Monday, March 26, 2018

ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை தொடக்கம்

2018-03-25@ 15:53:55

பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்திலிருந்து பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு முதன் முறையாக இடையில் நில்லாத நேரடி விமானம் இயக்கப்பட்டுள்ளது. குவான்டஸ் நிறுவனத்தின் போயும் 787 வகை விமானம் ஆஸ்திரேலியாவின் பெர்த் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள் மற்றும் விமானிகளுடன் நேற்று மாலை புறப்பட்டது. இந்த விமானம் 17 மணி 5 நிமிட நேரத்தில் 14,875 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இன்று அதிகாலை தரம் இறங்கியது.

இந்த விமானத்தில் குவான்டஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலஸ் ஜொய்ஸ், ஆஸ்திரேலிய வணிகம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஸ்ரீவேன் ஜியோ ஆகியோரும் பயணம் செய்தனா். இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லும் விமானங்கள் வழியில் 7 விமான நிலையங்களில் நின்று செல்லும் எனபதால் 2 நாட்களுக்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 13.12.2025