தானத்தைத் தவிர வேறு மிகச் சிறந்த வழி ஏது?

கட்டுரையாளர், கண் மருத்துவர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com
தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: மருத்துவருக்கு நூதன நிபந்தனையுடன் முன் ஜாமீன்

Published : 12 Sep 2017 17:16 IST

சென்னை





தேசியக்கொடியை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம்பூர் மருத்துவர் கென்னடிக்கு ஒருவாரம் தினமும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கென்னடி சுதந்திர தினத்தன்று தொலைபேசியில் பேசியப்படி தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேசியக்கொடியை அவர் அவமதிப்பு செய்துவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நிதிபதி பி.என் பிராகாஷ் முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவர் கென்னடி ஒரு வாரத்துக்கு தினமும் காலை பணிக்கு வரும்போது தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
போலிநகை அடமானம் : ரூ.20 கோடி மோசடி

பதிவு செய்த நாள்12செப்
2017
23:49

சென்னை: சென்னை அண்ணாநகரில் வங்கி ஒன்றில் போலி நகைகளை அடமானம் வைத்து, ரூ.20 கோடி கடன் வழங்கி மோசடி செய்யப்பட்டது தற்போதைய ஆய்வில் தெரியவந்தது. இதில் வங்கியின் முன்னாள் மேலாளர் ஒருவர் ஈடுபட்டுள்ளதும் அவருடன் நகைக்கடை அதிபர்
ஒருவரும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எத்தனை நாட்களில் இந்த மோசடி நடந்தது என்றும் ஆய்வு நடந்து வருகிறது.
தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு
பதிவு செய்த நாள்12செப்
2017
23:12

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், 22ம் தேதி வரை விடுப்பு இன்றி, தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தற்காலிக ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் பி.எட்., மாணவர்களை பயன்
படுத்தி, பள்ளிகளில் பாடம் நடத்தப்படுகிறது. எனவே, தற்காலிக பணியில் உள்ள, 15 ஆயிரத்து, 500பகுதி நேர ஆசிரியர்கள், செப்., 22 வரை, தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.வேலை நிறுத்தம் முடியும் வரை, விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள், வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுவர். 

இப்போது, தினமும் பணிக்கு வர உத்தரவிட்டு உள்ளதால், அவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

- நமது நிருபர் -


அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு சம்மன் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


பதிவு செய்த நாள்12செப்
2017
23:32

மதுரை: தமிழகத்தில் தடையை மீறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தாக்கலான அவமதிப்பு வழக்கில், சங்க நிர்வாகிகள் 4 பேர் ஆஜராக, சம்மன் அனுப்பி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ -ஜியோ' காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு, இடைக்காலத் தடை கோரி மனு செய்தேன்.செப்.,7ல் நீதிபதிகள், 'வேலைநிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மற்றும் தொடர்புடைய சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை செப்.,14 க்கு ஒத்திவைக்கப்படுகிறது,' என்றனர். அதை மீறி போராட்டம் தொடர்கிறது.போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு பற்றி தலைமைச் செயலாளர் அறிவிப்பு செய்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் தாஸ், துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் மோசஸ் மற்றும் அச்சங்கங்களின் உறுப்பினர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சேகரன் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு: வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள சங்க நிர்வாகிகள் 4 பேரும், செப்.,15 ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்படுகிறது.அவர்கள் சென்னை முகவரியில் உள்ளதால், சம்மனை சென்னை போலீஸ் கமிஷனர் மூலம் வழங்க வேண்டும். சம்மன் வழங்கியதை உறுதி செய்து, மதுரை போலீஸ் கமிஷனர் இன்று (செப்.,13) இந்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
'பரஸ்பர விவாகரத்து வழக்கில் 6 மாத காத்திருப்பை தளர்த்தலாம்'
பதிவு செய்த நாள்12செப்
2017
22:41

புதுடில்லி: இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து வழக்கில், ஆறு மாதங்கள் காத்திருப்பு காலத்தை, உச்ச நீதிமன்றம் தளர்த்தி உள்ளது. இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து பெற விரும்பும் தம்பதி, நீதிமன்ற உத்தரவுப்படி, ஓராண்டு பிரிவுக்கு பின், விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அதைத் தொடர்ந்து, ஆறு மாத காத்திருப்புக்கு பின், அவர்களுக்கு, நீதிமன்றம், விவாகரத்து அளிக்கும். விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆதர்ஷ் கே.கோயல், உதய் யு.லலித் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு: இந்து திருமண சட்டப்படி, பரஸ்பர விவாகரத்து கோரும் தம்பதி, ஓராண்டு பிரிவுக்கு பின், ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தலாம்.
திருமண உறவு எக்காரணத்தை முன்னிட்டும், சரி செய்ய முடியாமல், முறிந்து போகும் பட்சத்தில், கணவன், மனைவியை சேர்ந்திருக்க வேண்டும் என, நிர்ப்பந்திப்பது முறையற்றது.

அத்தகைய சூழ்நிலையில், விவாகரத்து வழங்குவதற்காக, இந்து திருமண சட்டம், பிரிவு - 13பி உருவாக்கப்பட்டது. திருமண பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அவசரமாக, அந்த திருமணத்தை ரத்து செய்யக்கூடாது என்ற நோக்கத்தில், ஆறு மாத காத்திருப்பு விதி அமல்படுத்தப்பட்டது.இந்த காத்திருப்பு காலம், கணவன், மனைவி ஆகியோரின் மனக்கஷ்டங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இருக்கக் கூடாது. திரும்ப சேரும் வாய்ப்பே இல்லை எனும்போது, காத்திருப்பு காலம் தளர்த்தப்படலாம்.

காத்திருப்பு காலம், சம்பந்தப்பட்ட கணவன், மனைவியை மனதளவில் மேலும் துன்புறுத்தக்கூடும் என, நீதிமன்றம் கருதினால், காத்திருப்பு காலத்தை தளர்த்தி, விவாகரத்து அளிக்கலாம். 

அவ்வாறு, விவாகரத்து அளிக்கும்போது, ஜீவனாம்சம், குழந்தை களின் எதிர்காலம் போன்ற வற்றை ஆய்வு செய்து, தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை தொடர தவிக்கும் மாணவி
பதிவு செய்த நாள்13செப்
2017
00:49




சேலம்:குடும்ப வறுமை காரணமாக, கல்லுாரி கட்டணம் கட்ட வழியின்றி, விவசாய படிப்பை தொடர முடியாமல், சேலம் மாவட்ட மாணவி தவித்து வருகிறார்.

சேலம் மாவட்டம், தலைவாசல், ஆறகளூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 49; சலுான் வைத்துள்ளார். இவருக்கு, தவப்பிரியா, 19, என்பவர் உட்பட, மூன்று மகள்கள். 2014ல், ஆறகளூரில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த தவப்பிரியா, 500க்கு, 480 மதிப்பெண் பெற்றார். இவரை, தலைவாசல், நத்தக்கரையில் உள்ள தனியார் பள்ளி, பிளஸ் 1 படிப்பில், கட்டணமின்றி சேர்த்து கொண்டது.

தவப்பிரியா, 2016 பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,131 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார். விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால், விவசாய படிப்பிற்கு விண்ணப்பித்தார். 200க்கு, 190.25, 'கட் - ஆப்' பெற்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், அக்ரி பட்ட படிப்பை தேர்வு செய்தார்.

கல்லுாரி விடுதியில் தங்கி படித்த நிலையில், இரண்டாம் பருவ தேர்வின் போது, தந்தை ஆறுமுகம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.இதனால், இரண்டாம் ஆண்டு, கல்லுாரி கட்டணம் கட்ட இயலவில்லை.
கல்லுாரி, விடுதி உள்ளிட்ட கட்டணங்கள் சேர்த்து, இரண்டாம் ஆண்டுக்கு, 68 ஆயிரத்து, 250 ரூபாய் கட்ட வேண்டும். தந்தையின் உடல்நிலை, குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களால், பணம் கட்ட முடியாததால், தவப்பிரியா படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தவப்பிரியாவின் தந்தை ஆறுமுகம் கூறியதாவது: நான்கு மாதங்களுக்கு முன், உயர் ரத்த அழுத்தத்தால், பக்கவாதம் ஏற்பட்டது. தற்போது, அதன் தாக்கத்தில் இருந்து, சிறிது சிறிதாக விடுபட்டு வருகிறேன். தவப்பிரியாவின் கல்லுாரி படிப்புக்கு கட்டணம் கட்ட முடியாத நிலையில் தவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

உதவ விரும்புவோர், 94425 - 25326 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு

பதிவு செய்த நாள்12செப்
2017
23:13

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, 1.1 கோடி மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கான அகவிலைப் படி, 1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.ஏழாவது சம்பள கமிஷன் அறிமுகத்துக்கு பின், அகவிலைப் படி நிர்ணயம் செய்வதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. 

இதை அடிப்படையாக வைத்து, இந்தாண்டு மார்ச்சில், 2 சதவீதத்தில் இருந்து,
4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கான அகவிலைப் படியை, 1 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தாண்டு, ஜூலை, 1 முதல் கணக்கிட்டு, இது வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள, 49.26 லட்சம் அரசு ஊழியர், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர் பயனடைவர்.
எம்.ஜி.ஆர்., நினைவாக 100, 5 ரூபாய் நாணயங்கள்
பதிவு செய்த நாள்12செப்
2017
23:08




முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக, அவரது உருவம் பொறித்த, 100 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு 

செய்துள்ளது. முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை, மாநிலம் முழுவதும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது; இதை மேலும் சிறப்பிக்கும் விதத்தில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிட வேண்டு மென்ற கோரிக்கை இருந்தது.

டில்லி வந்து பிரதமரை சந்தித்தபோது, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே, தனித்தனியே இந்த கோரிக்கையை வைத்தனர்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த வட்ட வடிவில் அமைந்த, 100 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான இந்திய நாணயச்சட்டம் பிரிவின் கீழ், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. நுாறு ரூபாய் நாணயத்தில், வெள்ளி, 50 சதவீதமும், தாமிரம், 40 சதவீதமும், நிக்கல், 5 சதவீதமும், துத்தநாகம், 5 சதவீதமும் கலந்திருக்கும். 44 மி.மீ., விட்டம் உடைய, இந்த நாணயத்தைச் சுற்றிலும், வரிவரியாக, 200 கோடுகளும் இருக்கும். இந்த நாணயம், 35 கிராம் எடை உடையதாக இருக்கும். ஐந்து ரூபாய் நாணயத்தில், 75 சதவீதம் தாமிரம், 20 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்து காணப்படும். 23 மி.மீ., விட்டம் உடைய இந்த நாணயத்தைச் சுற்றிலும், 100 கோடுகள் இருக்கும்.இந்த நாணயத்தின் எடை, 6 கிராமாக இருக்கும். இந்த உத்தரவு உடனடியாக, அமலுக்கு வருவதாகவும், மத்திய அரசின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

நாணயங்கள் தயாரிக்கும் பணி முடிந்ததும், தமிழக அரசுடன் ஆலோசித்து, ஒரு குறிப்பிட்ட தேதியில், எம்.ஜி.ஆர்., நினைவு நாணயங்கள் வெளியிடப்படுமென, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

-- நமது டில்லி நிருபர் -
ஆமதாபாத் - மும்பை, 'புல்லட்' ரயில்நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
ஆமதாபாத்:ஆமதாபாத் - மும்பை இடையே, அதிவேக, 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது.



குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணிஆட்சி அமைந்த பின், தாக்கல் செய்யப்பட்ட, முதல் ரயில்வே பட்ஜெட்டில், 'நாட்டில், அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.அதில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வரை, முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில், ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற, பியுஷ் கோயல், புல்லட் ரயில் பற்றி, நேற்று கூறியதாவது:நாட்டின், முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான பணிகள், நாளை துவங்குகின்றன. ஆமதாபாத்தில் நாளை நடக்கும் விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லைநாட்டுகின்றனர்.

இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

320 கி.மீ., வேகம்

* ஆமதாபாத் - மும்பை இடையே, 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும்; இது, 350 கி.மீ., வரை அதிகரிக்கப்படும்

* இந்த ரயில், சபர்மதி, வதோதரா உட்பட, 12 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்றுசெல்லும்

* மொத்த வழித் தடத்தில், 92 சதவீத துாரம், மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.6 சதவீதம் துாரம், சுரங்கப்பாதையாக இருக்கும். மீதமுள்ள, 2 சதவீத துாரம், தரையில் பயணிக்கும்

* 21 கி.மீ., துார சுரங்கப்பாதையில், 7 கி.மீ., துாரம், கடலுக்கு அடியில் அமைகிறது

• இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட வரவேற்பு

ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். குஜராத்தில், பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

அவரை வரவேற்க, ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, மஹாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமம் வரை, 7 கி.மீ., துாரத்துக்கு வரவேற்பு பேரணி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட, 28 இடங்களில், 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



COURTNEWS

போக்குவரத்து துறை உத்தரவுக்கு ஐகோர்ட் தடை : 'லைசென்ஸ்' இல்லாமலும் வாகனம் வாங்கலாம்

பதிவு செய்த நாள்13செப்
2017
03:17




சென்னை: 'ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை, பதிவு செய்யக் கூடாது' என, போக்குவரத்து துறை ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு, சென்னை உயர் நீதிமன்றம், தடை விதித்துள்ளது.

'ஆட்டோமொபைல் டீலர்' சங்கங்களின் சம்மேளனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:விற்பனையாளரிடம் இருந்து வாகனங்கள் வாங்கிய பின், அதை பதிவு செய்ய வேண்டும்; அவ்வாறு பதிவு செய்யும்போது, வாகனம் வாங்கியவருக்கு, அதை ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதனால், வாகனத்தை வாங்கியவர், ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற, அவசியம் இல்லை.

உடலில் குறைபாடு உடையவர்கள், ஓட்டுனர் உரிமம் பெற இயலாத நிலை ஏற்படும்; 18 வயதுக்கு குறைவானவர் பெயரில், வாகனங்களை, அவரது, 'கார்டியன்' வாங்க முடியும். இவர்கள், ஓட்டுனர்களை நியமித்து, வாகனங்களை இயக்கிக் கொள்ள முடியும். இந்நிலையில், போக்குவரத்து ஆணையர், ஆக., 21ல் பிறப்பித்த சுற்றறிக்கையில், 'ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றால், அந்த வாகனத்தை பதிவு செய்யக் கூடாது' என, கூறப்பட்டுள்ளது.

வாகனங்களை பதிவு செய்யும் அதிகாரிகளுக்கு, இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.வாகன உரிமையாளரிடம் உரிமம் இருந்தால், அவர் வாகனத்தை ஓட்டலாம்; இல்லையென்றால், உரிமம் வைத்திருப்பவரை வாகனம் ஓட்டுவதற்கு, உரிமையாளர் அனுமதிக்கலாம்.

ஓட்டுனர் உரிமம் இல்லாத யாரும், மோட்டார் வாகனங்களை வாங்க முடியும்; அதே போல், சொந்த வாகனம் இல்லாத ஒருவர், ஓட்டுனர் உரிமம் பெற முடியும். எனவே, ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்பதை வலியுறுத்தாமல், வாகனங்களை பதிவு செய்யும்படி, போக்குவரத்து துறைக்கு உத்தரவிட வேண்டும். போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி, எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கோவிந்தராமன் ஆஜரானார்.மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்டு, சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
ஆன்மிகம்

வாழ்வில் மகிழ்ச்சி தரும் மகாளயம்



புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்த முறை மகாளயம் ஆகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்று பொருள் கொள்ளலாம்.

செப்டம்பர் 12, 2017, 07:00 AM
19–9–2017

மகாளய அமாவாசை

புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்த முறை மகாளயம் ஆகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்று பொருள் கொள்ளலாம். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு கர்ம காரியங்களைச் செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் கிரியையானது, இருபத்தொரு யாகங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.

இது பிதுர் தேவதைகளுடையதிருப்தியின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம். மரணம் அடைந்தவர்கள்நரகம் எய்துவதைதவிர்த்து, அவர்கள் சுகமாய் இருப்பதைக் குறித்து செய்யப்படும் கிரியை, சிறப்பு வாய்ந்ததாகும்.

தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம், புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேராக நிற்கின்றது. அப்போது சந்திரனது (அபரபக்கம்) தென்பாகமும் நேர்க்கோட்டில் நிற்கும். இந்த தருணத்தில் பிதுர் கர்மங்களைச் செய்வது விச‌ஷமானதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வபக்கம் என்பது பகல், அபரபக்கம் என்பது இரவு. பூர்வபக்கப் பிரதமை உதயமாகும், இராக்கால முடிவு அமாவாசை, பகற்கால முடிவு பூரணையாகும். இந்த நேரத்தில் பிதுர் கடன் களைச் செய்வது சாலச் சிறந்தது.

சிரார்த்த கர்மங்களுக்குரிய சிறந்த தலங்கள் என சில உள்ளன. அதில் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புட்கலசே‌ஷத்திரம் முதலியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் இந்த சிறப்பை பெற்று விளங்குகிறது. மேற்கண்ட அனைத்துத் தலங்களிலும், கயை தலத்தில் சிரார்த்தம் செய்வது மிகவும் விசே‌ஷமானது.

தேவர்களின் வருடக் கணக்குப்படி, புரட்டாசி மாதம் நடு ராத்திரியாகும். இந்த நேரத்தில் நிசப்தம் நிலவும். எனவே தேவர்களின் ஆராதனைகளுக்கும், பிதுர்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படுகிறது. சாஸ்திரங்கள், நுண் முறைகள் மற்றும் ஆன்றோர்களின் கூற்றும் அதுவேயாகும். எனவே அந்த காலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்து கர்மங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

அன்றைய தினத்தில் மேலே கூறப்பட்ட புண்ணியத் தலங்களுக்குச் சென்று நம்முடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களின் முன்பாக இருக்கும் நீர் நிலைகளில் வைத்து தர்ப்பணத்தை செய்யலாம். பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் இதுபோன்ற தர்ப்பண நிகழ்வுகள் நடத்தப்படு கின்றன. தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு பிதுர் காரியங் களைச் செய்து கடமைகளை நிறைவேற்ற ஏராளமானவர்கள் குவிவார்கள். அன்றைய தினம் கடற்கரைப் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படும். நம் முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த பிதுர் காரியங்களின் காரணமாக, முன்னோர் களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மகாளய அமாவாசை அன்று, காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து, அருகில் உள்ள கோவில்களில் இருக் கும் நீர்நிலைகளிலோ, அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உபவாசம் இருந்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில், இறை அடியார்களுக்கு நம்மால் இயன்றவரை அன்னதானம் செய்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து அவர்கள் நற்கதி அடைவார்கள். அதன் வாயிலாக அவர்களின் தலைமுறையும் நல்ல நிலையை அடையும்.
மாவட்ட செய்திகள்

ராஜபாளையம் பகுதியில் மழை: வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் குடிநீர் தேக்கம் வறண்டது.

செப்டம்பர் 12, 2017, 03:45 AM

ராஜபாளையம்,

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் குடிநீர் தேக்கம் வறண்டது. நகர் பகுதியில் கடந்த 4 மாதங்களாக 30 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் வருகிறது. இதனை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு வரக்கூடிய தண்ணீர் முழுவதையும் குடிநீர் தேக்கத்தில் தேக்கிவைக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதேபோல், நகராட்சி ஆணையர் மற்றம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ஆற்றில் தண்ணீர் வருவதால் விரைவில் நகர் பகுதியில் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கி தண்ணீர் வினியோகத்தை மேம்படுத்த அறிவுறுத்தினார். அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து இனி நகர் பகுதியில் வாரம் ஒருமுறை குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தங்கப்பாண்டியன் கூறினார். அவருடன் தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்று இருந்தனர்.
மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டம் 965 பேர் கைது


சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 13, 2017, 04:30 AM

சிவகங்கை,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து புதிய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்தி காலமுறை ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3 கட்டமாக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக நேற்று முன்தினம் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று 2–வது கட்டமாக நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், இளங்கோ, தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 515 பெண்கள் உள்பட 965 பேரை சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தொடர் போராட்டத்தில் இன்று(புதன்கிழமை) 3–ம் கட்டமாக கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

செப்டம்பர் 12, 2017, 05:24 PM

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக ஒரு சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம், 50 லட்சம் அரசு ஊழியர்கள் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்

சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்



சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 13, 2017, 04:30 AM

சென்னை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கடந்த 7-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் சுமார் 300 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

300 பேர் கைது

அதன்பின்னர், கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அந்த வேளையில் 20-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேறு வழியில் வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்ப தொடங்கினார்கள். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தை தமிழகம் பெறவில்லை. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு இதுவரை கையெழுத் திடவில்லை. ஜெயலலிதா 110-விதியின் கீழ் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்தார். அதற்காக ஒரு குழுவும் அமைத்தார். ஆனால் அவருடைய அறிவிப்புக்கு மாறாக இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

காத்திருப்பு போராட்டம்

நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் 5-வது ஊதியக்குழுவில் ஊதியக்குழு வருவதற்கு முன்பாகவே குழு அமைத்து அது தரும் அறிக்கையை பெற்று, ஊதியக்குழு அமல்படுத்தும் தேதியில் சரியாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதை மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் பரிசீலனை செய்ய வேண்டும்.

எங்கள் கோரிக்கைகளுக்கு தெளிவான அறிவிப்பு வரும் வரை போராட்டத்தை தொடருவோம். முதல்-அமைச்சர் அழைத்து பேசி அரசாணை வெளியிடும் வரை நாளை முதல் (இன்று) அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காவிரி மகாபுஷ்கர விழா தொடங்கியது

t
மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் காவிரி மகாபுஷ்கர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செப்டம்பர் 13, 2017, 05:00 AM

மயிலாடுதுறை,

இந்தியாவில் உள்ள 12 புண்ணிய நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நதி என 12 ராசிகளுக்கும் 12 நதிகள் புஷ்கர நதிகளாக கூறப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார். அதைத் தொடர்ந்து துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

தற்போது இந்த புஷ்கர விழா காவிரியில் 144 ஆண்டுகளுக்கு பிறகு வருவதால் காவிரி மகாபுஷ்கர விழா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆறு துலா கட்டத்தில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காவிரி தாய் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. காலை 8.25 மணிக்கு காவிரி ஆற்றில் புஷ்கர பிரவேசம் நடைபெற்றது.

தீர்த்தவாரி

முன்னதாக மயூரநாதர், ஐயாறப்பர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலாகட்ட தெற்கு கரையை வந்தடைந்தனர். இதைப்போல வள்ளலார், படித்துறை காசிவிஸ்வநாதர் கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி துலா கட்டத்தை அடைந்தனர்.

மேலும், பரிமளரெங்கநாதர் கோவிலில் இருந்து சுகந்தவனநாதர், பூதேவி, ஸ்ரீதேவியுடன் புறப்பட்டு காவிரி யானைக்கால் படித்துறையை வந்தடைந்தார். பின்னர் துலாகட்டத்தில் 4 கோவில்களின் அஸ்திரதேவர்களுக்கும், யானைக்கால் படித்துறையில் தீர்த்தபேரருக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது.

புனித நீராடினர்

அப்போது துலாகட்டத்தின் வடக்கு கரையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஆதீனங்களும், கிரீஸ் நாட்டு இளவரசி ஐரீன் ஆகியோரும் புனித நீராடி சாமி வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணியளவில் ஆன்மிக ஊர்வலம் மயிலாடுதுறை கேதாரநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு காவிரி துலா கட்டத்தை அடைந்தது. இந்த விழா வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

இந்த விழாவுக்காக மயிலாடுதுறை துலாகட்ட காவிரியின் மையப்பகுதியில் 100 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலத்தில் புஷ்கரணி (தீர்த்தக்குளம்) அமைக்கப்பட்டு உள்ளது. துலாகட்டத்தின் நடுவில் உள்ள ரிஷப நந்திமண்டபம், துலாகட்ட தீர்த்தவாரி மண்டபம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது.
தேசிய செய்திகள்

கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்


கேரளாவில் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

செப்டம்பர் 13, 2017, 05:00 AM
திருவனந்தபுரம்

கேரளாவில் கண்ணபுரத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர், புதிதாக வீடு கட்டி பரியாரம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். பழைய வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச்சென்றபோது, ஒரு பழைய இரும்பு பெட்டியை பேரீச்சம்பழ வியாபாரியிடம் விற்று பேரீச்சம்பழம் வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.

பின்னர்தான் தாங்கள் வைத்திருந்த 75 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரத்துடன் இரும்பு பெட்டியை பேரீச்சம் பழத்துக்கு விற்றது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்தனர். பேரீச்சம்பழ வியாபாரியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர் இரும்புப்பெட்டியில் இருந்த நகை, பணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

ஆனால் போலீசார் விடவில்லை. அவரது வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில், பழைய இரும்பு பெட்டிக்குள் 75 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் இருக்க கண்டனர்.

அதைத் தொடர்ந்து நகைகளையும், பணத்தையும் போலீசார் மீட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த ருசிகர சம்பவம், அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட செய்திகள்

குடும்பத்தலைவி படத்திற்கு பதிலாக ‘ஸ்மார்ட்’ ரேஷன்கார்டில் நடிகை காஜல் அகர்வால் படம்


ஸ்மார்ட் ரேஷன்கார்டில் குடும்பத் தலைவி படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் அச்சிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செப்டம்பர் 13, 2017, 04:45 AM

ஓமலூர்,

இந்திய தேர்தல் ஆணையம் அச்சிட்டு வழங்கும் வாக்காளர் அடையாள அட்டையில் ஆண் வாக்காளருக்கு பதிலாக பெண் வாக்காளரின் பெயர் மற்றும் புகைப்படம் மாறி இடம் பெறுவது கடந்த காலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. இதுபோன்ற தவறுகளை களைந்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுஒருபுறம் இருக்க தற்போது தமிழக அரசு பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வரும் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்பத்தலைவி ஒருவரின் படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் மாறி இடம் பெற்றுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வடக்கு தாலுகா ஆர்.சி.செட்டிபட்டி காமலாபுரம் பகுதியை சேர்ந்த சரோஜா என்பவர் பெயரில் குடும்பத் தலைவர் என்று குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன்கார்டில் தான் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில் சரோஜா படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் மாறி இடம் பெற்றுள்ளது.

நேற்று காலையில் இந்த ரேஷன்கார்டை கடை ஊழியர் சரோஜாவிடம் வழங்கும் போதே இந்த தவறை குறிப்பிட்டு திருத்தம் செய்து தருவதாக தான் கொடுத்துள்ளார். இருப்பினும் இதை பார்த்த சரோஜா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக வட்ட வழங்கல் துறையினரிடம் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த ஸ்மார்ட் ரேஷன்கார்டு வாட்ஸ்-அப்பிலும் வலம் வர தொடங்கி உள்ளது.

இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்குதல் குறித்த ஆய்வு



அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குதல் குறித்த ஆய்வு கூட்டம் கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் ஜவகர் தலைமையில் நடந்தது.

செப்டம்பர் 13, 2017, 05:00 AM

காஞ்சீபுரம்,

அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்குதல் குறித்த ஆய்வு கூட்டம் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளரும், ஆணையருமான ஜவகர் பேசியதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 31 ஆயிரத்து 219 அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள் விரைவில் கணினி மயமாக்கப்படும். இதர மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனித வள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.288 கோடியே 91 லட்சம் நிதி ஒப்புதல் செய்யப்பட்டுள்ளது. அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள், மென்பொருள் உருவாக்கும் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இதனால் தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, கூடுதல் இயக்குனர் (நிர்வாகம்) சித்ரா ஜானர் பெர்னான்டோ, கூடுதல் இயக்குனர் (மின் ஆளுகை) ஏ.பி.மகாபாரதி, சென்னை மண்டல கரூவூலம் மற்றும் கணக்குத்துறை இணை இயக்குனர் திருஞானசம்பந்தம், காஞ்சீபுரம் மாவட்ட கருவூலம் இணை இயக்குனர் காத்தவராயன், நேர்முக உதவியாளர் (கருவூல கட்டுபாடு) புவியரசு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தலையங்கம்

‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள்



‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

செப்டம்பர் 13 2017, 03:00 AM

‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. பிளஸ்–2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தும், ‘நீட்’ தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே பெறமுடிந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். தமிழகமே கண்ணீர் வடிக்கிறது.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குபெற முயற்சி செய்கிறோம், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்று வீண் நம்பிக்கையை மாணவர்களிடம் வளர்க்காமல், இனி ‘நீட்’ தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற நோக்கில் ஒருவழியாக தமிழக அரசு அதற்குரிய நடவடிக்கையை தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில், மொத்தம் உள்ள 3,534 இடங்களில், மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்த 2,314 மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தின்கீழ் படித்த 1,220 மாணவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களுக்குத்தான் அதிக இடங்கள் கிடைத்துள்ளது என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளமுடியாது. ஏனெனில், இதில் 43 சதவீத மாணவர்கள் அதாவது, 1,004 மாணவர்கள் ஒரு ஆண்டுக்கோ அல்லது 2 ஆண்டுகளுக்கு முன்போ படித்த பழைய மாணவர்கள். இதில் பெரும்பாலானோர் ‘நீட்’ தேர்வுக்காக பயிற்சி மையங்களில் படித்து தங்களை தயார்படுத்திக்கொண்டவர்கள். அனைத்து மாணவர்களுக்கும் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கவேண்டியது அவசர அவசியமாகிவிட்டது. இதை புரிந்துகொண்ட காரணத்தினால் தமிழக அரசு, மாணவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 412 ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்க முடிவுசெய்துள்ளது என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதுமட்டுமல்லாமல், பள்ளிக்கூடங்களிலும் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கல்வித்தரம் உயர்த்தப்படும். இனிமேலும் அனிதா உயிரிழப்பு போன்ற சம்பவம் ஏற்படாதவகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

வார இறுதி நாட்களில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து திறமைமிக்க ஆசிரியர்கள் மூலம் ‘நீட்’ தேர்வுக்கு நமது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த பயிற்சியை மாணவர்களுக்கு செல்போனில் உள்ள ‘ஸ்கைப்’ மூலமாக பெற்றுக்கொள்வதற்கும் வகைசெய்யப்படும். ‘நீட்’ தேர்வுக்கு 54 ஆயிரம் கேள்விகள், விடைகள் அடங்கிய குறிப்பேடுகளை அதற்குரிய வரைபடத்துடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாணவர்களுக்கு வழங்குவதற்கும் அரசு ஏற்பாடு செய்யும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த தேர்வு வந்தாலும், அதை ஜெயித்துக்காட்டுகிற வல்லமை தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உள்ளது என்ற சரித்திரம் படைக்கப்படும் என்ற உறுதியையும் அளித்துள்ளார். நிச்சயமாக இந்த அறிவிப்புகள் எல்லாம் வரவேற்கத்தக்கது. நமது மாணவர்களால் முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்காமல், நமது மாணவர்களாலும் நிச்சயமாக முடியும் என்ற நிலையை உருவாக்குவதுதான் சிறந்ததாகும். ஆனால், இதை வெறும் அறிவிப்பு அளவில் நிறுத்திவிடாமல், இந்த கல்வி ஆண்டு தொடங்கும் இந்த நேரத்திலேயே அடுத்த ஒரு மாதங்களுக்குள்ளேயே தொடங்கினால்தான், வரும் ஆண்டு மாணவர்களால் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளமுடியும். இப்போது உருவாக்கப்படும் பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக அல்ல, சி.பி.எஸ்.இ.க்கு மேல் உள்ள தரத்தில் தயாரிக்கப்படவேண்டும். இதை கற்றுக்கொடுக்கும் அளவில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கவேண்டும். மொத்தத்தில், எங்கள் மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எழுதி எளிதில் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதத்தில் பயிற்சியும், பாடத்திட்டமும் இருக்கவேண்டும்.

Tuesday, September 12, 2017

CBSE TEACHERS


Colleges told not to take blank cheques

Fee panel says it has received complaints from students

The R. Rajendra Babu Fee Regulatory Committee has directed the principals of medical colleges not to collect blank cheques from students or their parents while admitting students to the MBBS course.
Further, the colleges are authorised to ask for a bank guarantee only for the first year as directed by the Supreme Court and the High Court of Kerala.
Order promises action
The order is consequent to the committee receiving complaints from the students admitted to the MBBS course and their parents that some colleges were insisting on getting a blank cheque and a bank guarantee for the second and third year also.
“Any demand for excess tuition fee, collection of blank cheques, and demand of bank guarantee for future years’ tuition fee i.e. for the second year onwards will be construed as collection of capitation as per Section 8(3) of Ordinance 13 of 2017 and action will be initiated against the erring medical colleges under Section 8(4) of the aforesaid Ordinance,” the committee’s order reads.
Mr. Babu told The Hindu here on Monday that he had received both written and oral complaints from students and parents. Both were treated with equal seriousness. Many students who called the committee said they did not want to give a complaint under their name as they feared retribution from the college managements. There were at least 15 written complaints against the colleges.
Case of capitation fee
“The complaints were about two or three colleges. I did not want the colleges to be able to identify the complainants. That is why I issued a general order. I have made it clear that any such action will be defined as capitation fee,” he said.
A couple of colleges had demanded, in addition to the blank cheque, bank guarantee for the full five years of the MBBS course, he added.
A couple of colleges had demanded bank guarantee for the full five years of the MBBS course
R. Rajendra Babu

Medical student’s career in jeopardy

BMCRI told to lodge police complaint for submission of fake disability certificate



A medical student, who was supposed to graduate in 2017-18. is now in trouble for submitting a fake disability certificate to obtain the seat.
The Medical Education Department has asked Bangalore Medical College and Research Institute (BMCRI) to lodge a police complaint against her and her father, who is a doctor at BMCRI.
The girl had obtained a medical seat under the government quota in 2012-2013 through counselling conducted by the Karnataka Examinations Authority (KEA).
A investigation by KEA revealed that Mahesh Babu, an ENT specialist at BMCRI, helped his daughter obtain a seat under the physically disabled quota. The girl had been examined by a panel of three doctors, which included her father.
“The KEA had received complaint in 2014 and cancelled the seat in April 2017 after an investigation. Based on this, we have ordered action and will also probe this internally to decide what action should be initiated against Dr. Babu after serving a show-cause notice,” an official said.
Dr. Babu said he had not received a show-cause notice and refused to discuss the matter.

Medical seat scam: Search for other cases

Gang was arrested in Mangaluru on the charge of cheating aspirants

The Mangaluru police are trying to find out whether a gang of 10 persons, who were arrested on Saturday on the charge of cheating the parents of two MBBS seat aspirants of Rs. 10.8 lakh, have cheated others in the State.
The Mangaluru East Police had arrested them on the charge of cheating residents of Delhi and Rajasthan by promising them MBBS seats in the A.J. Institute of Medical Sciences and Research Centre by posing as employees of the medical college.
The incident came to light after the parents, Kamalsingh Rajpurohit from Delhi and Mahendar from Rajasthan, filed a complaint with the city police on Saturday.
The police said that no other complaints have been filed in the city so far. But, the police from a central Karnataka district have contacted them to ascertain whether the gang has any link with a case of cheating reported there. The police refused to divulge more information. “We are looking for other persons associated with this group,” Police Commissioner T.R. Suresh told The Hindu .
On September 5, one of the arrested reportedly sent messages to MBBS aspirants for seats in the A.J. Institute of Medical Sciences and Research Centre and in Kanachur Medical College.
Posing as staff member of A.J. Institute, the accused allegedly took a demand draft of Rs. 5.4 lakh each from Mr. Rajpurohit and Mr. Mahendar. The Mangaluru East Police arrested the 10 persons on Saturday and seized the two demand drafts, 20 mobile phones, and two laptops from them.
They had promised MBBS seats in A.J. Institute of Medical Sciences and Research Centre by posing as employees of the medical college.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...